என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆறுதல்"
- தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டது.
- சாக்கோட்டை க.அன்பழகன் எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கினார்.
கும்பகோணம்:
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி, கொரநாட்டுக் கருப்பூர் ஊராட்சி, கீழத் தெருவில் வசித்து வரும் கவிதா சேகர் மற்றும் ஞானமணி, அருள்தாஸ் ஆகியோரது குடிசை வீடுகள் தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டு, மிகவும் பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் நேரில் சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கி, ஆறுதல் கூறினார். மேலும் அரசு நிவாரண உதவிகள் கிடைக்க வழிவகை செய்தார்.
நிகழ்வில், கும்பகோணம் வட்டாட்சியர் பி.வெங்கடேஸ்வரன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுதாகர், ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்தி முருகன், ஊராட்சி மன்ற தலைவர் சுதா அம்பிகாபதி, துணைத் தலைவர் சரவணன், மாவட்ட திமுக பிரதிநிதி உதயம் கோவிந்த், ஒன்றிய அவைத்தலைவர் அபிராமிசுந்தரம் மற்றும் திமுக நிர்வாகிகள் பாஸ்கர், உலகநாதன், கருணாகரன், பழனிசாமி, சுரேஷ், பாலையா, ரமேஷ் உள்ளனர்.
- வெடிவிபத்தில் உயிரிழந்த 14 பேர் குடும்பத்தினருக்கு காங். தொழிலாளர் யூனியன் ஆறுதல் கூறினார்.
- வீடு இல்லாத குடும்பங்களுக்கு அரசு சார்பில் வீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்தி கேட்டுக்கொண் டார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த கிச்ச னாயக்கம்பட்டி அருகிலும், ஸ்ரீவில்லிபுத் தூரை அடுத்த எம்.புதுப்பட்டி அருகே ரெங்கபாளையத்திலும் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் 12 பெண்கள் உள்பட 14 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
குறிப்பாக லட்சுமியாபு ரம், அழகாபுரி, காந்திநகர், மூவறைவென்றான் பகுதி களை சேர்ந்தவர்கள் பலி யாகினர். இந்த தொழிலா ளர்களின் குடும்ப உறுப்பி னர்களை ராஜபாளையத்தை சேர்ந்த தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் விருது நகர் மாவட்ட தலைவ ரும், பட்டாசு மற்றும் தீப் பெட்டி நலவாரிய உறுப்பி னருமான தளவாய் பாண்டி யன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்க ளுக்கு கிடைக்க வேண்டிய அரசு நிவாரண உதவிகள் கிடைக்க வேண்டி அழகாபு ரியில் முகாமிட்டிருந்த சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், வத்திராயி ருப்பு வட்டாட்சியர் முத்து மாரி ஆகியோரை நேரில் சந்தித்து உயிரிழந்த தொழி லாளர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும்,
பெற்றோர்களை இழந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், வீடு இல்லாத குடும்பங்களுக்கு அரசு சார்பில் வீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்தி கேட்டுக்கொண் டார்.
அப்போது வத்திராயி ருப்பு முன்னாள் வட்டாரத் தலைவர் அண்ணாதுரை, விருதுநகர் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் ராமர், மாவட்ட துணைத் தலைவர் பாண்டிசெல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
- சிவகங்கை அருகே நடந்த விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு செந்தில்நாதன் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.
- உயர் தர சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் கேட்டு கொண்டார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரி பேருந்தும், படமாத்தூரில் இருந்து கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த சரக்கு வாகனமும் கட்டுப் பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளா னது. இதில் பேருந்தில் பயணம் செய்த 27 மாணவ, மாணவிகள், 9 பேராசிரி யர்கள் காயம் ஏற்பட்டு சிவ கங்கை அரசு மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுபற்றிய தகவல் அறிந்த சிவகங்கை சட்ட மன்ற உறுப்பினர் செந்தில் நாதன் உடனே சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் உயர் தர சிகிச்சை அளிக்க மருத்து வர்களிடம் கேட்டு கொண் டார்.
அவருடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாக ராஜன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங் கோவன், ஒன்றிய செயலா ளர்கள் செல்வ மணி, கோபி, பழனிச்சாமி, ஜெக தீஸ்வரன், நகர் துணை செயலாளர் மோகன், பாசறை மாவட்ட பொருளா ளர் சரவணன், மாவட்ட கவுன்சிலர் கோமதி தேவ ராஜ், அமைப்புசாரா அணி மாவட்ட இணை செயலாளர் அழகர்பாண்டி, மாவட்ட மாணவரணி அன்பு மற்றும் நகர ஒன்றிய மாவட்ட நிர் வாகிகள் சென்றனர்.
