search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடிய"

    • ஈரோடு மாவட்டத்தில் இரவு திடீரென இடியுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது.
    • அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 90 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நடந்த சில நாட்களாக பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது. ஆனால் மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் கரு மேகங்கள் சூழ்ந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வந்தது.

    இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் வழக்கம் போல் காலை முழுவதும் வெயில் வாட்டு வகித்தது. இரவு 7 மணி முதல் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்ல செல்ல கனமழை பெய்யத் தொடங்கியது.

    மாநகர் பகுதியில் இரவு 7 மணி முதல் இடி மின்னலுடன் மழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. கொடுமுடி, அம்மாபேட்டை, மொடக்குறிச்சி, பவானி, கோபி, பெருந்துறை, கொடிவேரி, தாளவாடி, சென்னிமலை போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 90 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதன் காரணமாக தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. திடீர் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    அம்மாபேட்டை-90, கொடுமுடி-57, கவுந்த ப்பாடி-22, மொடக்குறிச்சி, வரட்டுபள்ளம்-21, ஈரோடு, பவானி-15, கோபி-9.4, குண்டேரிபள்ளம்-7.6, பெருந்துறை-7, கொடி வேரி-6.2, தாளவாடி-6, சென்னிமலை-4, பவானிசாகர்-3.2, சத்தியமங்கலம்-3.

    ×