search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.எஸ்.பி. அலுவலகம்"

    • வாங்கிய கடனுக்கு முறையாக ஜெகநாதன் வட்டி கட்டியதாக கூறப்படுகிறது.
    • 6 ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து ரூ. 28 லட்சம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரடிவாவி பகுதியைச் சேர்ந்த ஆறுச்சாமி மகன் ஜெகநாதன்(வயது 50). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை திருப்பூரைச் சேர்ந்த ஒருவரிடம் அடமானம் வைத்து ரூ. 28 லட்சம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் கெடு காலம் முடிந்ததால், பெருமாநல்லூரைச் சேர்ந்த ஒரு நிதி நிறுவனத்தில் ரூ.40 லட்சத்திற்கு விவசாய நிலத்தை அடமானம் வைத்து பணம் பெற்று உள்ளார். ஏற்கனவே வாங்கிய சிவலிங்கத்தின் கடனை அடைத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடன் தொகைக்காக பெருமாநல்லூர் நிதி நிறுவனத்திற்கு கிரைய உடன்படிக்கை எழுதிக் கொடுத்துள்ளார். கடன் தொகை செலுத்தாவிடில் நிலம் நிதி நிறுவனத்திற்கு சொந்தமாகி விடும் என்ற ஒப்பந்த அடிப்படையில் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வாங்கிய கடனுக்கு முறையாக ஜெகநாதன் வட்டி கட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வங்கியில் கடன் பெறுவதற்காக, கிரைய ஒப்பந்தத்தை ரத்து செய்து கொடுக்குமாறு நிதி நிறுவனத்தில் ஜெகநாதன் கேட்டுள்ளார்.

    இன்று, நாளை என காலம் தாழ்த்திய அவர்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்து தரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஜெகநாதன் வில்லங்க சான்றிதழ் எடுத்துப் பார்த்தபோது அதில் அவரது நிலத்தை,போலியான பத்திரங்கள் தயாரித்து கடந்த 2020 ஆண்டு வேறு ஒருவருக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகநாதன் நிதி நிறுவனத்திடம் கேட்டபோது அவர்கள் முறையாக பதிலளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த அவர் பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்ட் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்த நிலையில், மனவேதனையில் இருந்த அவர் திடீரென மண்எண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

    அருகே இருந்த உறவினர்கள் மற்றும் போலீசார் அவரை தடுத்து, அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். இதையடுத்து ஜெகநாதனின் புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் இது போன்ற காரியங்களில் இனி ஈடுபடக்கூடாது என பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்ட்சவுமியா விவசாயி ஜெகநாதனுக்கு அறிவுறுத்தினார். துணை சூப்பிரண்ட் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குடும்ப வறுமை மற்றும் விவசாயத்தின் வறட்சி காரணமாக 7 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய கடனுக்கு வட்டியை சரியாக செலுத்த முடியவில்லை.
    • இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் மீது கல் எறிவது, கொலை மிரட்டல் விடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த ஜோத்தம்பட்டி பால்காரர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி. விவசாயி. இவர் மனைவி ஜோதிமணி, மகன்கள் இளமுகில், கார்த்திகேயன், தாயார் கன்னியம்மாள் மற்றும் மருமகள், பேரன், பேத்தியுடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் தங்கள் வீட்டில் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதால் துணை சூப்பிரண்டு அலுவலகத்திலேயே தங்கியிருக்கப் போவதாகக் கூறி குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் இரவு அங்கு வந்தனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- குடும்ப வறுமை மற்றும் விவசாயத்தின் வறட்சி காரணமாக 7 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய கடனுக்கு வட்டியை சரியாக செலுத்த முடியவில்லை. அதனால் கடன் கொடுத்தவர், நம்பிக்கைக்காக இருக்கட்டும் என்று சொல்லி தோட்டத்து பத்திரத்தை எங்களிடமிருந்து வாங்கி, பின்னர் ஏமாற்றி கிரயம் செய்துள்ளார். அதன் பிறகு வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்தநிலையில் தற்போது இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் மீது கல் எறிவது, கொலை மிரட்டல் விடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எனவே வீட்டில் தங்குவதற்கு அச்சமாக உள்ளதால் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குடும்பத்துடன் தங்கியிருக்க முடிவு செய்துள்ளோம்'என்று கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல் சம்பவம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    • திட்டக்குடி டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு மூதாட்டி தீக்குளிக்க முயன்றார்.
    • நீண்ட நாட்களாக செந்தில் அசல் பணத்தையும் தரவில்லை, வட்டியும் தரவில்லை. 2017-ம் ஆண்டு 23 ஆயிரம் கொடுத்துள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவினங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி வள்ளி (வயது60) கூலி தொழிலாளி. தனது மகன் கடந்த 2009 ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார். நீதிமன்ற உத்தரவு பேரில் சாலை விபத்தில் இறந்து போன மகனுக்கு 40 ஆயிரம் நஷ்ட ஈடாக வழங்கப்பட்டது. அந்த பணத்தினை அதே பகுதியை சேர்ந்த பூமாலை மகன் செந்தில் (43) என்பவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு 40 ஆயிரத்தையும் அவரிடம் கொடுத்துள்ளார். நீண்ட நாட்களாக செந்தில் அசல் பணத்தையும் தரவில்லை, வட்டியும் தரவில்லை. 2017-ம் ஆண்டு 23 ஆயிரம் கொடுத்துள்ளார். இந்நாள் வரை மீதி தொகையை தராமல் இழுத்த–டித்தார். பணம் கேட்டால் ஆபாசமாக திட்டி உன்னை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. 

    இது குறித்து வள்ளி ஆவினங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகார் செய்தும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத–தால் மன உளைச்சலான மூதாட்டி இன்று காலை திட்டக்குடி டி.எஸ்பி. அலுவலகம் முன்பு மண்எண்ணை கேனுடன் வந்து தனது உடல் முழுவதும் மண்எண்ணயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றினர் டி.எஸ்பி. அலுவலகம் அழைத்து சென்று விசாரணை செய்தனர் . உங்களது பணம் விரைவில் பெற்றுத் தரப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மூதாட்டி சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    ×