- இறந்தவர்களின் உடல்கள் தனியார் மருத்து வமனையில் வைக்கப்பட்டு இருந்தது.
- தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.பழனியப்பன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தருமபுரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் உள்ள அத்திப்பள்ளியில் நடந்த பட்டாசு கடை தீ விபத்தில் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த 7 பேரும், நீப்பந்துறை பகுதியைச் சேர்ந்த ஒருவரும் என மொத்தம் 8 பேர் பலியானார்கள்.
இறந்தவர்களின் உடல்கள் ஓசூர் அருகே உள்ள ஒரு தனியார் மருத்து வமனையில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த விபத்தில் உயிரிழந்த 8 பேரின் உடல்களுக்கு தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய அவர் இறந்தவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு எடுத்துச்செல்ல தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். அப்போது ஊராட்சி மன்றத் தலைவர் ராணிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- பலியானவர்க ளின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
- ரூ.3 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்கள்.
ஓசூர்,
ஓசூர் அருகே மாநில எல்லையில், பட்டாசு கடையில் நடந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அர.சக்கரபாணி ஆகியோர் ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினர்.
அமைச்சர்கள் நேரில் ஆறுதல்
ஓசூர் அருகே அத்திப்பள்ளியில் பட்டாசு குடோன் விபத்தில் 14 பேர் பலியானார்கள். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் நேற்று காலை சென்னையில் இருந்து பெங்களூரு வந்தனர். அங்கிருந்து காரில் அத்திப்பள்ளி வந்த அவர்கள் பலியானவர்களின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் பலியான 4பேரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்கள்.
அதே போல படுகாயம் அடைந்த ராஜேஷ், தினேஷ் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர்கள் வழங்கி னார்கள். மொத்தம் ரூ.44 லட்சத்திற்கான நிவாரண தொகையை அமைச்சர்கள் வழங்கினார்கள். அப்போது மாவட்ட கலெக்டர் சரயு, எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்),டி.ராமச்சந்திரன் (தனி), ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா. உதவி கலெக்டர் சரண்யா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பேட்டி
பின்னர் அமைச்சர்மா.சுப்பிரமணியன் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் நானும் அமைச்சர் சக்கரபாணியும் இங்கு வந்து இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி உள்ளோம். உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும். காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.
பொதுவாக தீபாவளி பண்டிகை காலங்களில் தற்காலிகமாக கடை கள் அமைத்து, அதற்கு தமிழகத்தை சேர்ந்த வர்களை அழைத்து வருவார்கள். இந்த விபத்தில் இறந்த வர்கள் பட்டாசு கடையில் வேலை செய்வதற்காக வந்தவர்கள் ஆவார்கள். இந்த விபத்தில் மொத்தம் 14 பேர் இறந்துள்ளனர். அவர்கள் கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள். விபத்துக்கான காரணம் குறித்து அத்திப்பள்ளி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று உறவினர்கள் சிலர் கோரிக்கை வைத்தனர்.
- மளமளவென பரவிய தீயால் அருகில் இருந்த ஏழுமலை வீடும் தீப்பிடித்து எரிந்தது.
- நிவாரண நிதியாக அரிசி, வேட்டி, சேலை,மண் எண்ணெய் மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் வழங்கினர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 48) கூலித் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று கூலி வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் இவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அக்கம், பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். மளமளவென பரவிய தீயால் அருகில் இருந்த ஏழுமலை வீடும் தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து தண்ணீரை ஊற்றி பொதுமக்கள் தீயை அனணத்தனர். இதில் கோவிந்தனின் வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. ஏழுமலை வீடு பகுதி சேதம் மட்டும் அடைந்தது. தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோவிந்தன் மற்றும் ஏழுமலை குடும்பத்தினரை சந்தித்து சொந்த பணம் தலா ரூ.5 ஆயிரம் வழங்கி ஆறுதல் கூறினார்.
இதனை தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் ஆகியோர் வீடு முழுவதும் சேதம் அடைந்த கோவிந்தனுக்கு தமிழக அரசின் நிவாரண நிதியாக அரிசி, வேட்டி, சேலை,மண் எண்ணெய் மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் வழங்கினர். இதேபோல் வீடு பகுதி சேதம் அடைந்த ஏழுமலைக்கு அரிசி, வேட்டி, சேலை, மண்எண்ணெய் ரூ.2 ஆயிரத்து 500 பணம் ஆகியவற்றை வழங்கி ஆறுதல் கூறினர். மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனவும் சேதமதிப்பு1 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என வும் கூறப்படுகிறது.
