என் மலர்
நீங்கள் தேடியது "வாலிபர் மரணம்"
- குந்தன் குமார் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.
- ராமாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் குந்தன்குமார் (வயது27). இவர் சென்னை ராமாபுரம் சாந்தி நகரில் நண்பர்களுடன் தங்கி அதே பகுதியில் உள்ள பிரபல சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை குந்தன் குமார் செல்போனில் தனது பெற்றோருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி சுருண்டு கீழே விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக குந்தன் குமாரை மீட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குந்தன் குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். குந்தன் குமார் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து ராமாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காஞ்சிபுரம் மாநகர பகுதிகளுக்கு ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் பகுதியிலிருந்தும், ஓரிக்கை பாலாறு பகுதிகளில் இருந்தும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீரில் கழிவுநீர் ஒரு வார காலமாக கலந்து வருவதால் இந்தப் பகுதியில் உள்ள சுமார் 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாண்டுகணீஸ்வரர் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மகன் சதிஷ் குமார். (21) மனநலம் பாதிக்கப்பட்டவர்.
சதீஷ் குமாருக்கு நேற்று அதிகாலையில் இருந்து வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டதால் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததால் அவர் இறந்ததாக பெற்றோர் புகார் தெரிவித்தனர். அதே பகுதியைச் சேர்ந்த வள்ளி -தமிழரசன் தம்பதியின் 10 மாத குழந்தை இமித்திரா மற்றும் 4 வயது சிறுவன் விஷ்ணுவர்தன் ஆகியோர்களுக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் சுகாதாரத்துறையினர் மருத்துவ முகாம் நடத்தினர். கலந்து கொண்ட 45 நபர்களில் ஓபி குளம் பள்ளத்தெருவை சேர்ந்த விஜி (வயது 35), மோனிஸ்ரீ (9), பிரியதர்ஷினி (14) ஆகிய 3 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு கண்டறியப்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரியாராஜ் கூறியதாவது:- மாண்டுகணீஸ்வரர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமாருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டு உடல் பலவீனமடைந்து குறைந்த ரத்த அளவு உருவாகி அதிர்ச்சி ஏற்பட்டது. இது மிகவும் கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான நீரிழப்பு காரணமாக ஏற்படும் சிக்கல்களில் ஒன்றாகும். குறைந்த ரத்த அளவு ரத்த அழுத்தம் குறைவதற்கும் உடலில் ஆக்சிஜனின் அளவு குறைவதற்கும் வழிவகுக்கும். இதனால் தான் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். இதுமட்டுமின்றி ரைஸ்மில்லில் பணிபுரியும் திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை சேர்ந்த இருளர் இன பெண் இரையரசி (வயது 20) உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற தகவல் பரவியது.
மேலும், அதே பகுதியைச் சேர்ந்த 4 பேருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களையும் கண்காணித்து வருகிறோம். குடிநீர் பிரச்சினையால் இந்த வயிற்றுப் போக்கு ஏற்பட்டதுபோல் தெரியவில்லை. குடிநீர் பிரச்சினையால் வயிற்று போக்கு ஏற்பட்டிருந்தால் அந்தப் பகுதியில் வசிக்கும் பலருக்கும் பாதிப்பு இருக்கும். இவர்கள் சாப்பிட்ட உணவில் ஏதாவது பிரச்சினை இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.
அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே நாங்கள் மருத்துவ முகாம் நடத்தினோம். தண்ணீரில் கூடுதலாக ஒரு சதவீதம் குளோரின் கலந்து விநியோகிக்கும்படி வலியுறுத்தியுள்ளோம். தண்ணீரையும் ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம் மாநகர பகுதிகளுக்கு ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் பகுதியிலிருந்தும், ஓரிக்கை பாலாறு பகுதிகளில் இருந்தும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீரில் கழிவுநீர் ஒரு வார காலமாக கலந்து வருவதால் இந்தப் பகுதியில் உள்ள சுமார் 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மாநகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
- அருண்குமார் தனது அறையில் நண்பர்களுடன் சிக்கன் பிரியாணி உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது அவருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது.
- மூச்சு திணறல் ஏற்பட்டு நெஞ்சு வலிப்பதாக அருண்குமார் நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த லக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தீர்த்தகிரி.
இவரது மகன் அருண்குமார் (வயது24). இவர் தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை பகுதியில் தங்கி இருந்து அங்குள்ள பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.
நேற்று அருண்குமார் தனது அறையில் நண்பர்களுடன் சிக்கன் பிரியாணி உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது அவருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது.
பின்னர் மூச்சு திணறல் ஏற்பட்டு நெஞ்சு வலிப்பதாக அவர் நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக அவரை நண்பர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரியாணி சாப்பிட்டவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற வேன் மீது மோதினார்.
- தூக்கி வீசப்பட்ட வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
போரூர்:
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்துரு (வயது22). மினி வேன் டிரைவர். இவர் நேற்று இரவு வேனில் மரசாமான்கள் ஏற்றிக் கொண்டு புழல் பகுதியில் இருந்து பைபாஸ் சாலை வழியாக தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
மதுரவாயல் அருகே வந்தபோது வேனை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற வேன் மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவருக்கு சுமார் 30 வயது இருக்கும். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மினி வேன் டிரைவர் சந்துருவை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
- தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பெங்களுரில் இருந்து சேலம் நோக்கி வந்த ெரயில் மோதி காயமடைந்தார்.
- ஆனால் சிகிச்சை பலனின்றி மோகன் உயிரயிழந்தார்.
ஓசூர்,
ஓசூர் அருகே பஞ்சாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த முனியப்பா என்பவரது மகன் மோகன் (24). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்,
இந்த நிலையில் நேற்று மாலை, தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள டிவிஎஸ் ஷோரூம் அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பெங்களுரில் இருந்து சேலம் நோக்கி வந்த ெரயில் மோதி காயமடைந்தார்.
