search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்று"

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள வீரணம்பாளையத்தை சேர்ந்தவர் சீரங்கன் ( 65). இவர் இடது முழங்கால் வலி காரணமாக தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் அனைத்து மூட்டு வலிக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் இந்த வாய்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள வீரணம்பாளையத்தை சேர்ந்தவர் சீரங்கன் ( 65). இவர் இடது முழங்கால் வலி காரணமாக தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமாகவில்லை. இந்த நிலையில் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் முழங்கால் வலி காரணமாக மருத்துவ பரிசோதனைக்கு சென்றார். அவரை பரிசோதனை செய்த டாக்டர் கோகுல் தலைமையிலான குழுவினர் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இதையடுத்து அரசு மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் குழுவினர் சீரங்கனுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சீரங்கன் நலமுடன் வீடு திரும்பியுள்ளார். பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் அனைத்து மூட்டு வலிக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் இந்த வாய்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, ஆற்றோரம் வசிக்கும் பொதுமக்கள பாதிக்கப்படுகின்றனர்.
    • பஞ்சமி நிலம், மற்றும் புறம்போக்கு நிலத்தை மீட்டு, சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பள்ளிப்பாளையம்:

    ஜனநாயக மக்கள் கழகத்தின் நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம் பள்ளிப்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில், நிறுவன தலைவர் ஆத்துார் கண்ணன் கலந்து கொண்டு சிறப்புறையற்றினர். இதனை தொடர்ந்து, உயர்த்தப்பட்ட சொத்து வரி, மின் கட்டணத்தை உடனடியாக மாநில அரசு திரும்ப பெற வேண்டும்.காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, ஆற்றோரம் வசிக்கும் பொதுமக்கள பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்.

    நாமக்கல் மாவட்டத்தில் பஞ்சமி நிலம், மற்றும் புறம்போக்கு நிலத்தை மீட்டு, சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் குழந்தைவேல், பள்ளிப்பாளையம் நகர தலைவர் சம்பத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

    ×