search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் கட்டணம் உயர்வு"

    • மின் கட்டண உயர்வு விவகாரத்தில் யாரேனும் மேல்முறையீடு மனு செய்தால் எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம் என தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
    • தமிழக நூற் பாலைகள் சங்கங்கள் தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவானது விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து நேற்று முன்தினம் அது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில், 'மின்கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்க தடை விதிக்க வேண்டும்' என தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பில் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

    மனுவை விசாரித்த ஐகோர்ட்டு மதுரை கிளை தனி நீதிபதி அமர்வு, ''தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறையை சேர்ந்தவர் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவரை நியமிக்கும் வரை கட்டண உயர்வு செய்யக்கூடாது. அதே நேரத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தலாம்'' என உத்தரவிட்டிருந்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் சார்பில் மீண்டும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தனிநீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து, மின் கட்டண உயர்வு தொடர்பான தமிழக அரசாணை செல்லும் என பல்வேறு கோரிக்கைகள் கொண்ட உத்தரவை பிறப்பித்தது.

    இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான குமணன் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், 'தமிழக மின் கட்டண உயர்வு விவகாரத்தில் ஐகோர்ட்டு மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தால் எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டாம்' என தெரிவித்துள்ளார். இதே போல் தமிழக நூற் பாலைகள் சங்கங்கள் தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவானது விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கிடும் ஸ்மார்ட் மீட்டர் விரைவில் பொருத்தப்பட உள்ளது.
    • ஸ்மார்ட் மீட்டர் பொருத்தியதும் ஒரு முனை மின் இணைப்புக்கு மீட்டர் வைப்புத் தொகையாக கூடுதலாக ரூ.5,200 வசூலிக்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் மின்கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து மின் இணைப்பு பெறுதல் மற்றும் சேவை கட்டணங்களும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    மின்கம்பங்கள் வழியாகவும், தரைக்கு அடியில் கேபிள் வழியாகவும் மின்சப்ளை செய்யப்படும் பகுதிகளில் கட்டணங்கள் மாறுபடும்.

    வளர்ச்சி கட்டணம், பதிவு கட்டணம், இணைப்பு கட்டணம், மீட்டர் காப்பீடு கட்டணம் ஆகிய கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி புதிய கட்டண உயர்வு விபரம் வருமாறு:-

    பழைய கட்டணம் அடைப்பு குறிக்குள் குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவு கட்டணம்-ரூ.200 (ரூ.100), இணைப்பு கட்டணம்-ரூ.1000 (ரூ.500), மீட்டர் காப்பீடு-ரூ.750 (ரூ.600), வளர்ச்சி கட்டணம்-ரூ.2,800 (ரூ.1400), வைப்புத் தொகை ரூ.300 (ரூ.200), மொத்தம் ரூ.5050 (ரூ.2800) அதாவது ரூ.2 ஆயிரத்து 250 உயர்த்தப்பட்டுள்ளது.

    மும்முனை மின் இணைப்பு பெறுவதாக இருந்தால் ரூ.6600 செலுத்த வேண்டும். பழைய கட்டணம் ரூ.5,150. அதாவது ஆயிரத்து 450 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.

    பூமிக்கு அடியில் கேபிள் வழியாக மின் விநியோகம் நடைபெறும் பகுதிகளில் ஒரு முனை மின் இணைப்புக்கு பதிவுகட்டணம் ரூ.200 (ரூ.100), இணைப்பு கட்டணம் ரூ.1000 (ரூ.500), மீட்டர் காப்பீடு ரூ.750 (ரூ.600), வளர்ச்சி கட்டணம் ரூ.7000 (ரூ.5000), வைப்புத் தொகை ரூ.300 (ரூ.200), மொத்தம் ரூ.9,250 செலுத்த வேண்டும். பழைய கட்டணம் ரூ.6,400. அதாவது ரூ.2,850 உயர்த்தப்பட்டு உள்ளது.

    மும்முனை மின் இணைப்பு கட்டணம் ரூ.9,600 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. பழைய கட்டணம் ரூ.6,650 தான். அதாவது 2 ஆயிரத்து 950 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.

    ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கிடும் ஸ்மார்ட் மீட்டர் விரைவில் பொருத்தப்பட உள்ளது. அவ்வாறு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தியதும் ஒரு முனை மின் இணைப்புக்கு மீட்டர் வைப்புத் தொகையாக கூடுதலாக ரூ.5,200 வசூலிக்கப்படும்.

    மும்முனை மின் இணைப்பாக இருந்தால் ரூ.7,100 கூடுதலாக வசூலிக்கப்படும்.

    வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த மின் விநியோக பகுதியில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யும் கட்டணம் ரூ.300-ல் இருந்து ரூ.600 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

    மீட்டர் பழுதானாலோ, எரிந்து போனாலோ மீட்டரை மாற்றும் கட்டணம் ஒரு முனை மின் இணைப்புக்கு ரூ.500-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

    மும்முனை மின் இணைப்புக்கு ரூ.750-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    உயர் அழுத்தப் பிரிவில் மின் இணைப்பு பெயர் மாற்றுவதற்கான கட்டணம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    நல்ல நிலையில் இருக்கும் ஒரு முனை மின் இணைப்பு மீட்டரை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்தில் மாற்றி வைப்பதற்கான கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.1000 ஆகவும், மும்முனை இணைப்புக்கு ரூ.750-ல் இருந்து ரூ.1500 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    எரிந்தோ பழுதுபட்டோ போகும் மின் மீட்டர்களை மாற்றுவதற்கான கட்டணம் ஒருமுனை மின் இணைப்புக்கு ரூ.500-ல் இருந்து ரூ.1000 ஆகவும், மும்முனை இணைப்புக்கு ரூ.750-ல் இருந்து ரூ.1500 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    தற்காலிகமாக மின் இணைப்பை இடம் மாற்றி வைப்பதற்கான கட்டணமும் ரூ.300-ல் இருந்து ரூ.600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    மொத்தத்தில் மின் வாரியம் கையாளும் அனைத்து விதமான சேவைகளின் கட்டணமும் இருமடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுமக்களின் கருத்தை பரிசீலித்து வந்த நிலையில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • 100 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்குவது தொடரும். அதேபோல் குடிசை, கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளாக மின்சார கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தது. அதே நேரம் கடந்த 10 ஆண்டுகளில் மின்வாரியத்துக்கான கடனில் ரூ.12,647 கோடி அதிகரித்துள்ளது.

    இதையடுத்து மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணத்தை மாற்றி அமைக்கும் படி தமிழக மின்வாரியத்தை கேட்டுக்கொண்டது.

    இது தொடர்பாக பல முறை கடிதம் எழுதிய நிலையில் கடந்த ஜூலை மாதம் புதிய மின் கட்டண உயர்வு தொடர்பாக பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதாவது வீடுகளுக்கான மின்சார கட்டணம் மாதம் ரூ.27.50 முதல் ரூ.565 வரை உயர்த்தப்பட்டது.

    அதன்படி 2 மாதங்களுக்கு 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ரூ.27.50 உயர்த்தப்பட்டது. மொத்த மின் நுகர்வோரில் இந்த பிரிவினர் தான் அதிகம். 63.35 லட்சம் வீடுகளில் 200 யூனிட் வரைதான் மின் பயன்பாடு உள்ளது.

    300 யூனிட்டுகள் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ரூ.72.50, 400 யூனிட்டுகள் வரை மாதம் ரூ.147.50, 500 யூனிட்டுகள் வரை மாதம் ரூ.297.50, 600 யூனிட்டுகள் வரை ரூ.155, 700 யூனிட்டுகள் வரை ரூ.275, 800 யூனிட்டுகள் வரை ரூ.395, 900 யூனிட்டுகள் வரை ரூ.565 என்று உயர்த்தி அமைத்தனர்.

    இந்த கட்டண உயர்வு நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கும் என்று கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பொதுமக்களிடம் கருத்து கேட்க மின்வாரியம் முடிவு செய்தது. அதன்படி சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 நகரங்களில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

    பொதுமக்கள் தரப்பில் கட்டண உயர்வுக்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. ஒரேயடியாக 26 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட சதவீதத்தை 10 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் சாதாரணமாக 500 யூனிட்டுகள் வரை பயன்பாடு இருக்கும் என்பதால் மாதம் ரூ.297.50 உயர்த்தப்படுவதை பாதியாக குறைக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தனர்.

