search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடைவிழா"

    • கொடை விழாவில் இரவில் அன்னதானம், வில்லிசை நடைபெற்றது.
    • நாளை மஞ்சள் நீராட்டுதல், கிடா வெட்டுதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள பூலாங்குளத்தில் கீழ் பகுதியில் அமைந்துள்ள மங்களம்மன் கோவில் கொடை விழா நேற்று தொடங்கியது. காலையில் தீபாராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் இரவில் அன்னதானம், வில்லிசை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று மதியம் குற்றாலத்தில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு மங்களம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மேளதாளம் மற்றும் வானவேடிக்கையுடன் அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது. இன்று இரவில் வில்லிசை, மாலை சாத்துதல், நள்ளிரவில் நையாண்டி மேளம் வானவேடிக்கையுடன் நடுசாம பூஜை நடைபெறுகிறது. நாளை (புதன்கிழமை) காலை நேமிதம் எடுத்து வருதல், முளைப்பாரி எடுத்து வருதல், பொங்கலிடுதல், மதியம் மஞ்சள் நீராட்டுதல், கிடா வெட்டுதலுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவில் சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்கின்ற னர். விழாவிற்கான ஏற்பாடு களை விழாக்கமிட்டியினர் செய்துள்ளனர்.

    • கொடைவிழா கடந்த 7 -ந்தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    • சாமகொடை பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகில் கச்சேரி காம்பவுண்ட் வளாகத்தில் மருத்துவ சமுதா யத்திற்கு பாத்தியப்பட்ட கோட்டை மாடன், கோட்டை மாடத்தி மற்றும் கோட்டை முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 22-வது ஆண்டு கொடைவிழா கடந்த 7 -ந்தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    இதையொட்டி நேற்று கணபதிஹோமம், பால்குடம் ஊர்வலம், பிற்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் கோவில் வளாகத்தில் மதியம் அன்ன தானம், மாலையில் பொங்க லிடுதல் நிகழ்ச்சி அதனை தொடர்ந்து பூத்தட்டு ஊர்வலம் நடந்தது. பின்னர் இரவு 12 மணிக்கு சாமகொடை பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் தலைமையில், தலைவர் கருப்பையா, செயலாளர் செல்வா, பொருளாளர் கருப்பசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

    • கண்ணாட்சி முப்புடாதி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • இன்று காலை முளைப்பாரி கரைத்தல் நடந்தது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை கண்ணாட்சி முப்புடாதி அம்மன் கோவில் கொடைவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா கடந்த 23-ந் தேதி கால் நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் நாள்தோறும் கண்ணாட்சி முப்புடாதி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. 28-ந்தேதி காலை கும்பாபிஷேகம், மகாதீபாராதனை, முழுக்காப்பு தரிசனம், இரவு அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நடந்தது. 29-ந்தேதி மாலை குடியழைப்பு, நேற்று உச்சிக்கால பூஜை, பொங்கலிடுதல், முளைப்பாரி எடுத்தல், அக்கினி சட்டி எடுத்தல், குற்றாலம் தீர்த்தம் கொண்டு வருதல், இரவு கொடைவிழா நடந்தது. இன்று காலை முளைப்பாரி கரைத்தல் நடந்தது. மாலை 4 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடைபெறுகிறது.

    • நள்ளிரவு வலிய படுக்கை பூஜை நடக்கிறது.
    • குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்க ளில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இக் கோவிலில் இந்த ஆண்டு மாசி பெருந்திருவிழா கடந்த 5-ந் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி 14 ந் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது.

    விழாவில் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநில ங்களில் இருந்து அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் புனித தீர்த்தமாடி நேர்ச்சை கடன் செலுத்தி பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

    இதைத்தொடர்ந்து 8-ம் கொடை விழா கடந்த 21 ந் தேதி நடந்தது. 25-ந் தேதி (சனிக்கிழமை) அம்மனின் பிறந்த நாளாக பக்தர்களால் கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று பரணிக் கொடைவிழா நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் திருநடை திறக்கப்பட்டு பஞ்சாபி ஷேகம், உஷபூஜை, உருள் நேர்ச்சை, பூமாலை நேர்ச்சை, உச்சகால பூஜை, குத்தியோட்டம், தொடர்ந்து மாலையில் தங்கரதம் உலாவருதல், திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை, அத்தாழபூஜை, வெள்ளிப்பல்லக்கில் அம்மன் பவனி நடக்கிறது.

    நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது. இப்பூஜை மாசிக்கொடை விழாவின் ஆறாம் நாளான வெள்ளிக்கிழமை, பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று நடக்கும் பரணிக்கொடை விழாவான நாளை (சனிக்கிழமை) மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என வருடத்தில் 3 தடவை நடக்கிறது. பூஜையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    விழாவில் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து கோவிலிலும் சுற்றுப்புற பகுதிகளிலும் பொங்கலிட்டு வழிபடுவார்கள். விழாவை முன்னிட்டு முக்கிய இடங்களில் இருந்து மண்டைக்காட்டிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக் கொடைவிழாவில் பக்தர் கள் காணிக்கை செலுத்து வதற்காக கோவிலின் முன்பு வைக்கப் பட்டிருந்த திறந்த வார்ப்பு குமரி மாவட்ட திருக்கோ வில்களின் இணை ஆணையர் ஞானசேகர், உதவி ஆணையர் தங்கம், பத்மனாபபுரம் தேவஸ்வம் தொகுதி கண்காணிப்பாளர் ஆனந்த், ஆய்வாளர் செல்வி, கோவில் ஸ்ரீகாரியம் செந்தில்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள், சுயஉதவிக்குழு பெண் கள், பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. அதில் ரூ.3,87,205 ரொக்கமாக கிடைக்கப்பெற்றது.

