search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காளீஸ்வரி கல்லூரி"

    • குழந்தைகள் காப்பகத்திற்கு காளீஸ்வரி கல்லூரி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • இளங்கலை 3-ம் ஆண்டு மற்றும் முதுகலை முதல் மற்றும் 2-ம் ஆண்டு பயிலும் 56 பேரும் பணியாற்றினர்.

    சிவகாசி

    சிவகாசி காளீ ஸ்வரி கல்லூரி ஆங்கில த்துறையின் விரிவாக்கப்பணி சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பக தோப்பிலுள்ள வள்ளலார் இல்லம்- குழந்தைகள் காப்பகத்தில் விரிவாக்கப்பணியை மேற்கொண்டனர்.

    இதன் ஒரு பகுதியாக ''சிறப்பு மதிய உணவு'' காப்பகத்திலுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. கல்லூரி மாணவர்கள் ஆங்கில புலமையை மேம்படுத்தும் வகையில் போட்டிகள், கலாச்சார நிகழ்வுகள் நடத்தி, வெற்றிப் பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

    மேலும் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான எழுதுபொருட்கள், பென்சில் டப்பாக்கள், நோட்டுப் புத்தகங்கள். பென்சில்கள், ரப்பர்கள், தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட்கள், பலசரக்கு பொருட்களான அரிசி, துவரம் பருப்பு மற்றும் முதலுதவிப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

    இந்த விரிவாக்கப் பணியில் இளங்கலை 3-ம் ஆண்டு மற்றும் முதுகலை முதல் மற்றும் 2-ம் ஆண்டு பயிலும் 56 பேரும் பணியாற்றினர். இந்த விரிவாக்கப்பணியின் மூலம் மாணவர்களுக்கு சமுதாயத்திலுள்ள பின்தங்கிய குழந்தைகளின் வாழ்க்கை மற்றும் தேவைகள் குறித்து விழிப்புணர்வு கிடைத்தது.

    ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர்கள் சாந்தி, அர்ச்சனாதேவி மற்றும் வைரமுத்து ஆகியோர் இந்த நிகழ்வை வழி நடத்தினர்.

    • காளீஸ்வரி கல்லூரியில் புத்தகக் கண்காட்சி நடந்தது.
    • தமிழியல் துறைத்தலைவர் அமுதா மற்றும் தமிழியல் துறை உதவிப்பேராசிரியர்கள் கண்காட்சியை ஒருங்கிணைத்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் தமிழியல் துறை சங்கப்பலகை இலக்கிய மன்றமும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து 2 நாட்கள் புத்தகக் கண்காட்சியை நடத்தியது. முதல்வர் பாலமுருகன் தொடங்கி வைத்தார். இதில் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், தலைசிறந்த புதினங்கள், கவிதைகள், கதைகள் தொடர்பான புத்தகங்கள், திறனாய்வுப் புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்கள், இலக்கியம், இலக்கணம் தொடர்பான புத்தகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், சாகித்ய அகாடமி விருது பெற்ற புத்தகங்கள், ஆங்கிலம், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பிற துறை சார்ந்த புத்தகங்கள், பயண நூல்கள் உள்ளிட்ட எண்ணற்ற புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த கண்காட்சியின் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேவையான நூல்களை வாங்கிப் பயனடைந்தனர். தமிழியல் துறைத்தலைவர் அமுதா மற்றும் தமிழியல் துறை உதவிப்பேராசிரியர்கள் கண்காட்சியை ஒருங்கிணைத்தனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் 60 பேர் கலந்து கொண்டு சர்வதேச அளவில் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்பித்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறை, போதி இன்டர்நேசனல் ஜெர்மன் ஆப் ரிசர்ஜ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் சர்வதேச கருத்தரங்கம் "ஆங்கில மொழி மற்றும் இலக்கியத்தில் புதிய வழிகள்" என்ற தலைப்பில் நடைபெற்றது.

    இதில் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் சாந்தி வரவேற்றார். கல்லூரி துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்ந்துரை வழங்கினார். மலேசியா துல்தான் இத்ரிஸ் கல்வி பல்கலைக்கழக இணை பேராசிரியர் மகேந்திரன் மணிம் சிறப்புரையாற்றினார்.

    இந்த அமர்வின் தலைவராக பூவம்மா இருந்தார். காவேரி கல்லூரி துணை முதல்வர் கோணி கோபால், மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆங்கிலத்துறை இணை பேராசிரியர் ஜான்சேகர் ஆகியோர் ஆங்கில மொழி மற்றும் இலக்கியத்தில் உள்ள புதிய யுக்திகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை பயன்படுத்தும் முறைகளை பற்றி பேசினர்.

