என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருத்து கேட்பு கூட்டம்"

    • நீதிபதி முருகேசன் தலைமையில் உயர்மட்ட குழு தமிழக அரசால் அமைக்கப்பட் டுள்ளது.
    • பரிசீலனைகள் செய்து, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.

    கிருஷ்ணகிரி,

    தமிழ்நாட்டில் மாநிலத்திற்கு என தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை வகுப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் உயர்மட்ட குழு தமிழக அரசால் அமைக்கப்பட் டுள்ளது.

    அந்த குழுவிற்கு கருத்துக்களை அனுப்பும் பொருட்டு, கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். இதில், மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன துணை முதல்வர் மோகன், ஓய்வுபெற்ற கல்வி அலுவலர்கள், தனியார் பள்ளிகளின் உரிமையாளர்கள், தாளாளர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், முன்னாள், இன்னாள் மாணவர்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் என ஊத்தங்கரை, மத்தூர், பர்கூர், காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, வேப்பன பள்ளி, சூளகிரி, ஓசூர், கெலமங்கலம், தளி ஆகிய 10 ஒன்றியங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்களிடம் 9 கேள்விகள் கொண்ட மனுக்கள் வழங்கப்பட்டு, அதில் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுக்க அறிவு றுத்தப்பட்டது. அதன்படி, அவர்கள் அந்த பகுதியில் புதிய கல்வி கொள்கையை செயல்படுத்த, தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது போன்ற மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் மனுக்களை பூர்த்தி செய்து அளித்தனர். அவர்களிடம் பெறப்பட்ட மனுக்கள் சேலத்தில் நடைபெறவுள்ள ஆணை கூட்டத்தில் கொண்டு சேர்த்து, அதன் மீது விவாதங்கள் மற்றும் பரிசீலனைகள் செய்து, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.

    • சங்கரன்கோவில் -தென்காசி சாலை இணைப்பு குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
    • விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் விவசாய நிலத்திற்கு 3 மடங்கு விலை நிர்ணயம் செய்து தர வேண்டும்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சங்கரன் கோவில் சாலையில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் இருந்து புதியாதிகுளம் வழியாக தென்காசி சாலையுடன் இணைப்பு சாலை அமைப்பது குறித்து 2 கி.மீ தூரத்திற்கு நிலத்தை கையகப்படுத்துதல் சம்பந்தமாக விவசாயி களிடம் கருத்து கேட்பு கூட்டம் ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

    வட்டாட்சியர் சீனிவாசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் திருச்சி மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் ஜானகி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.

    தமிழக விவசாயிகள் சங்க விருதுநகர் மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா, முன்னோடி விவசாயி தர்மலிங்க ராஜா உள்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கருத்துக்களை தெரிவித்தனர். விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் விவசாய நிலத்திற்கு 3 மடங்கு விலை நிர்ணயம் செய்து தர வேண்டும்.

    ஏற்கனவே ஆய்வு செய்த தீர்ப்பை நிறுத்தி வைத்து மறு ஆய்வு செய்ய வேண்டும். கையகப்படுத்திய நிலம் தவிர இதர பாசன விவசாயிகளுக்கு பாசனம் மற்றும் இதர வழிமுறைகள் குறித்து விவசாயிகள் விளக்கி கூறினர்.

    இதில் திருநெல்வேலி நிலம் கையகப்படுத்துதல் குறித்த உதவி பொறியாளர் பொன் முரளி, விருதுநகர் சிறப்பு தாசில்தார் நிலம் கையகப்படுத்துதல் மாரீஸ்வரன் உள்பட அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.

    • வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
    • மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாநில கல்வி கொள்கை உயர்மட்ட குழு மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டத்திற்கு டெல்லி முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமை தாங்கினார். கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாநில திட்டக்குழு உறுப்பினர் பேராசிரியர் சீனிவாசன், சென்னை யூனிசெப் நிறுவனத்தின் முன்னாள் கல்வி ஆலோசகர் அருணா ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் பேசியதாவது:-மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பாடத்திட்டம் அமைப்பது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் முன் மாதிரியாக தமிழகத்தில் கல்விக்கான தனி குழு அமைத்துள்ளனர். வேறு எங்கும் அமைக்கப்பட வில்லை.