    பொதுமக்களின் கருத்தை பரிசீலித்து வந்த நிலையில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    100 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்குவது தொடரும். அதேபோல் குடிசை, கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.

    இனி 2 மாதம் 200 யூனிட்டுகள் வரை பயன்படுத்துபவர்கள் மாதம் ரூ.27.50 வீதம் 2 மாதத்துக்கு ரூ.55 கூடுதலாக செலுத்த வேண்டும்.

    300 யூனிட்டுகள் வரை பயன்படுத்துபவர்கள் மாதம் ரூ.72.50 வீதம் 2 மாதத்துக்கு ரூ.145 கூடுதலாக செலுத்த வேண்டும்.

    400 யூனிட்டுகள் வரை பயன்படுத்துபவர்கள் மாதம் ரூ.147.50 வீதம் 2 மாதத்துக்கு ரூ.295 கூடுதலாக செலுத்த வேண்டும்.

    500 யூனிட்டுகள் வரை பயன்படுத்தினால் மாதம் ரூ.297.50 வீதம் 2 மாதத்துக்கு ரூ.595 கூடுதலாக செலுத்த வேண்டும்.

    600 யூனிட்டுகள் வரை பயன்படுத்தினால் ரூ.155 வீதம் 2 மாதத்துக்கு ரூ.310 கூடுதல் செலுத்த வேண்டும்.

    700 யூனிட்டுகள் வரை பயன்படுத்தினால் மாதம் ரூ.275 வீதம் 2 மாதத்துக்கு ரூ.550 கூடுதலாக வசூலிக்கப்படும்.

    800 யூனிட்டுகள் பயன்படுத்தினால் மாதம் ரூ.395 வீதம் 2 மாதத்துக்கு ரூ.790 கூடுதல் கட்டணம் கட்ட வேண்டும்.

    900 யூனிட்டுகள் வரை பயன்படுத்தினால் மாதம் ரூ.565 வீதம் ரூ.1130 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

    100 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்குவது மற்றும் மின்மானியம் வழங்குவது ஆகியவற்றை விரும்பாதவர்கள் விட்டுக்கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த புதிய கட்டண உயர்வு அடுத்த 5 ஆண்டுகள் (2026-27) வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


    யூனிட்டுகள்வீடுகள் எண்ணிக்கை
    கூடுதல் கட்டணம் (2 மாதங்களுக்கு)
    2௦௦ வரை
    63.35 லட்சம்
    ரூ.55

    3௦௦ வரை

    36. 25 லட்சம்

    ரூ.145
    4௦௦ வரை

    18.82 லட்சம்

    ரூ.295
    5௦௦ வரை
    10.56 லட்சம்

    ரூ.595

    6௦௦ வரை
    3.14 லட்சம்

    ரூ. 310

    7௦௦ வரை
    1.96 லட்சம்

    ரூ.550

    8௦௦ வரை
    1.26 லட்சம்

    ரூ.790

    9௦௦ வரை
    84 ஆயிரம்

    ரூ.1130


    • மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள இழப்புகளால் மின் கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மின் கட்டண உயர்வு குறித்து சிறு,குறு தொழில் முனைவோர் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

    கோவை:

    கோவை ஈச்சனாரியில் நாளை நடைபெறும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்காக அங்கு அமைக்கப்பட்டு வரும் மேடை, பந்தல் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள இழப்புகளால் மின் கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வு குறித்து சிறுகுறு தொழில் முனைவோர் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

    அந்த கோரிக்கைக்கு முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் விரைவில் தகவல் வெளிவரும். மின் கட்டணத்தை குறைக்க பரிசீலனை செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாளை நடைபெறும் அரசு விழாவில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
    • தமிழக வரலாற்றில் ஒரே நிகழ்ச்சியில் இவ்வளவு பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

    கோவை:

    கோவை ஈச்சனாரியில் நாளை நடைபெறும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்காக அங்கு அமைக்கப்பட்டு வரும் மேடை, பந்தல் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாளை நடைபெறும் அரசு விழாவில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். தமிழக வரலாற்றில் ஒரே நிகழ்ச்சியில் இவ்வளவு பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

    மத்திய அரசுக்கு மின் கட்டண நிலுவை தொகை ரூ.70 கோடி செலுத்தப்பட்டு உள்ளது. மாநில அரசு கொடுக்க வேண்டிய பில் தொகை தாமதம் ஆகும்போது மத்திய அரசு தடை ஏற்படுத்துகிறது.

