என் மலர்
நீங்கள் தேடியது "கிராமசபை கூட்டம்"
- ஏர்வாடியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.
- தூய்மைப்பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்து உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம், ஏர்வாடி ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்றத்தலைவர் செய்யது அப்பாஸ் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் உடையார் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் செல்வத்துரை அனைவரையும் வரவேற்றார். கடலாடி ஊராட்சி ஒன்றியம் சார்பில் பற்றாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் கலந்து கொண்டார். ஏர்வாடி ஊரக வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி கிராம ஊராட்சி திட்டம் உறுதி செய்யபட்டன. உலக தண்ணீர் தின சிறப்பு தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஊராட்சித்தலைவர் செய்யது அப்பாஸ் பேசும்போது, பொதுமக்கள் குப்பைகளை குப்பைத்தொட்டியில் போட வேண்டும், ஏர்வாடியை தூய்மை நகரமாக மாற்ற ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,நெகிழி பயன்படுத்தாமல் மஞ்சள் பை உபயோகப்படுத்த வேண்டும், தூய்மைப்பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்து உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
- வெய்க்காலிபட்டியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
- இன்று ஆசீர்வாதபுரம் சர்ச் தெருவில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
கடையம்:
கடையம் ஒன்றியம் கடையம் பெரும்பத்து ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டூர் பகுதியின் பெயரை பஞ்சாயத்து நிர்வாகம் மாற்றம் செய்ய முயற்சி செய்து வருவதாகக் கூறி மேட்டூர் பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கிராமசபை கூட்டம்
இந்நிலையில் கடந்த 15-ந்தேதி கடையம் பெரும்பத்து ஊராட்சி வெய்க்காலிபட்டியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் கிராமசபைக் கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்கும் வகையில் இன்ஸ்பெக்டர் மகேஸ்குமார், சுரேஷ் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக குவிக்கப்பட்டனர்.இதற்கிடையே சிறப்பு கிராமசபை கூட்டம் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் ஒத்தி வைக்கப்படுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (17-ந் தேதி) கடையம்பெரும்பத்து ஊராட்சி ஆசீர்வாதபுரம் சர்ச் தெருவில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால் இன்றும் கிராமசபைக்கூட்டத்தை 2- வது முறையாக மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் ரத்து செய்து உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- விருதுநகர் மாவட்டத்தில் 22-ந்தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.
- மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினமான வருகிற 22-ந்தேதி (புதன்கிழமை) கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், உலக தண்ணீர் தினத்தின் கருப்பொரு ளினைப் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவா தித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல், சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதிசெய்வது குறித்து விவாதித்தல் நடக்கிறது.
மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2021-22 மற்றும் 2022-23ம் ஆண்டு ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விவரங்கள் குறித்து விவாதித்தல், கிராம வளர்ச்சித்திட்டம் குறித்து விவாதித்தல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம் குறித்து விவாதித்தல், ஜல் ஜீவன் இயக்கம் குறித்து விவா தித்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதித்தல் நடக்கிறது.
எனவே வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
- பரந்தூரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 5-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- புதிய விமான நிலைய அறிவிப்புக்கு பின்னர் நடந்த அனைத்து கிராமசபை கூட்டங்களிலும் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம்:
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு விளைநிலங்கள், குடியிருப்புகளை கையகப்படுத்துவதற்கு அதை சுற்றியுள்ள பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் புதிய விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் இன்று உலக தண்ணீர் தினத்தையொட்டி சிறப்பு கிராமசபை கூட்டம் அனைத்து கிராமங்களிலும் நடைபெற்றது.
பரந்தூரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 5-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே புதிய விமான நிலைய அறிவிப்புக்கு பின்னர் நடந்த அனைத்து கிராமசபை கூட்டங்களிலும் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏகனாபுரத்தில் நடந்த கிராமசபை கூட்டத்திலும் புதிய விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 274 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது.
- இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 359 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர்:
உலக தண்ணீர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடந்தது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மொத்தம் 1159 கிராமங்களில், கிராமசபை கூட்டம் அந்தந்த தலைவர்கள் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் காலை 11 மணியளவில் நடந்தது. இதில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதிக்கப்பட்டது.