- மின்சாரம் தாக்கியதில் கபிலேஷ் சம்பவ இடத் திலேயே இறந்தார்.
- அவர்களது குடும்பத்தினரிடம் மேல் சிகிச்சைக்காக நிதி உதவிகளை வழங்கி னார்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாட்டம் பரமக்குடி அருகே உள்ள மேலாய்க்குடி கிராமத்தில் கடந்த 7-ம் தேதி இரவு நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா உறியடி நிகழ்ச்சியில் பரமக்குடி சோமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன்கள் கோகுல், ராகுல் (10) கபி லேஷ் (7) ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கிய தில் கபிலேஷ் சம்பவ இடத் திலேயே இறந்தார். இதில் படுகாயம் அடைந்த கோகுல், ராகுலை மதுரை தனியார் மருத்துவ மனையில் அனு மதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். அவர்களை அமைச்சர் ராஜகண்ண ப்பன் சார்பில் அவரது மகன் மருத்துவர் திலீப் ராஜகண்ணப்பன் இறந்த கபிலேஷ் குடும் பத்தினிரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள கோகுல், ராகுலை பார்த்து விட்டு அவர்களது குடும்பத்தினரி டம் மேல் சிகிச்சைக்காக நிதி உதவிகளை வழங்கி னார்.
இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- விபத்தில் காயமடைந்த சிகிச்சை பெற்று வரும் தி.மு.க.வினருக்கு தளபதி எம்.எல்.ஏ. நிதி உதவி செய்தார்.
- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க விரும்பி னாலும் ஏற்பாடு செய்து தருவதாகவும் அவர்களிடம் கூறினார்.
மதுரை
ராமநாதபுத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று 18-ந்தேதி மீனவர்கள் நல மாநாடு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மதுரை திரும்பும் போது ஏற்பட்ட விபத்தில் 9 பேர் காயமடைந்தனர்.
84-வது வார்டு வில்லா புரத்தை சேர்ந்த தங்க பாண்டியன் மனைவி விஜயலெட்சுமி(வயது48), அன்பழகன் மகன் அன்புராஜ் (32) பாலசுப்பிர மணியன் மகன் பால முருகன், செய்யது உசேன் மனைவி சாஜித்(52), மாரி (38), வேல்மணி (43) உள்பட 9 போ் படுகாயமடைந்தனா்.
காயமடைந்தவா்கள் பரமக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனா். இந்த விபத்து குறித்து பரமக்குடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக் காக மதுரை அரசு மருத்துவ மனையில் அவர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்களை மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. செய லாளர் தளபதி எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நிதியுதவி வழங்கிய அவர் மருத்துவ உதவிகளுக்கு தன்னை அணுகுமாறும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க விரும்பி னாலும் ஏற்பாடு செய்து தருவதாகவும் அவர்களிடம் கூறினார்.
அப்போது பகுதி செயலாளர்கள் கவுன்சிலர் போஸ் முத்தையா, கிருஷ்ணா பாண்டி, வட்டச் செயலாளர் பாலா என்ற பாலசுப்ரமணியன், மூவேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
- கொல்லிமலை அருகே வாழவந்தி நாடு ஊராட்சி கரையாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி விவசாயியான இவர் நேற்று தோட்டத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
- அப்போது அங்கு மறைந்திருந்த கரடி அவரை தாக்கியது. இதில் காயமடைந்த அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கொல்லிமலை அருகே வாழவந்தி நாடு ஊராட்சி கரையாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி (51). விவசாயியான இவர் நேற்று தோட்டத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த கரடி அவரை தாக்கியது. இதில் காயமடைந்த அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நாமக்கல் ஆர்.டி.ஓ. சரவணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் சிகிச்சை பெற்று வரும் பழனிசாமி உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
- மருத்துவமனையில் மாணவர்களுக்கு ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆறுதல் கூறினார்.
- மருத்துவ அதிகாரியிடம் சிகிச்சை குறித்து கேட்கப்பட்டது. மாண வர்களுக்கு தனிக்கவனம் செலுத்துமாறு கூறி உள்ளோம்.