    ஆனால் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய தொகை பலவற்றில் நிலுவை உள்ளது. அவற்றை எல்லாம் உரிய காலத்தில் கொடுப்பதில்லை.

    மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தனிப்பட்ட அமைப்பு. அதன் அதிகாரங்களை பறிக்க கூடிய செயலில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது. இதற்காகத்தான் பாராளுமன்றத்தில் மின்சார திருத்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது.

    மின் கட்டண உயர்வு குறித்த கருத்து கேட்பு கூட்டம், கபட நாடகம் என்று கூறும் பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுவதும் கபட நாடகமா என்பதை விளக்க வேண்டும். கர்நாடகா, குஜராத் மாநிலங்களின் மின் கட்டணத்தையும், இங்குள்ள மின் கட்டணத்தையும் பார்த்து விட்டு அவர் பேச வேண்டும்.

    இவை குறித்து பலமுறை கேட்டும் அண்ணாமலை பதில் சொல்லவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனேகமாக அடுத்த மாதம் (செப்டம்பர்) மின்சார கட்டணம் உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
    • ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டதில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று மக்களிடையே நம்பிக்கை எழுந்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கோரிக்கையை ஏற்று மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்து உள்ளது.

    இதற்கு மக்கள் மத்தியில் அதிருப்தி வெளியானது. இதையடுத்து பொதுமக்களிடம் கருத்து கேட்ட பின்பு மின்கட்டண உயர்வை முடிவு செய்வதற்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தீர்மானித்தது.

    அதன்படி ஆன்லைன் மூலமாக பொதுமக்களிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் தங்களது கருத்துக்களை மின் கட்டண உயர்வு தொடர்பாக தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் பொதுமக்களிடம் நேரடியாகவும் கருத்து கேட்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    முதலில் கோவையில் பொது மக்களை சந்தித்து கருத்துக்கள் கேட்கப்பட்டது. அதன்பிறகு மதுரையில் கடந்த 18-ந் தேதி பொதுமக்களை சந்தித்து மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் கருத்துக்களை கேட்டு பெற்றனர்.

    சென்னையில் இன்று (திங்கட்கிழமை) பொதுமக்களிடம் மின் கட்டண உயர்வு பரிந்துரை தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது.

    காலை 10 மணி முதல் பொதுமக்கள் மின் கட்டண உயர்வு தொடர்பாக கருத்துக்களை தெரிவிக்க அனுமதிக்கப்பட்டனர். மின்சார வழங்குமுறை ஆணைய தலைவர் சந்திர சேகர், உறுப்பினர் வெங்கடேசன், செயலாளர் வீரமணி ஆகியோர் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டனர். நூற்றுக்கணக்கானோர் இதில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர். அவை அனைத்தும் எழுத்து பூர்வமாகவும் கொடுக்கப்பட்டது.

    மதியம் 1.30 மணி வரை பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

    உணவு இடைவேளைக்கு பிறகு இன்று பிற்பகல் 2.30 மணி முதல் மீண்டும் கூட்டம் தொடங்கியது. மாலை 5.30 மணி வரை இந்த கூட்டத்தை நடத்த ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் மின் கட்டண உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எடுத்துக் கூறி மின்கட்டணத்தை உயர்த்த எடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எத்தகைய மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டால் மின் கட்டணத்தை உயர்த்தாமல் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும் என்றும் கருத்துக்களை தெரிவித்தனர்.

    கருத்து கேட்பு கூட்டத்தில் தொழில் துறையினர் கூறுகையில்; ஏற்கனவே கொரோனா தொற்றிலிருந்து மீண்டு இப்போது தான் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டு இருக்கிறோம். இன்னும் பழைய நிலையை முழுமையாக அடையவில்லை.

    இந்த நேரத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவது மிகப்பெரிய தவறு. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். உங்கள் மனதில் இருப்பதை வைத்து மின் கட்டணத்தை உயர்த்தாதீர்கள். மக்களின் கோரிக்கைகளையும் கேளுங்கள்' என்றனர்.

