search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இசை விழா"

    • மணச்சநல்லூர் ஸ்ரீ சவுந்தர்ராஜ பெருமாள் கோவில்
    • புரட்டாசி சிறப்பு இசை விழா


    திருச்சி, 


    திருச்சி சரஸ்வதி வித்யாலயம் மற்றும் ஸ்ரீ ரங்கா நுண்கலை மையம் இணைந்து நடத்திய நாத ஸூதா ரஸம் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு இசை நிகழ்ச்சி திருச்சி மணச்சநல்லூர் வட்டம் அழகிய மணவாளன் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சவுந்தர்ராஜ பெருமாள் கோவில் பஜனை மடத்தில் நடைபெற்றது.


    இதில் ரமா நாராயணன் சிஷ்யை அனன்யா கணீர் குரலில் பாட வயலின் வித்வான் வேங்கட சுப்ரமணியன், மிருதங்க வித்வான் கம்பரசம்பேட்டை சுவாமிநாதன் ஆகியோர் இசை விருந்து அளித்தனர். இந்த புரட்டாசி சிறப்பு இசை நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் வெகு நேரம் அமர்ந்து இளம் கலைஞர்களின் இசையை மெய் மறந்து ரசித்தனர். இசை விழா நிறைவு பெற்ற பின்னரே பக்தர்கள் கலைந்து சென்றனர்.


    இந்த தகவலை ஸ்ரீரங்கம் நகர நலச் சங்க மக்கள் செய்தி தொடர்பாளர் ரொட்டேரியன் கே. சீனிவாசன் தெரிவித்தார்.




    • ஆடி வெள்ளி இசை விழா நிகழ்ச்சி நடைறெ உள்ளது.
    • ஸ்ரீரங்கத்தில் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் நகர நலச்சங்கம் சார்பில் ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதி ஸ்ரீ முளுபாகல் மடம் ஸ்ரீ ஸ்ரீ விக்ஞான நிதி சபா மந்திர் கல்யாண மண்டபத்தில் வருகிற 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நாத ஸூதா ரஸம் சங்கீத ஆராதனை ஆடி வெள்ளி இசை விழா நடைபெறுகிறது.

    இது தொடர்பாக அறிவாளர் பேரவை மற்றும் ஸ்ரீரங்கம் நகர நலச் சங்க மக்கள் செய்தி தொடர்பாளர் ரோட்டேரியன் கே.சீனிவாசன் கூறியதாவது:-

    ஆடி வெள்ளியில் நடைபெற இருக்கும் இந்த இசை விழா வெகு விமரிசையாக நடைபெற இருக்கின்றது.இதில் பத்மஸ்ரீ சங்கீத கலாநிதி டாக்டர் ஷேக் சின்ன மௌலானாவின் சிஷ்யர்கள் நாதஸ்வர வித்வான்கள் பத்மஸ்ரீ கலைமாமணி ராஜரத்னா ஷேக் மெகபூப் சுபானி, பத்மஸ்ரீ கலைமாமணி ராஜரத்னா காலிஷாபீ மெகபூப்,எஸ். பெரோஸ் பாபு மற்றும் தவில் வித்வான்கள் ஸ்ரீரங்கம் பி.எம்.சங்கர், ஸ்ரீரங்கம் வி.ஜி. முருகன் குழுவினர் பங்கேற்கின்றார்கள்.

    மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த இசை விழா இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை திருவாரூர் குஞ்சிதபாதம், நெய்வேலி நாகசுப்பிரமணியன், சேதுராமன், சுரேஷ் வெங்கடாசலம் ஆகியோர் ஒருங்கிணைக்க உள்ளனர். விழாவில் பக்த கோடிகள், இசை பிரியர்கள் பங்கேற்று ஆனந்தம் பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×