மதுரை
திருமங்கலத்தில் பூவரசம் மரத்தின் பழக்கொட்டையை சாப்பிட்டு பாதிக்கப்பட்டு, திருமங்கலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவர்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் சந்தித்தார். அதனை தொடர்ந்து மருத்துவரிடம் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்து, பெற்றோர்க ளுக்கு ஆறுதல் கூறினார்.
அதனைத் தொடர்ந்து பிஸ்கட், ரொட்டி, பழங்கள், நிதியுதவி ஆகியவற்றை வழங்கினார். பின்னர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
திருமங்கலத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் பள்ளி வளாகத் துக்குள் உள்ள பூவரசம் மரத்தின் பழக் கொட்டை களை சாப்பிட்டனர்.
பள்ளி முடித்து வீட்டுக்குச் சென்ற அவர்கள் அங்கு மயக்கம் அடைய தொடங்கினர். உடனடியாக பெற்றோர்கள் அவர்களை திருமங்கலம் அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். தரணிதரன், பாலாஜி, கோகுல பிரசாத் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாண வர்கள் மருத்துவமனையில் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர்ந்தனர்.
இவர்களில் பாலாஜி, கோகுலபிரசாத் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மருத்துவ அதி காரியிடம் சிகிச்சை குறித்து கேட்கப்பட்டது. மாண வர்களுக்கு தனிக்கவனம் செலுத்துமாறு கூறி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நெல்லிக்குப்பம் அருகே மேல் பட்டாம் பாக்கத்தில் நடந்த கோர விபத்தில் 5 பேர் பலியாகினர்.
- எம்.சி.சம்பத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
கடலூர்:
நெல்லிக்குப்பம் அருகே மேல் பட்டாம் பாக்கத்தில் நடந்த கோர விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் 91 பேர் காயம் அடைந்து கடலூர் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் நேரில் சந்தித்து பழங்கள், பிஸ்கட், பிரட் ஆகியவற்றை வழங்கி ஆறுதல் கூறினர். அப்போது மாவட்ட அவைத் தலைவர் சேவல்குமார், ஒன்றிய செயலாளர் காசிநாதன், பகுதி செயலாளர்கள் கந்தன், வெங்கட்ராமன், இலக்கிய அணி ஏழுமலை, ஒன்றிய கவுன்சிலர்கள் வேல்முருகன், கிரிஜா செந்தில்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- விஷம் குடித்த சுடலைமாடன் தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
- சுடலைமாடனின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
உடன்குடி:
உடன்குடி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றிய சுடலை மாடனிடம் அவரது பதவி உயர்வு, சாதி குறித்து பேரூராட்சியின் முன்னாள் தலைவி ஆயிஷா கல்லாசி, பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஆகியோர் அவதூறாக பேசினார்கள்.
இதையடுத்து கடந்த 17-ந்தேதி விஷம் குடித்த சுடலைமாடன் தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 23-ந்தேதி உயிரிழந்தார்.
சுடலைமாடனின் சாவுக்கு காரணமான வர்களை கைது செய்ய வேண்டும் என இவரது உறவினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தநிலையில் மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் உறுதிமொழியை ஏற்று போராட்டம் கைவிடப் பட்டது.
சுடலைமாடன் குடும்பத் திற்கு ரூ.12 லட்சம் அரசு உதவி, அவரது மகளுக்கு அரசு வேலை, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என அரசுத் தரப்பில் தெரி விக்கப்பட்டது. இதனால் சுடலை மாடன் உடலை வாங்கி உறவினர்கள் அடக்கம் செய்தனர்.
இந்நிலையில் சுடலை மாடன் குடும்பத்தினரை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், தமிழக தூய்மை பணியாளர் இணைய துணைத்தலைவர் கோவிந்த ராஜ், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கினார்.திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புகாரி, தாசில்தார் சுவாமி நாதன், முக்காணி கூட்டுறவு சங்க தலைவர் உமரிசங்கர், உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங், கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலர் க.இளங்கோ, பேரூராட்சி துணைத் தலைவர் மால்ராஜேஷ், பேரூராட்சி உறுப்பினர்கள் மும்தாஜ் பேகம், அன்புராணி, ஆபித், பிரதீப் கண்ணன், பஷீர், சரஸ்வதி பங்காளன், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் மீராசி ராசூதீன், மகாவிஷ்ணு, ரவிராஜா, முன்னாள் கவுன்சிலர் முகமது சலீம், மாவட்ட பிரதிநிதி ஜெயப்பிரகாஷ், ஓன்றிய செயலர்கள் ரமேஷ், நவீன்குமார், சதீஷ், நகர இளைஞரணி அமைப்பாளர் அஜய், கணேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்