search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏத்தர் 450X Gen 3"

    • ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புது 450X மாடல் வினியோகம் விரைவில் துவங்க இருக்கிறது.
    • முந்தைய தலைமுறை 450X மாடலின் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் மேம்பட்ட மூன்றாம் தலைமுறை 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஏத்தர் 450X Gen 3 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 56 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 5 ஆயிரம் வரை விலை அதிகம் ஆகும்.

    புது மாடல் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து ஏத்தர் 450X Gen 2 மாடலின் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. மேலும் Gen 2 மாடலுக்கு மாற்றாக Gen 3 விற்பனையகம் வர உள்ளன. புதிய ஏத்தர் 450X Gen 3 வினியோகம் ஜூலை 20 ஆம் தேதி தொடங்குகிறது. ஏத்தர் 450X Gen 3 மாடலில் 3.7 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய Gen 2 மாடலில் 2.9 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


    ஏத்தர் 450X Gen 3 மாடல் முழு சார்ஜ் செய்தால் 146 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்று இருக்கிறது. எனினும், நிஜ பயன்பாட்டில் இந்த மாடல் 105 கி.மீ. வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இத்துடன் புது மாடலில் இருமடங்கு பெரிய ரியர் வியூ மிரர்கள், எம்.ஆர்.எப். மற்றும் ஏத்தர் இணைந்து உருவாக்கிய புது டையர்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்த ஸ்கூட்டரில் உள்ள புது இண்டர்ஃபேஸ் 2 ஜிபி ரேம் கொண்டுள்ளது. முந்தைய மாடலில் 1 ஜிபி ரேம் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய மாடலில் உள்ள அதிக ரேம் காரணமாக டேஷ்போர்டின் கம்ப்யுடிங் வேகம் அதிகமாக இருக்கும். இந்த மாடலில் பல்வேறு புது அம்சங்கள் எதிர்காலத்தில் வழங்குவதற்கு ஏற்ப உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இவை தவிர ஏத்தர் 450X Gen 3 மாடலின் டிசைன் மற்றும் சேசிஸ் உள்ளிட்டவைகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மாடல் இப்போதும் வைட், ஸ்பேஸ் கிரே மற்றும் மிண்ட் கிரீன் என மூன்று வித நிறங்களில் தான் கிடைக்கிறது. 

    ×