    மாநிலம் முழுவதும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இதுவரை 6 மண்டலங்களில் கருத்து கேட்கப்பட்டுள்ளது. 7-வது வேலூரில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. நாளை சென்னையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. மற்ற இடங்களில் கூட்டத்தின் போதே மாணவர்கள் முன் வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த கூட்டத்தில் பின்னால் அமர வைக்கப்பட்டுள்ளனர். இந்த கூட்டத்தின் நோக்கமே மாணவர்களின் கருத்துக்களை பெறுவது தான். எனவே மாணவர்கள் முன்னால் வரிசையில் அமர்ந்து தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

    கருத்துக்களை தெரிவிக்கும் போது மாணவர்கள் அச்சம், தயக்கமின்றி பேசலாம்.தங்க.ள் கருத்துக்களை தாராளமாக தெரிவிக்கலாம் அதுதான் கூட்டத்தின் முக்கிய எதிர்பார்ப்பாகும்.

    இவர் அவர் பேசினார். கூட்டத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் கல்வியா ளர்கள் மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • குவாரி அமைப்பது தொடா்பாக கருத்துகேட்பு கூட்டம் சில மாதங்களுக்கு முன்பாக நடைபெறவிருந்த நிலையில், நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.
    • ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டிசம்பா் 16ந் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    மடத்துக்குளம் அருகே உள்ள மைவாடி கிராமத்தில் கல்குவாரி அமைப்பது தொடா்பாக கருத்துகேட்பு கூட்டம் டிசம்பா் 16 -ந் தேதி நடைபெறுகிறது.

    இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

    திருப்பூா் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் மைவாடி கிராமத்தில் சாதாரண கற்கள் மற்றும் குவாரி அமைப்பது தொடா்பாக பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபெறவிருந்த நிலையில், நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், குவாரி அமைப்பது தொடா்பாக பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டிசம்பா் 16ந் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குவாரியால் ஏற்படும் பாதிப்பு குறித்து மக்களால் எவ்வாறு புரிந்துகொண்டு, கருத்து தெரிவிக்க முடியும்.
    • அறிக்கைகளை தமிழில் தயாரித்த பின்னரே கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளத்தில் குவாரிகள் அமைக்க ஜனவரி 6ந்தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது.இது குறித்து பல்லடத்தில் உள்ள திருப்பூா் மாவட்ட ( தெற்கு) மாசுக் கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் துறை செயற்பொறியாளா் சுவாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் மைவாடி கிராமம் க.ச.எண் 688, 689, 657 ஆகிய இடங்களில் சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குழுமம் சாா்பில் 10.98 ஹெக்டோ் பரப்பளவில் கற்கள் மற்றும் கிராவல் குவாரிகள் அமைக்க மடத்துக்குளம் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஜனவரி 6ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் உண்மை விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளதால் கல்குவாரி குறித்த கருத்துகேட்பு கூட்டத்தை ரத்து செய்யவேண்டும் என நேர்மை மக்கள் இயக்கம் திருப்பூர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மடத்துக்குளம் தாலுகா, மைவாடி கிராமத்தில் தனியார் கல்குவாரி குறித்த கருத்து கேட்பு கூட்டத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தமிழில் இல்லை. 176 பக்க அறிக்கை ஆங்கிலத்தில் உள்ளதால், குவாரியால் ஏற்படும் பாதிப்பு குறித்து மக்களால் எவ்வாறு புரிந்துகொண்டு, கருத்து தெரிவிக்க முடியும்.

    கல்குவாரிகளால் என்னென்ன சுற்றுச்சூழல் பாதிப்பு இருக்கும். அதை எவ்வாறு சரி செய்வார்கள் என்கிற அறிக்கை தாய்மொழியில் இருந்தால்தான் மக்கள், அதனை புரிந்துகொண்டு தங்கள் கருத்து தெரிவிக்க முடியும்.

    சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தமிழில் இல்லாததாலும், உண்மை விவரங்கள் மறைக்கப்படுவதாலும் கல்குவாரி அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்யவேண்டும். அறிக்கைகளை தமிழில் தயாரித்த பின்னரே கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • நான்கு வழிச் சாலைப்பணிக்கு கூடுதல் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்றது.
    • தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஜானகி அம்மாள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நில உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

    ஆலங்குளம்:

    நெல்லை- செங்கோட்டை- கொல்லம் நான்கு வழிச் சாலைப் பணிக்கு கூடுதல் நிலம் கையகப் படுத்துதல் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்றது.

