search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடல் பூங்கா"

    • ராமநாதபுரத்தில் அமைய இருந்த கடல் பூங்கா திட்டத்தை தொழிற்பேட்டையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயத்திற்குஅடுத்து பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் கடல் சார்ந்த தொழில் நிறுவனங்கள் தொடங்கும் வகையில், ரூ.22 கோடியில் 50 ஏக்கரில் கடல் பூங்கா அமைக்கும் பணி நடந்தது.

    வலை தயாரித்தல், மீன்பிடித்தல், பதப்ப டுத்துதலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தொழில் தொடங்க முன் வரவில்லை. இதனையடுத்து பொது தொழிற்பேட்டையாக மாற்ற 'சிட்கோ' திட்டமிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயத்திற்குஅடுத்து பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் உள்ளது. இங்கு பிடிக்கப்படும் மீன்கள் அதிகளவில் வெளிநாடு, மாநிலங்களுக்கு செல்கிறது. ஆனால் மீன்களை பதப்படுத்தும், சுத்தப்படுத்தி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் ராமநாதபுரத்தில் இல்லை. அவை தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள தனியார் தொழிற்சா லைகளில் பத ப்படுத்தி வெளி யூர்களுக்கு அனுப்புகின்றனர்.

    ராமநாதபுரம் சிறுதொழில் வளர்ச்சி கழகம் சார்பில் தூத்துக்குடி போல் கடல் உணவு நிறு வனங்கள் கொண்டு வருவதற்காக ஜப்பான் பன்னோக்கு கூட்டுறவு முகவை உதவியுடன் சக்கரக்கோட்டை ஊராட்சி கிழக்கு கடற்கரை சாலையில் 100 ஏக்கரில் ரூ.22 கோடியில் கடல் பூங்கா அமைக்க திட்டமிட்டு 2019-ம் ஆண்டு முதற்கட்டமாக 50 ஏக்கரில் பணிகள் தொடங்கின.

    தொழில் மனை வளாகங்கள், மீன்பிடி தொழில் தொடர்பான கட்டமைப்புகள், தண்ணீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டிடங்கள் ஏற்படுத்தப்பட்டது. இந்தப்பகுதியில் போதுமான தண்ணீர், அடிப்படை வசதியில்லாத காரணத்தினால் எதிர்பார்த்த அளவிற்கு வலைதயாரித்தல், மீன்பிடி, பதப்படுத்துதல் தொழில் நிறுவனங்கள் தொடங்க யாரும் முன்வரவில்லை. இதனால் கடல்பூங்காவை தொழிற்பேட்டையாக மாற்ற சிட்கோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்கு உரிய கட்டமைப்பு ஏற்படுத்த உள்ளனர்.

    இந்த தொழிற்பேட்டை யில் பெரிய நிறுவனங்கள் பல கோடி முதலீடு செய்யவும், இதன் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்று சிட்கோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×