    இந்த நிகழ்ச்சியில் 60 பேர் கலந்து கொண்டு சர்வதேச அளவில் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்பித்தனர். ஆங்கிலத்துறை பேராசிரியை ஸ்வப்னா, இலங்கை ஈஸ்டன் பல்கலைக்கழகம் மொழி மற்றும் ெதாடர்பியல்துறை ஆங்கில பேராசிரியர் ரோஹன் சவரிமுத்து ஆகியோர் பேசினர். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியை அர்ச்சனா தேவி நன்றி கூறினார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தென்மாவட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் நடந்தது.
    • போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை ஆசிரியர்களும், மற்ற ஆசிரியர்களும் செய்திருந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவை யொட்டி காளீஸ்வரி கல்லூரியின் உடற்கல்விதுறை சார்பில் தென்மா வட்டத்தை சேர்ந்த 19 வயதிற்குட்பட்ட மாணவ- மாணவிகளுக்கான கைப்பந்து, கூடைப்பந்து, கபடி மற்றும் கோ-கோ போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளை காளீஸ்வரி குழுமத்தின் இயக்குநர் ராஜேஷ் தொடங்கி வைத்தார்.

    மொத்தம் 38 அணிகளை சேர்ந்த வீரர்கள் இதில் பங்கேற்றனர். கைப்பந்து மற்றும் கூடைப்பந்தில் நெல்லை எம்.என்.எம். அப்துல் ரகுமான் மேல்நிலைப்பள்ளியும், கபடி போட்டியில் ராஜபா ளையம்,ஆர்.சி.மீ னாட்சிபுரம் மேல்நிலைப்பள்ளியும், கோ-கோ போட்டியில் திருத்தங்கல் எஸ்.என்.ஜி. பெண்கள் மேல்நி லைப்பள்ளி அணியும் முதலிடத்தை பெற்றன.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு காளீஸ்வரி குழுமத்தின் இயக்குநர் ராஜேஷ் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி கவுரவித்தார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி துறை ஆசிரியர்களும், மற்ற ஆசிரியர்களும் செய்திருந்தனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தொழில்முனைவோர் நிகழ்ச்சி நடந்தது.
    • இந்த அமர்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 138 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் நிறுவன புதுமையாக்க அமைப்பின் சார்பில் "வெற்றிகரமான தொழில்முனைவோர்" என்ற தலைப்பில் ஊக்கமளிக்கும் அமர்வை ஏற்பாடு செய்தது. மதுரை ஜனஜா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனர் ஜான்லாரன்ஸ் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், வணிக உலகில் மாறுபட்ட மற்றும் பரந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் பங்கேற்பாளர்களை கதையின் மூலம் ஊக்கப்படுத்தினார்.

    தொழில்முனைவோரால் வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் விருப்பங்களை அடையாளம் காண்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். நிறுவன புதுமையாக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் வரவேற்றார்.

    உறுப்பினர் முருகன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.தொழில் தொடக்க செயல் ஒருங்கிணைப்பாளர் நாகேசுவரி நன்றி கூறினார்.

    இந்த அமர்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 138 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கருத்தரங்கு நடந்தது.
    • நிறுவன புதுமையாக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் நிறுவன புதுமையாக்க அமைப்பின் சார்பில் "வடிவமைப்பு சிந்தனை, விமர்சன சிந்தனை மற்றும் புதுமை வடிவமைப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. கோவை சி.வி.ஓ. விட்டி வைஸ் நிறுவனர் சன்மதி கார்த்திக் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், வடிவமைப்பு சிந்தனையை விமர்சன சிந்தனையுடன் இணைப்பதன் மூலம் வாடிக்கையாளர்களை மைய மாக கொண்ட தீர்வுகளை வழங்கும் படைப்பாற்றலை புதுமை தூண்டுகிறது என்றார். வடிவமைப்பு சிந்தனை என்பது புதிய மற்றும் பழைய தீர்வுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கு வதற்கான உலக ளாவிய பயன்பாடாகும்.

