search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டயப் பயிற்சி"

    • 2023-24ம் ஆண்டு 23வது அஞ்சல்வழி மற்றும் பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
    • 30ம் தேதி மாலை 5.30 மணிவரை மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும்.

    தேனி:

    2023-24ம் ஆண்டு 23வது அஞ்சல்வழி மற்றும் பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும் என்று மண்டல இணைப்பதிவாளர் ஆரோக்கிய குமார் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக தேனி மாவட்டத்தில் செயல்படும் தேனி கூட்டறவு மேலாண்மை நிலையத்தில் 23வது அஞ்சல்வழி மற்றும் பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி புதிய பாடத்திட்டத்தின் படி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் www.tncuicm.com என்ற இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    வருகிற 30ம் தேதி மாலை 5.30 மணிவரை மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும். கல்வி சான்றுகளுடன் தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பங்களுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • ரூ.100 செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

    திருப்பூர் :

    இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சொ.சீனிவாசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

    கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் (முழு நேரம்) சேர விண்ணப்பங்கள் விநியோகம் செய்வதற்கான காலக்கெடு கடந்த ஜூலை 28 ந்தேதியில் இருந்து ஆகஸ்ட் 22 ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் விண்ணப்பக் கட்டணம் ரூ.100 செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஆகஸ்ட் 22 ந்தேதிக்குள் முதல்வா், ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி நிலையம், சாய்பாபா காலனி, கோவை என்ற அலுவலக முகவரிக்கு கூரியா் அல்லது பதிவுத்தபால் மூலமாக அனுப்பிவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடலூர் மாவட்டத்தில் அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தொடங்கப்பட உள்ளது.
    • இப்பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவம் 19 ந்தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

    கடலூர்:

    டாக்டர் எம்.ஜி.ஆர் . கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-2023 ஆம் ஆண்டிற்கு அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தொடங்கப்பட உள்ளது . இப்பயிற்சியானது அனைத்து கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் கூட்டுறவு பட்டயப் பயிற்சி பெறாத பணியாளர்களுக்கு பயிற்சி பெற ஒரு நல்ல வாய்ப்பாகும். கல்வித்தகுதியாக பழைய 10 - ம் வகுப்பு தேர்ச்சி ( பழைய எஸ்.எஸ்.எல்.சி ) புதிய 10 - ம் வகுப்பு தேர்ச்சி இப்பயிற்சிக்கான பெற்றிருக்க வேண்டும் . அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி அனைவருக்கும் வழங்குவதில் தடைகள் வேண்டுவ தி ல்லையாதலால் ஓராண்டு தொடர் பணி இருக்க வேண்டுமென்ற நிபந்தனையின்றி கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து நிரந்தர பணியாளர்களும் இந்தப் பயிற்சியினை மேற்கொள்ளலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.

    விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பதாரர் பணிநியமனம் செய்யப்பட்ட முறைகள் குறித்து அதாவது வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக ( அல்லது ) கருணை அடிப்படையில் ( அல்லது ) அரசு பதிவாளர் உத்தரவுப்படி விவரம் குறிப்பிடப்பட வேண்டும் . பயிற்சி அலுவலக வார விடுமுறை நாட்களில் நடைபெறும் . தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு பயிற்சி முடிவில் கூட்டுறவு மேலாண்மை பட்டயம் கணினி மேலாண்மை , மற்றும் நகைமதிப்பிடும் அதன் நுட்பங்களும் ஆகிய மூன்று சான்றிதழ்கள் வழங்கப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவம் 19 ந்தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது . டாக்டர் எம்.ஜி.ஆர் கூட்டுறவு மேலாண்மை நிலைய அலுவலகத்தில் 100 ரூபாய் ரொக்கமாக செலுத்தி நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஆகஸ்ட் 1 ந்தேதி ஆகும் . இப்பயிற்சியானது 8 ந்தேதி தொடங்கப்படவுள்ளது . மேலும் விபரங்களுக்கு டாக்டர் எம்.ஜி.ஆர் . கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண் .3 கடற்கரை சாலை , சரவணபவா கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை வளாகம் , கடலூர் -1 தொலைபேசி எண் 04142-222619 மூலமாகவோ அல்லது நேரிலோ தொடர்பு கொள்ளலாம் என கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் நந்தகுமார் செய்திக்குறிப்பில் கூறிப் பட்டிருந்தது. 

    ×