    "குடியிருப்போர் சங்கத்தினர் கூறுகையில், மின்கட்டணத்தை 3 விதமாக பிரிக்க வேண்டும். ஏழைகள், நடுத்தர மக்கள், செல்வந்தர்கள் என 3 பிரிவாக அவரவர் தகுதிக்கு ஏற்ப மின் கட்டணத்தை அதிகரிக்கலாம். ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக மின் கட்டணத்தை உயர்த்தி இருந்தால் பாதிக்காது. இப்போது மொத்தமாக உயர்த்தினால் பாதிக்கும்.

    இனி மாதம்தோறும் மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். ஏழைகள், நடுத்தர மக்கள், செல்வந்தர்கள் என 3 பிரிவாக பிரித்து 15 சதவீதம் வரை மின்கட்டணத்தை உயர்த்தலாம். இல்லாவிட்டால் மின்கட்டண உயர்வு பொதுமக்களுக்கு சுமையாக மாறும்" என்றனர்.

    கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் கூறியதாவது:-

    கிராமங்களில் பாதி நேரம் மின்சாரமே இல்லை. மின் கட்டணம் உயர்த்துவதில் நகரத்தை வைத்து மட்டுமே முடிவு செய்யாதீர்கள். கிராமங்களையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். விவசாயத்துக்கு இலவச மின்சாரம் கொடுக்கிறீர்கள். அதை முழுமையாக கொடுத்தால்தான் விவசாயம் செய்ய முடியும். பல கிராமங்களில் போதிய மின் ஊழியர்கள் இல்லை. இதனால் அங்கிருக்கும் ஊழியர்கள் டிரான்ஸ்பார்மர் சாவியை எங்களிடம் கொடுத்து இயக்க சொல்கிறார்கள். இதனால் விபத்து ஏற்பட்டால் எங்கள் மீது வழக்கு போடப்படுகிறது. எனவே, கிராமங்களில் மின் ஊழியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின்தடை ஏற்பட்டால் நகரங்களில் புகார் செய்ய ஏராளமானோர் இருக்கிறார்கள். ஆனால் கிராமங்களில் இல்லை.

    இதனால் கிராமங்களிலும் முழுநேர மின்சாரம் வழங்க வேண்டும். விவசாயத்துக்கும் போதிய அளவு மின்சாரம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    கூட்டத்தில் பேசிய மின் வாரிய முன்னாள் பொறியாளர் முத்துச்சாமி, மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் ஊழல் நடந்து இருப்பதாக குற்றம் சாட்டினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கடந்த 1988 முதல் 2000-ம் ஆண்டு வரை லாபத்தில் இயங்கி வந்த மின்சார வாரியம் 2000-ம் ஆண்டுக்கு பிறகு நஷ்டத்தில் இயங்கியது.

    கடந்த வருடத்தில் 6 முறை மட்டுமே மின்கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதில் 4 முறை மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    மின்வாரியம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்ததற்கு ஒழுங்குமுறை ஆணையமே காரணம். ஆண்டு தோறும் முறையான கணக்கீடு, தணிக்கை செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவை, மதுரை, சென்னையில் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தால் ஆய்வு செய்யப்படும். பயனுள்ள கருத்துக்களை அமல்படுத்த முடியுமா என்பது பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அதன் பிறகு மின் கட்டண மாற்றம் பற்றி தீர்மானிக்கப்படும்.

    தமிழக மின் வாரியம் ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. கடன்களை தவிர்த்து விட்டு பொதுமக்களுக்கு தங்கு தடையில்லாமல் மின்சாரத்தை வழங்க கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தமான சூழ்நிலையில் தமிழக மின் வாரியம் இருக்கிறது.

    எனவே மக்கள் தெரிவித்துள்ள கருத்துக்களையும் கருத்தில் கொண்டு அவற்றின் அடிப்படையில் மின் கட்டண உயர்வுக்கான ஒப்புதலை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் மின்சார வாரியம் பரிந்துரைத்துள்ள கட்டண உயர்வுகள் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

    அனேகமாக அடுத்த மாதம் (செப்டம்பர்) மின்சார கட்டணம் உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. என்றாலும் ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டதில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று மக்களிடையே நம்பிக்கை எழுந்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக மின் வாரியம் ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது.
    • கடன்களை தவிர்த்து விட்டு பொதுமக்களுக்கு தங்கு தடையில்லாமல் மின்சாரத்தை வழங்க கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தமான சூழ்நிலையில் தமிழக மின் வாரியம் இருக்கிறது.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கோரிக்கையை ஏற்று மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்து உள்ளது.