மேலும் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது கிராம வளர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன் இயக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
வில்லிவாக்கம் ஒன்றியம் பாண்டீஸ்வரன் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டார். அவர் பொது மக்களிடம் வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 274 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 359 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
- மதுரை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் மே தின சிறப்பு கிராமசபை கூட்டம் நடக்கிறது.
- இந்த தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் வெளியிட்டுள்ளார்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மே 1-ந்தேதி தொழிலாளர் தினத்தன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கிராமசபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணிகள் குறித்து விவாதிக் கப்படவுள்ளது.
இந்த கூட்டங்களில் அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். மேலும், கிராமசபை விவாதங்களில் பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. எனவே, மதுரை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் அனைவரும் பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராணிப்பேட்டை கலெக்டர் உத்தரவு
- கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், வருகிற மே 1-ந் தேதி கிராமசபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2023-ம் ஆண்டிற்கான கிராம சபைக்கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தன்று காலை 11 மணிக்கு கிராம சபைக்கூட்டம் தவறாமல் நடத்தப்பட வேண்டும்.
இந்த கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் (2023-2024), பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வறுமை குறைப்புத் திட்டம் மற்றும் இதர பொருட்கள் விவாதிக்கப்பட உள்ளது.
இந்த கிராம சபை கூட்டங்களில் தாசில்தார்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் வருகிற 1-ந் தேதி நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வருகிற 1-ந் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி கிராமசபைக் கூட்டம் காலை 11 மணியளவில் நடக்கிறது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் குறித்த கூட்டப் பொருள்கள் பற்றி விவாதிக்கவும், கூட்டப்பொருள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சியில் தொழிலாளர் தினத்தின் கருப்பொருளை பற்றி விவாதிக்கவும், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கவும், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்ற விபரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு திட்டம், பிரதமரின் கிராம சாலைத் திட்டம், கிராம வளர்ச்சி திட்டம் 2023-2024, தூய்மை பாரத இயக்க தனிநபர் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் திட்டம், பிளாஸ்டிக்குக்கு மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவித்தல், பிளாஸ்டிக் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு, திரவக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள், ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், பண்ணை சார், சாரா வாழ்வாதார இயக்கம் மற்றும் வறுமை குறைப்பு திட்டம் ஆகியவை கிராம சபை கூட்டத்திற்கான கூட்டப்பொருளில் விவாதிக்கப்பட உள்ளன.
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
- உழவர் நலத்துறை, சுகாதாரம்,கால்நடை துறை, அங்கன்வாடி, வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
- கிராம வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், வேலப்ப நாயக்கன்வலசு கிராம ஊராட்சி சார்பில் கருப்பன் வலசு புதூரில் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி துரைசாமி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சோமசுந்தரம் மற்றும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, சுகாதாரம்,கால்நடை துறை, அங்கன்வாடி, வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர். கிராம வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஆனால் கல்வித்துறை சார்பில் யாரும் கலந்து கொள்ளாததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
- கூட்டத்தில் வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் கடன் உதவி வழங்கப்பட்டது.
- பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் , ஊர் பொதுமக்கள் 368 பேர் கலந்து கொண்டனர்.
கடையம்:
கோவிந்தபேரி ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் டி. கே. பாண்டியன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் ருக்மணி , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமலை முருகன் , ராஜசேகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் தென்னங்கன்று நடுதல், வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் கடன் உதவி வழங்குதல் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் இசேந்திரன் ,வார்டு உறுப்பினர்கள் இசக்கி பாண்டி, இளவரசி, பொன்னுத்தாய்,நாகராஜன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சங்கரவேல், கிராம உதவியாளர் சக்தி,வேளாண் அலுவலர் ஜெகன் மற்றும் ஊராட்சி செயலாளர் மூக்காண்டி , ஊராட்சி பணியாளர்கள் மற்றும் ரேசன்கடை பணியாளர் மங்களம், மாரித்துரை ,ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி மாணிக்கம்,ஓய்வு பெற்ற ஆசிரியர் பூலோக பாண்டியன், முன்னாள் தலைவர் சி. ராசு,முன்னாள் துணைத்தலைவர் கணேசம்மாள், முருகன், செல்லப்பா, சிவா மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் , ஊர் பொதுமக்கள் 368 பேர் கலந்து கொண்டனர்.