    • சமீபத்தில் டவுன் புட்டாரத்தி அம்மன் கோவில் அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் கொடைவிழா நடைபெற்றது.
    • தர்மர், மாதவன் மற்றும் ஆனந்த் ஆகியோர் சேர்ந்து வெங்கடேஷ் தரப்பினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பழைய பேட்டை சண்முகரெங்கையன் கட்டளை பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    சரமாரி தாக்குதல்

    இவர் டவுன் வடக்கு ரதவீதியில் தள்ளுவண்டியில் வளையல் கடை நடத்தி வருகிறார். சமீபத்தில் டவுன் புட்டாரத்தி அம்மன் கோவில் அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் கொடைவிழா நடைபெற்றது. இதில் வெங்கடேசின் சகோதரர் நெல்லையப்பன், அவரது மகன் இசக்கிராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்ற பெட்டி பெருமாள் மற்றும் அவரது நண்பர்களுக்கும், இசக்கிராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தட்டிக்கேட்க வெங்கடேஷ் சென்றபோது பெட்டி பெருமாள், தர்மராஜ் என்ற தர்மர் உள்பட 4 பேர் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வெங்கடேசின் மண்டை உடைந்தது. இதையடுத்து அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக அவர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் பெட்டி பெருமாள், தர்மராஜ் என்ற தர்மர், மாதவன் மற்றும் ஆனந்த் என்ற ஆனந்தகுமார் ஆகியோர் சேர்ந்து வெங்கடேஷ் தரப்பினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.

    இதையடுத்து 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் தர்மராஜ் என்ற தர்மர் வள்ளியூர் சார்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

    • கொடைவிழாவையொட்டி காலை 9மணிக்கு தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.
    • 12மணிக்கு படப்புடன் கூடிய சாமக்கொடை நடைபெற்றது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே பெருமாள்குளம் சிவனைந்த பெருமாள் சுவாமி கோவிலில் ஆவணி கொடை விழா நடைபெற்றது. விழாவையொட்டி காலை 9மணிக்கு கலுங்காவுடையார் சாஸ்தா, வெற்றி விநாயகர், சுந்தராட்சி அம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், 12மணிக்கு கணபதி ஹோமம், கும்பம் ஏற்றுதல், தீபாராதனை, மாலை 6மணிக்கு சிவன் பூஜை, தீபாராதனை, 6.30மணிக்கு கன்னியை அழைத்து வழிபடுதல், தொடர்ந்து காவடி பிறை முருகன் கோவிலில் இருந்து நேமிசம், பால்குடம் எடுத்து வருதல், இரவு 7மணிக்கு பெண்கள் பொங்கலிடுதல், இரவு 9மணிக்கு சாஸ்தா அழைப்பு. 10மணிக்கு அலங்கார தீபாராதனை, 12மணிக்கு படப்புடன் கூடிய சாமக்கொடை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • அம்மனுக்கு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது.
    • 41 நாட்கள் மாலை போட்டு விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள்.

    முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவிலில் பூக்குழி கொடைவிழா நேற்றுமுன்தினம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இரவு யானைகளுக்கு கஜபூஜையும், திருவிளக்குபூஜையும் நடந்தது.

    ஆரல்வாய்மொழி வடக்கூர் அகலிகை ஊற்று பிள்ளையார் கோவிலில் இருந்து நேற்று காலையில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட குதிரைகள், யானைகள் முன்னே சென்றன. அதைத்தொடர்ந்து பக்தர்கள் பால்குடம், பூங்கரகம், முளைப்பாரியை சுமந்து வந்தனர்.

    அதன்பின்னால் அலகு குத்தி பறக்கும் காவடி, சூரிய காவடிகளை சுமந்தபடியும் பக்தர்கள் வந்தனர். இந்த ஊர்வலத்தை கோவில் நிர்வாக குழு தலைவர் அருணாசலம் தலைமையில் ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் தொடங்கிவைத்தார். ஊர்வலம் வடக்கூர், சந்திப்பு, எம்.ஜி.ஆர். நகர், மருத்துவர் நகர், மூவேந்தர் நகர் வழியாக ஆலமுடு அம்மன் கோவிலை அடைந்தது.

    கோவிலை வந்தடைந்ததும் அம்மனுக்கு அபிஷேகமும், தொடர்ந்து சாமிகளுக்கு பாயாச குளியலும், பின்னர் அலங்கார தீபாராதனையும் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் தளவாய்சுந்தரம், எம்.ஆர்.காந்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வழிநெடுகிலும் ஊர்வலத்தில் வந்த பக்தர்களுக்கு நீர், மோர், பழங்கள் வழங்கப்பட்டன. மாலையில் பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து வந்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து அம்மன் தேரில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு பூப்படைப்பும், அதனை தொடர்ந்து 41 நாட்கள் மாலை போட்டு விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள்.

    இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதிகாலையில் அம்மனுக்கு ஊட்டுபடைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழா ஏற்பாட்டை முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் இ.அருணாசலம் மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் சேவா சங்கத்தினர், விழா குழுவினர் செய்து இருந்தனர்

    ×