    இதற்கு மக்கள் மத்தியில் அதிருப்தி வெளியானது. இதையடுத்து பொதுமக்களிடம் கருத்து கேட்ட பின்பு மின் கட்டண உயர்வை முடிவு செய்வதற்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தீர்மானித்தது.

    அதன்படி ஆன்லைன் மூலமாக பொதுமக்களிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் தங்களது கருத்துக்களை மின் கட்டண உயர்வு தொடர்பாக தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் பொதுமக்களிடம் நேரடியாகவும் கருத்து கேட்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    முதலில் கோவையில் பொதுமக்களை சந்தித்து கருத்துக்கள் கேட்கப்பட்டது. அதன்பிறகு மதுரையில் கடந்த 18-ந் தேதி பொதுமக்களை சந்தித்து மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் கருத்துக்களை கேட்டு பெற்றனர்.

    சென்னையில் இன்று (திங்கட்கிழமை) பொதுமக்களிடம் மின் கட்டண உயர்வு பரிந்துரை தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது.

    காலை 10 மணி முதல் பொதுமக்கள் மின் கட்டண உயர்வு தொடர்பாக கருத்துக்களை தெரிவிக்க அனுமதிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் இதில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர். அவை அனைத்தும் எழுத்து பூர்வமாகவும் கொடுக்கப்பட்டது.

    மதியம் 1.30 மணி வரை பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும்.

    உணவு இடைவேளைக்கு பிறகு இன்று பிற்பகல் 2.30 மணி முதல் மீண்டும் கூட்டம் நடக்கிறது. மாலை 5.30 மணி வரை இந்த கூட்டத்தை நடத்த ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் மின் கட்டண உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரிவித்தனர். சிலர் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எத்தகைய மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டால் மின் கட்டணத்தை உயர்த்தாமல் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும் என்றும் கருத்துக்களை தெரிவித்தனர்.

    கோவை, மதுரை, சென்னையில் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தால் ஆய்வு செய்யப்படும். பயனுள்ள கருத்துக்களை அமல்படுத்த முடியுமா என்பது பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அதன் பிறகு மின் கட்டண மாற்றம் பற்றி தீர்மானிக்கப்படும்.

    தமிழக மின் வாரியம் ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. கடன்களை தவிர்த்து விட்டு பொதுமக்களுக்கு தங்கு தடையில்லாமல் மின்சாரத்தை வழங்க கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தமான சூழ்நிலையில் தமிழக மின் வாரியம் இருக்கிறது.

    எனவே மக்கள் தெரிவித்துள்ள கருத்துக்களையும் கருத்தில் கொண்டு அவற்றின் அடிப்படையில் மின் கட்டண உயர்வுக்கான ஒப்புதலை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் மின்சார வாரியம் பரிந்துரைத்துள்ள கட்டண உயர்வுகள் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

    அனேகமாக அடுத்த மாதம் (செப்டம்பர்) மின்சார கட்டணம் உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. என்றாலும் ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டதில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று மக்களிடையே நம்பிக்கை எழுந்துள்ளது.

    • கோவையில் வருகிற 16-ந்தேதி எஸ்.என்.ஆர். கல்லூரியில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.
    • மதுரையில் தள்ளாக்குளத்தில் உள்ள லட்சுமி சுந்தரம் அரங்கில் 18-ந்தேதி கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மாற்றி அமைக்க ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதனால் மின் கட்டணம் கணிசமான அளவுக்கு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குறிப்பாக 500 யூனிட் மின்சாரத்துக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு இரட்டிப்பு செலவு ஏற்படும் அளவு மின் கட்டணம் உயர உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இதையடுத்து மின் கட்டண உயர்வு பரிந்துரை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது கருத்துக்களை ஆன்லைன் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே பொது மக்களை நேரில் அழைத்து கருத்து கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை நகரங்களில் இதற்கான கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

    கோவையில் வருகிற 16-ந்தேதி எஸ்.என்.ஆர். கல்லூரியில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. மதுரையில் தள்ளாக்குளத்தில் உள்ள லட்சுமி சுந்தரம் அரங்கில் 18-ந்தேதி கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.