    நான்குவழிச்சாலைப் பணிகள் தொடங்கி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்கள் கையகப் படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு நிவாரணமும் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பணிக்கு கூடுதல் இடங்கள் தேவைப் படுவதால் அவற்றை வைத்திருக்கும் உரிமையாளர்களிடம் ஆட்சேபனைகள் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.

    தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஜானகி அம்மாள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சாலை மேம்பாட்டுத் திட்டம் பகுதி 2, திருச்சி நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் இருந்து நிலம் வைத்திருக்கும் அழைப்பானை கொடுக்பட்ட உரிமை யாளர்கள் பங்கேற்றனர்.

    இதில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர் சாலை விரிவாக்கப்பணிகளுக்காக நிலம் கையகம் செய்வதற்கு ஆட்சேபனை இல்லை என கடிதம் அளித்தனர்.

    • பவானி நகராட்சி அலுவலக வளாகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
    • அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    பவானி:

    பவானி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள நகர்மன்ற கூட்ட அரங்கத்தில் பவானி தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் கட்டுவதற்கான கருத்து கேட்டு கூட்டம் நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமையிலும், ஆணையாளர் (பொறுப்பு) கதிர்வேல், துணைத்தலைவர் மணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் பவானி தினசரி காய்கறி மார்க்கெட் சங்க தலைவர் மாதேஸ்வரன், தி.மு.க. நகர செயலாளர் நாகராசன், அ.தி.மு.க. நகர செயலாளர் சீனிவாசன்,

    கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாநில நிர்வாகி துரைராஜா, பா.ஜ.க. நகர தலைவர் நந்தகுமார், பா.ம.க. நகர செயலாளர் தினேஷ் குமார் நாயகர்,

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் வக்கீல் பாலமுருகன், நாம் தமிழர் கட்சி நிர்வாகி முருகேசன், பவானி நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

    பவானி நகராட்சிக்கு உட்பட்ட தினசரி காய்கறி மார்க்கெட் காவேரி ஆற்றங்கரை மற்றும் பொது மயானம் அருகில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

    சுமார் 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கொண்ட இந்த தினசரி காய்கறி மார்க்கெட் செல்லும் வகையில் 3 வழித்தடம் இருந்தும் சரக்கு வாகனங்கள் உள்ளே சென்று வர போதிய வசதி இல்லை.

    இதனால் ஓசூரில் இருந்து காய்கறிகள் கொண்டு வர பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது. காலை 8 மணிக்கு மேல் பொதுமக்கள் யாரும் மார்க்கெட் பக்கம் வருவதே இல்லை. வெறிச்சோடியே காணப்படுகிறது. இதனால் வியாபாரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

    ஆகவே பவானி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிய காய்கறி மார்க்கெட் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினசரி காய்கறி மார்க்கெட் சங்க தலைவர் மற்றும் வியாபாரிகள் உள்பட பவானி நகர பல்வேறு கட்சி நிர்வாகிகள் பலரும் விருப்பம் தெரிவித்தனர்.

    இந்த கூட்டத்தின் போது ஒரு சிலர் காய்கறி மார்க்கெட் இருக்கும் இடத்திலேயே புதிதாக புனரமைப்பு செய்து நடத்திட வேண்டும் எனவும், புதிய பஸ் நிலையம் அருகில் கொண்டு செல்லக்கூடாது எனவும் வலியுறுத்தி பேசினர்.

    அப்போது சிறிது நேரம் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் பலரின் கருத்தும் பவானி புதிய பஸ் நிலையம் அருகில் காய்கறி மார்க்கெட் கொண்டு செல்லவே வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள னர்.

    இது குறித்து நகர் மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோ வன் கூறுகையில்,

    சட்டசபை மானிய கோரிக்கையின் போது நகராட்சி பகுதிகளில் காய்கறி மார்க்கெட் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

    பவானி நகராட்சி பகுதியில் தினசரி மார்க்கெட் கட்ட ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது. பவானி நகராட்சி பகுதியில் உள்ள பழைய காய்கறி மார்க்கெ ட்டை புதிப்பிப்பதா? அல்லது புதிதாக கட்டப்பட வேண்டுமா? என தாங்கள் கருத்துக்களை கூற இந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று உள்ளது.

    இங்கு விவாதிக்கப்பட்ட விவாத ங்கள் குறித்து உயர் அதிகாரி களுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க ப்படும் என தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் பவானி புதிய பஸ் நிலையம் அருகில் தினசரி காய்கறி மார்க்கெட் கொண்டு வந்தால் நகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும்.