    வணிகத் துறையில் உள்ள இடைவெளியைக் கண்டறிந்து புதுமைகளைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளையும் விளக்கினார். நிறுவன புதுமையாக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் வர வேற்றார். தாவரவியல் துறை உதவிப் பேராசிரியர் முருகன் நன்றி கூறினார். இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 114 மாணவர்கள் பங்கேற்றனர். நிறுவன புதுமையாக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கலாச்சார போட்டிகள் நடந்தது.
    • வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை முதல்வர் வழங்கினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத் துறை இலக்கிய மன்றமும், ஆங்கிலத்துறையின் முன்னாள் மாணவர்களும் இணைந்து இந்திய கலாச்சார பாரம்பரியத்தை சிறப்பிக்கும் வகையில் கலாச்சார போட்டிகளை நடத்தியது. முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

    ஆங்கிலத்துறையின் முன்னாள் மாணவர்களான திண்டுக்கல் காந்தி கிராமிய பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர் கோகுலஹரி, சிவகாசி விஸ்டம் வெல்த் சர்வதேச பள்ளி நிர்வாக அதிகாரி முத்துக்குமார், புகைப்பட மற்றும் காணொளி வடிவமைப்பாளர் வித்யஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கலாச்சார சமையல், வண்ண சுவரொட்டி தயாரித்தல், ரங்கோலி, குறும்படம். மாறுவேடப் போட்டிகள் நடந்தன. நடுவர்களாக முன்னாள் செயல்பட்டனர். 108 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் 4 அணிகளாகப் பிரிந்து இந்த போட்டிகளில் பங்கேற்றனர். முதல்நிலை வெற்றியாளர்களுக்கான கோப்பையை கிளடியேட்டர்கள் என்ற அணி வென்றது.

    வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை முதல்வர் வழங்கினார். ஆங்கிலத்துறை தலைவர் பெமினா வரவேற்றார். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் சாந்தா கிறிஸ்டினா நன்றி கூறினார். முதுகலை ஆங்கில ஆசிரியர் புவனா, ஆங்கில மொழி பயிற்றுநர் ஹரிஹரன் ஆகியோர் முன்னாள் மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றவர்களை ஊக்கப்படுத்தினர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பட்ஜெட் விளக்க கூட்டம் நடந்தது.
    • பட்ஜெட் 2023 ஒரு பார்வை என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்ச்சி நடந்தது.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் ''பட்ஜெட் 2023 ஒரு பார்வை'' என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்ச்சி நடந்தது. சாத்தூர் ராமசாமி நாயுடு ஞாபகார்த்த கல்லூரியின் வணிகவியல் துறை உதவி பேராசிரியர் சுந்தர்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். முதலாமாண்டு மாணவி ஜெயராசாத்தி வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். வணிகவியல் துறைத் தலைவர் குருசாமி வாழ்த்துரை வழங்கினார்.

    சிறப்பு விருந்தினர் பேசுகையில், அமிர்த காலத்திற்கான பார்வை என்றால் என்ன? விவசாயத்திற்கும், கூட்டுறவு நிறுவனங்களுக்கான சலுகைகள் பற்றியும், ஆரோக்கியம், கல்வி, திறன்மேம்பாடு, உள் கட்டமைப்பு வசதிகள் பற்றியும், முதலீடுகள் மீதான சலுகைகள், நிதி மேலாண்மை பற்றியும், நேரடி வரிகள் பற்றியும், வருவாய் இனங்கள் மற்றும் செலவினங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

    முடிவில் முதலாம் ஆண்டு மாணவி ஜமுனா தேவி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளையும் உதவிப்பேராசிரியர் ராஜீவ்காந்தி செய்திருந்தார். இதில் 108 மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வணிகவியல் கருத்தரங்கு நடந்தது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் வணிகவியல் (கணினி பயன்பாட்டியல்) துறை சார்பில் வணிகத்தில் சமீபத்திய கணினி தொழில்நுட்ப பயன்பாடு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஸ்ரீ செளடாம்பிகா பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவர் முத்துக்குமார் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் இரண்டாமாண்டு மாணவி பத்மகலா அனைவரையும் வரவேறறார். முதல்வர் பாலமுருகன் பேசுகையில் மாணவர்களின் போட்டியிடும் திறனை வளப்படுத்த இத்தகைய கருத்தரங்குகள் அவசியம் என்றார்.