    சென்னையில் 22-ந்தேதி கலைவாணர் அரங்கில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கும். பொதுமக்கள் தங்களது கருத்துக்களை அங்கு பதிவு செய்யலாம். அவர்களை அழைத்து மின் வாரியம் குறைகளை கேட்டறியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மதுரை மாவட்டத்தில் இன்று அ.தி.மு.க. சார்பில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டதால் தேனியில் நடைபெறும் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு தொண்டர்களை ஒருங்கிணைப்பதில் சிக்கல் ஏற்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    தேனி:

    தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் அ.தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மதுரையில் நேற்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டத்தில் இன்று அ.தி.மு.க. சார்பில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டதால் தேனியில் நடைபெறும் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு தொண்டர்களை ஒருங்கிணைப்பதில் சிக்கல் ஏற்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இதனால் காரணமாக தேனியில் நாளை அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில் தேனியில் மட்டும் தொண்டர்கள் ஒருங்கிணைப்பு இல்லாததால் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது.

    • சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மின் கட்டண, உயர்வு சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார்.
    • தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் 25-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் முசிறி கைக்காட்டி அருகில் நடைபெற உள்ளது.

    திருச்சி:

    திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மின் கட்டண, உயர்வு சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார்.

    திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் மணப்பாறையில் வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், மாநகர, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், ஒன்றிய ஊராட்சி கழக நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக்கூறியுள்ளார்.

    திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி விடுத்துள்ள அறிக்கையில், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் படி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் இணைப்பு கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 25-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் முசிறி கைக்காட்டி அருகில் நடைபெற உள்ளது.

    அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் திரளாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • அன்றாடம் பயன்படுத்தக் கூடிய அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.
    • மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மின் தடையின்றியும், கட்டண உயர்வின்றியும் இருந்து வந்த நிலையில் திடீரென தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி அறிவித்திருப்பதும் அடிக்கடி மின் தடை ஏற்படுவதும் ஏமாற்றமளிக்கிறது. தமிழகத்தை ஆளும் இன்றைய தி.மு.க. அரசு கடந்த 5 ஆண்டுகளில் தாங்கள் வெளியிட்டு வந்த அறிக்கையும், பொய் பிரச்சாரங்களையும் திரும்பி பார்க்க வேண்டும்.

    ஆட்சிக்கு வந்த உடன் சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, விரைவு பஸ் கட்டணம் உயர்வு, பெட்ரோல், டீசல் விலை குறையாமை, தமிழகம் முழுவதும் ரவுடிகள் அட்டகாசம், அரசு அதிகாரிகளை சுதந்திரமாக செயல்படவிடாமல் ஆளும் தி.மு.க.வினரின் அடாவடித்தனம், திராவிட மாடல் என்ற போர்வையில் மக்கள் விரோத ஆட்சி செய்துவரும் இன்றைய அரசின் நடவடிக்கைகள் ஏற்புடையதல்ல.

    இந்த அதிரடியான மின் கட்டண உயர்வால் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள். அன்றாடம் பயன்படுத்தக் கூடிய அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, 23ம் தேதி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
    • நஷ்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் வெளியில் இருந்து மின்சாரத்தை வாங்குவது சரியா?.

    தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பது தொடர்பாக சேலத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

    மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு வலியுறுத்தவில்லை. மத்திய அரசு கொடுப்பது மானியம். தேவை எனில் பெற்றுகொள்ளலாம். மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசை குறை கூற வேண்டாம்.

    தமிழக அரசு, மின் செயற்கை தட்டுபாட்டை ஏற்படுத்தி, வெளி மார்க்கெட்டில் இருந்து, அதிக பணம் கொடுத்து மின்சாரத்தை வாங்குகிறார்கள். நஷ்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் வெளியில் இருந்து மின்சாரத்தை வாங்குவது சரியா?.

    மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி,வரும் 23ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×