- மக்களை அதிகமாக சந்திக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- பொதுமக்கள் வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கனிமொழி எம்.பி பேசினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. மாப்பிளையூரணி ஊராட்சி ராம்தாஸ் நகரில் ஊராட்சி தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
கிராமங்களில் மக்களை அதிகமாக சந்திக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தேர்தலுக்கு முன்பே கிராம சபை கூட்டங்களை நடத்தி மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்துள்ளோம். ஊராட்சி தலைவர் சரவணக்குமார், ஊராட்சி வளர்ச்சிக்காக தீவிரமாக செயல்படுகிறார். அரசின் திட்டங்களை ஊராட்சிக்கு பெறுவதில் முழு கவனமுடன் உழைக்கிறார். என்னை சந்திக்கும்போதெல்லாம் ஏதாவது ஒரு திட்டங்களை கோரிக்கைகளாக வைப்பார். கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
கூட்டத்தில் சண்முகையா எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கூடுதல் கலெக்டர் தாக்ரே சுபம் ஞானதேவ்ராவ், வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்ம சக்தி, ஊராட்சி உதவி இயக்குனர் உலகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன் பொன்மணி, வசந்தா மற்றும் அதிகாரிகள் ,அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ஜெயகுமார் நன்றி கூறினார். கூட்டுடன்காடு ஊராட்சி தலைவர் மாங்கனி தலைமையில்
கீழ கூட்டுடன்காட்டு ஆலமரத்தடியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் துணைத்தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஊராட்சி செயலர் கோமதி வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்களை வாசித்து நிறைவேற்றினார். முள்ளக்காடு ஊராட்சி கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக ஊராட்சித் தலைவர் கோபிநாத்நிர்மல் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் துணைத்தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஊராட்சி செயலர் சங்கர ராமசுப்பிரமணியன் வரவேற்று வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்களை வாசித்து நிறைவேற்றினார்.
கோரம்பள்ளம் ஊராட்சி பெரியநாயகிபுரத்தில் ஊராட்சித் தலைவர் செல்வபிரபா அதிசயராஜ் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் துணைத்தலைவர் பொன்மாரி செல்வராஜ் , ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர் .ஊராட்சி செயலர் சீனிராசு வரவேற்று வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்களை வாசித்து நிறைவேற்றினார்.
இதேபோல் ஒன்றியத்தில் கிராம சபை கூட்டங்கள் குமரகிரி ஊராட்சித்தலைவர் ஜாக்சன் துரைமணி, மறவன்மடம் ஊராட்சித்தலைவர் லில்லிமலர், குலையன்கரிசல் ஊராட்சித்தலைவர் முக்கனி, கீழதட்டப்பாறை ஊராட்சித்தலைவர் பத்மா பொன்னுச்சாமி, அய்யனடப்பு ஊராட்சித்தலைவர் அதிஷ்ட கணபதி ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்று வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்கள் வாசித்து நிறைவேற்றபட்டது.
- ஆண்டிப்பட்டியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
- ஊராட்சி மன்றத்தலைவர் மீனாள் தலைமை தாங்கினார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி யூனியன் ஆண்டிப்பட்டி ஊராட்சி மன்றத்தில் மேதின சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் மீனாள் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராமசந்திரன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் செல்வம் வரவேற்று தீர்மான அறிக்கை வாசித்தார். யூனியன் பற்றாளர் முத்தையா ''எங்கள் கிராமம் எழில்மிகு கிராமம்'' உறுதி மொழி வாசித்தார்.
இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் டயானா, கிராம நிர்வாக அலுவலர்கள் கீதா, பாண்டியம்மாள், உமாதேவி, தலைமை ஆசிரியர் கணேசன், கிராமசுகாதார செவிலியர் சித்ரா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி உறுப்பினர் அழகர் நன்றி கூறினார்.