    மேலும் போக்குவரத்து வசதியால் மார்க்கெட் வந்து செல்ல வசதியாக இருக்கும். அதே போல் பழைய இடத்தில் உழவர் சந்தை ஒன்று கொண்டு வந்தால் விவசாயிகள் பயனடை வார்கள் என்றும் விவாதிக்கப்பட்டது.

    அப்போது ஒரு சிலர் இருக்கும் இடத்தில் புதுப்பிக்கப்பட வேண்டும் எனவும், மாற்ற கூடாது எனவும் பேசியதால் கூட்ட த்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

    முடிவில் ஆணையாளர் பொறுப்பு கதிர்வேல் கூறுகையில், கூட்டம் குறித்து அரசு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    பவானி நகரத்தின் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், அமைப்பினர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு 3 மணி நேரத்திற்கு மேலாக பேசியும் எந்த விதமான இறுதி முடிவும் எடுக்க முடியாமல் போனது குறிப்பிடதக்கது ஆகும்.

    • விவசாயிகளுடனான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.
    • பழைய கட்டுமான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் விரிவாக்குதல்,

    புதுப்பித்தல், பழுதுநீக்குதல் மற்றும் நவீனப்படுத்துதல் தொடர்பாக விவசாயிகளுடனான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அமை ச்சர் முத்துசாமி செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

    கீழ்பவானி திட்ட பிரதானகால்வாயில் விரிவாக்குதல், புதுப்பித்தல், பழுதுநீக்குதல் மற்றும் நவீனப்படுத்துதல் தொட ர்பாக விவசாயி பெருங்குடி மக்களுடனான கருத்துக்கேட்பு கூட்டம் நடை பெற்றது.

    இக்கூட்டத்தில் விவசாயிகள் அவர்களுக்கு உள்ள கருத்துக்களை தெரி வித்துள்ளனர். அவர்களை பொறுத்தவரை பழைய கட்டுமான பணி களை தொட ங்குவதிலே எங்களு க்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்தி ருக்கிறார்கள்

    நீர்வளத்துறையின் சார்பாக பழைய கட்டுமான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் வாய்க்கால்களின் கதவனை களின் (சட்டர்) பழுதுகளை நீர்வளத்துறை அலுவலர்கள் முறையாக ஆய்வு மேற்கொண்டு பழுதுகளை நீக்க வேண்டுமெனவும்,

    அவற்றில் எந்த பணிக்கு முக்கியத்துவம் உள்ளதோ அதனை உடனடியாக மேற்கொள்ள அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் விவசாயிகள் பல்வேறு கோரிக்கை களையும் வழங்கியுள்ளனர். அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் புலம்பெயர் தமிழர் நலவாரியம் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, உதவி கலெக்டர் (பயிற்சி) பொன்மணி , நீர்வளத்துறை தலைமை பொறியாளர் (கோவைமண்டலம்) முத்துசாமி,

    கண்காணிப்பு பொறியாளர் (பவானி வடி நிலகோட்டம்) கவுதமன், கீழ்பவானி வடி நிலகோட்ட செயற்பொறியாளர் கண்ணன், உதவிசெயற் பொறியாளர்கள்,

    உதவி பொறியாளர்கள், விவசா யிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட தொடர்புடைய துறை அலு வலர்கள் கலந்து கொண்ட னர்.

    • கல் குவாரிகள் அமைந்துள்ள பகுதியில் ஓடை மற்றும் குடியிருப்புகள் உள்ளன.
    • கல் குவாரிகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல.

    திருப்பூர் :

    பல்லடம் கோடங்கிப்பாளையத்தில் 4 புதிய கல் குவாரிகள் மற்றும் ஏற்கனவே உள்ள 16 பழைய கல் குவாரிகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் திருப்பூர் கலெக்–டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். மாசுகட்–டுப்–பாட்டு வாரிய தெற்கு பொறியாளர் சாமிநாதன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் பங்கேற்ற ஒருதரப்பினர், 'கல் குவாரிகள் அமைந்துள்ள பகுதியில் ஓடை மற்றும் குடியிருப்புகள் உள்ளன. பசுமை வளையங்கள் முறையாக அமைக்கவில்லை. விதிமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படவில்லை. கல் குவாரிகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. உரிய விதிமுறைகளை கடைபிடித்து கல் குவாரிகளுக்கு உரிமம் வழங்க வேண்டும்' என்றனர்.