    சிறப்பு விருந்தினர் முத்துக்குமார் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பல்வேறு பயன்பாடுகளை சுட்டிக்காட்டினார். மேலும் நிலையான வளர்ச்சிக்கு கணினி சார்ந்த தொழில்நுட்பத்தின் தற்போதைய கண்டுபிடிப்புகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். நிறைவாக, இரண்டாமாண்டு மாணவி அபிலட்சுமி நன்றி கூறினார். துறை தலைவர் நளாயினி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியர் கிருஷ்ணன் செய்திருந்தார். இந்தக் கருத்தரங்கில் வணிகவியல் (கணினி பயன்பாட்டியல்) துறையைச் சேர்ந்த 238 மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மத்திய பட்ஜெட் விளக்க கூட்டம் நடந்தது.
    • இந்த திட்டத்தின் மூலம் 98 மாணவர்கள் பயனடைந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வணிகவியல் நிறும செயலரியல் துறை சார்பில் மத்திய பட்ஜெட் குறித்த மாணவர் விளக்க காட்சியை ஏற்பாடு செய்தது.

    இந்த நிகழ்ச்சியின் நோக்கம் மாணவர்களின் பகுப்பாய்வுத் திறனை தூண்டுவதாகும். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், மத்திய பட்ஜெட் சமூக நீதி மற்றும் சமத்துவத்துடன் நாட்டின் விரைவான மற்றும் சீரான பொருளாதார வளர்ச்சியை கொண்டுள்ளது என்றார்.

    துறைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் செந்தில்குமார் வாழ்த்தி பேசினார். மத்திய பட்ஜெட் குறித்து 22 மாணவர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். உதவிப் பேராசிரியை விண்ணரசி ரெக்ஸ் வரவேற்றார்.

    உதவிப் பேராசிரியை சூரியா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியர் ஜேஸ்மின் பாஸ்டினா செய்தி ருந்தார். இந்த திட்டத்தின் மூலம் 98 மாணவர்கள் பயனடைந்தனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • இதில் 229 இளநிலை வணிகவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஜூனியர் ஜேசீஸ் விங் சார்பில் "ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்தல்'' என்ற தலைப்பில் விழிப்புணர்வு சிறப்பொழிவு நடந்தது.

    இளநிலை வணிகவியல் துறைத் தலைவர் குருசாமி வாழ்த்துரை வழங்கினார். 2-ம் ஆண்டு வணிகவியல் துறை மாணவரும், கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் தலைவருமான கைலாஷ் ராஜ் அறிமுக உரையாற்றினார்.

    சிறப்பு விருந்தினராக சிவகாசி மாநகராட்சியின் தூய்மை இந்தியா இயக்க ஒருங்கிணைப்பாளர் சூர்யாகுமார் கலந்து கொண்டார்.அவர் பேசுகையில், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் சுற்றுப்புற சீர்கேடு, சுற்றுசுழல் மாசுபாடு. கடல்வாழ் மற்றும் நிலவாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் ஆபத்து பற்றியும், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் மனித உடலில் ஏற்படும் புதிய நோய்கள் பற்றியும் எடுத்து ரைத்தார். மாணவர்களின் சந்தேகங்களுக்கும் அவர் விளக்கமளித்தார்.

    வணிகவியல் துறை முதலாமாண்டு மாணவி ஜமுனாதேவி வரவேற்றார். மாணவி ஜெயராசாத்தி நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை உதவி பேராசிரியர், கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் பொறுப்பாளர் பாபு பிராங்கிளின் செய்திருந்தார். இதில் 229 இளநிலை வணிகவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • காளீஸ்வரி கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
    • கண்புரை அறுவை சிகிச்சைக்கான நோயாளிகளை அடையாளம் காணுதல் போன்ற சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி (தன்னாட்சி), விரிவாக்க நடவடிக்கைகள், என்எஸ்எஸ் பிரிவுகள் (எண். 192 & 209), உன்னத் பாரத் அபியான் திட்டம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை, ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தியது. கல்லூரி முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர் முத்துலட்சுமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் கண் சோர்வு. நீண்ட பார்வை, குறுகிய பார்வை, கண் விழித்திரை நோய்கள், குழந்தைகளுக்கான கண் பராமரிப்பு மற்றும் கண்புரை அறுவை சிகிச்சைக்கான நோயாளிகளை அடையாளம் காணுதல் போன்ற சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 183 பேர் பயனடைந்தனர். என்.எஸ்.எஸ் மாணவர்கள் மற்றும் என்.சி.சி. கேடட்கள் தன்னார்வ தொண்டு செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை விரிவாக்கம் மற்றும் உன்னத பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் பிரிவு எண்.209 ராஜீவ்காந்தி, பிரிவு எண். 192 மாரீசுவரன் செய்திருந்தனர்.

    ×