search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை- பணம் கொள்ளை"

    • கடந்த 10 மாதங்களாக அருள்குமார் வீட்டில் இருந்து வேலை பார்த்து வருகிறார்.
    • கண்காணிப்பு காமிராக்களில் கொள்ளையர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்கின்றனர்.

    கோவை

    கோவை இருகூர் அருகே உள்ள சிவசக்தி நகரை சேர்ந்தவர் அருள் குமார் (வயது 32 ). இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 மாதங்களாக அருள்குமார் வீட்டில் இருந்து வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெள்ளலூரில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றார். அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர்.

    அவர்கள் வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த கம்மல், செயின், தங்க நாணயம், கைச்செயின், நெக்லஸ், வளையல் உள்பட 17 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

    வீட்டிற்கு திரும்பிய அருள்குமார் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கொள்ளையர்கள் பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார் புகார் என்பதில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களில் கொள்ளையர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளதா எனவும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • வேலைக்கார பெண் ஆப்பிள் ஜூசில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார்
    • நகை மற்றும் பணம் கொள்ளை போனது

    கோவை:

    பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 63). பூ வியாபாரி.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது கடைக்கு 35 வயது மதிக்க தக்க இளம்பெண் ஒருவர் காலை மற்றும் மாலை வேலைகளில் அடிக்கடி வந்து முத்துலட்சுமிக்கு உதவி செய்து வந்தார். சம்பவத்தன்று அந்த இளம்பெண் ஆப்பில் ஜூசில் மயக்க மருந்தை கலந்து முத்துலட்சுமிக்கு கொடுத்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கினார்.

    பின்னர் அந்த பெண் அவரது வீட்டை திறந்து வீட்டில் இருந்த செயின், கம்மல், மோதிரம் உள்பட 3 பவுன் தங்க நகைகள், ரூ.2 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    மயக்கம் தெளிந்து எழுந்த முத்துலட்சுமி இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மயக்க மருந்து கலந்து கொண்டு மூதாட்டியின் வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்ற இளம்பெண்ணை தேடி வருகிறார்கள். 

    ×