    மற்றொரு தரப்பினர், 'கல் குவாரியால் எங்கள் பகுதியில் வசிக்கும் மக்களின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. டீக்கடைகள் உள்ளிட்ட கடைகள் இதர தொழில்களும் சேர்ந்தே வளர்ச்சி பெறும். பல தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக உள்ளதால் கல் குவாரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

    • தொழிலாளர் இணை ஆணையர் அலுவலக கூட்ட அரங்கில் கருத்து கேட்பு கூட்டம் நடத்துகின்றனர்.
    • இக்கூட்டத்தில் தொழிலாளர்கள் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்கலாம்.

    ஈரோடு:

    கோவை கூடுதல் தொழி லாளர் ஆணையர் தமிழரசி வெளியி ட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:

    பஞ்சாலை தொழிலா ளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயம் செய்யும் வகையில் கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் தொழிலாளர் தரப்பில் எல்.பி.எப். நெடுஞ்செழியன் உள்பட பலரும், நிர்வாக தரப்பில் சிமா, சிஸ்பா பிரதிநிதிகள் செல்வராஜூ, ஜெகதீஸ் சந்திரன் உள்பட சிலரும், அதிகாரிகள் தரப்பில் சிலரும் இடம் பெற்றுள்ள னர்.

    இக்குழுவினர் வரும் 12-ந் தேதி ஈரோடு மற்றும் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள பஞ்சாலை தொழிற்சாலைகளில் கம்பேசிட், ஸ்பின்னிங், வீவிங், சைசிங், வார்பிங், ஸ்பின்னிங் மில்களில் பணி செய்யும் தொழிலாளர்களை நேரடியாக சந்தித்து விபரம் பெற உள்ளனர்.

    ஈரோடு சென்னிமலை சாலை அரசு ஐ.டி.ஐ. பின்புறம் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழிலாளர் இணை ஆணையர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் 12-ந் தேதி காலை 10.30 மணிக்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்துகின்றனர்.

    இக்கூட்டத்தில் தொழி லாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், வேலை யளிப்போர், வேலை யளிப்போர் பிரதிநிதிகள் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

      சேலம்:

      சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக் கம்) கிருஷ்ணவேணி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

      பஞ்சாலை தொழிலுக்கு 1948-ம் ஆண்டு குறைந்த பட்ச ஊதிய சட்டப்படி, குறைந்தபட்ச ஊதிய நிர்ண யம் வகையில் கோவை கூடு தல் தொழிலாளர் ஆணையர் தலைமையில் குழு அமைக் கப்பட்டுள்ளது. இக்குழுவில் தற்சார்பு உறுப் பினர்களாக சென்னை இணை இயக்குனர் (பஞ்சாலை), திருப்பூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் இணை இயக்குனர், கோவை புள்ளியி யல் உதவி இயக்கு னர் ஆகி யோரும், தொழிலா ளர் தரப்பு பிரதிநிதிகளாக பலரும் இடம் பெற்றுள்ள னர். இக்குழுவானது நாளை (செவ்வாய்கிழமை) சேலம் மற்றும் நாமக்கல் பகுதிகளில் உள்ள பஞ்சாலை தொழிற் சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை நேரடி யாக சந்தித்து விபரங்கள் பெற முடிவு செய்துள்ளனர். இந்த குழுவின் கருத்து கேட்பு கூட்டம் சேலம் கோரிமேடு ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவ லக வளாகத்தில் அமைந் துள்ள தொழிலாளர் இணை ஆணையர் அலுவல கத்தில் நடைபெறுகிறது. எனவே, இக்கூட்டத்தில் தொழிலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், வேலையளிப்போர், வேலை யளிப்போர் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக் களை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டமானது வேலம்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
      • சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை தாங்கினார்

      மங்கலம் : 

      திருப்பூர் மாவட்ட நிர்வாகம், திருப்பூர் தெற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நடத்திய 63வேலம்பாளையம், சுக்கம்பாளையம் பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டமானது 63 வேலம்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 63வேலம்பாளையம், சுக்கம்பாளையம் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் "உள்ளூரில் கல்குவாரி வருவதால் வேலைவாய்ப்பு கிடைக்கும்"என கருத்து தெரிவித்தனர். ஒரு சிலர் விதிமுறைகளுக்கு உட்பட்டு கல்குவாரி இயங்க வேண்டும்" என்றனர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கலந்து கொண்டவர்கள் "கல்குவாரி வருவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்து விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி கல்குவாரிக்கு அனுமதி வழங்கக்கூடாது" என கருத்து தெரிவித்தனர்.

      ×