உடனடியாக ெரயில்வே போலீசார் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர், ஆனால் சிகிச்சை பலனின்றி மோகன் உயிரயிழந்தார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பொங்கல் பண்டிகைக்காக யுகேஷ், தனது மனைவியுடன் பொலவபாளையத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றார்.
- இரவில் கழிப்பறைக்கு சென்ற யுகேஷ் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை என தெரிகிறது.
ஈரோடு:
ஈரோடு, சடையம் பாளையம், பகவதியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் யுகேஷ் (28). இவருக்கும் கோபியை அடுத்துள்ள பொலவபாளையம் பகுதியை சேர்ந்த கலைவாணி (23) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு முன்னரே 2 முறை ஏற்பட்ட வாகன விபத்தில், யுகேஷுக்கு காலிலும், முதுகு தண்டுவடத்திலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதனால் அவருக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்காக யுகேஷ், தனது மனைவியுடன் பொலவபாளையத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றார்.
இரவில் கழிப்பறைக்கு சென்றவர் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை என தெரிகிறது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கழிப்பறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மயங்கிய நிலையில் யுகேஷ் கிடந்துள்ளார்.
இதையடுத்து, நம்பியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே யுகேஷ் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து வரப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- திருக்கழுக்குன்றம் அருகே குன்னப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பொன்னுரங்கம்.
- மதுக்கடை அருகே வாலிபர் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் அருகே குன்னப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பொன்னுரங்கம் (வயது 46) இவர் திருக்கழுக்குன்றம் வடக்கு பட்டு பைபாஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை அருகே மர்மமாக இறந்து கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்னுரங்கம் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாலிபர் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது.
- குடிபோதையில் வாலிபர் ஒருவரை தாக்கிய சத்தம் கேட்டதாக அந்தப் பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
குழித்துறை:
குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ளது கழுவன்திட்டை.
இந்த பகுதியில் இன்று காலை பொதுமக்கள் சென்றபோது சாலையில் வாலிபர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்தனர். அருகில் சென்று பார்த்த போது வாலிபரின் உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது.
இதனால் சந்தேகமடைந்த மக்கள் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் வாலிபரை பார்த்தபோது அவர் பிணமாக கிடப்பது தெரியவந்தது.
வாலிபர் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இறந்த வாலிபர் களியல் பகுதியை சார்ந்த மணிகண்டன்(வயது39) என்பதும், டிரைவராக வேலை பார்ப்பதும் தெரிய வந்தது. அவரது உடலிலும், தலையிலும் காயங்கள் இருந்ததால் இவரை யாராவது அடித்து கொலை செய்து இங்கு கொண்டு வந்து உடலை வீசியிருக்கலாமா? அல்லது வேறு ஏதாவது காரணங்களால் அவர் இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று நள்ளிரவு கழுவன் திட்டை பகுதியில் சிலர் குடி போதையில் வாலிபர் ஒருவரை தாக்கிய சத்தம் கேட்டதாக அந்தப் பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிராவில் ஏதேனும் பதிவாகி உள்ளதா?என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
- காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாம்பவர்வடகரை:
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை அருகே உள்ள ஆய்க்குடி சேனை விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருபவர் மாடசாமி. இவரது மகன் மணிச்சாமி(வயது 30). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார்.
இவர் இன்று அதிகாலை ஆய்க்குடி டவுன் பஞ்சாயத்து அலுவலகம் அருகே சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த காட்டுப்பன்றி கூட்டங்கள் அவரை விரட்டி சென்று கடித்து குதறி உள்ளது.
இதில் படுகாயம் அடைந்த மணிச்சாமியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக ஆய்க்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்டுப்பன்றி விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதாகவும், காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தரப்பில் தென்காசி மாவட்ட நிர்வாகத்திடம் தொடர் கோரிக்கைகள் வைத்து வரும் நிலையில், காட்டுப்பன்றி கடித்து வாலிபர் உயிரிழந்துள்ளார்.
- பங்கு சந்தையில் விக்னேஷ் முதலீடு செய்ததாகவும், அதில் லட்சக்கணக்கான பணத்தை இழந்ததால் மாயமானதாகவும் கூறப்படுகிறது.
- விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கிணற்றில் தவறி விழுந்து இறந்தரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாமக்கல்:
நாமக்கல் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே கூட்செட் உள்ளது. அதன் அருகில் உள்ள ஒரு கிணற்றில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்தது. இதனை பார்த்த அந்த பகுதியினர் நாமக்கல் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் தீயணைப்புத்துறை உதவியுடன் கிணற்றில் பிணமாக மிதந்த வாலிபரின் உடலை மீட்டனர்.
ஆனால் கிணற்றில் பிணமாக மிதந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனே தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கிணற்றில் பிணமாக கிடந்தவர் நேற்று மாயமான நாமக்கல் கொசவம்பட்டியை சேர்ந்தவர் பட்டதாரி ஆசிரியர் அசோகன். இவரது மகன் விக்னேஷ் (வயது 24) என்பது தெரியவந்தது. இவர் என்ஜினீயரிங் படித்துள்ளார்.
மேலும் பங்கு சந்தையில் விக்னேஷ் முதலீடு செய்ததாகவும், அதில் லட்சக்கணக்கான பணத்தை இழந்ததால் மாயமானதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கிணற்றில் தவறி விழுந்து இறந்தரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மகேஷின் தந்தை நடராஜன் நேற்று வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
- இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சித்தம்பாக்கம் கிராமம், செல்லியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் மகேஷ் (வயது24) ஆவார். இந்த வாலிபர் கடந்த திங்கட்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது கட்டிலில் இருந்து திடீரென கீழே விழுந்தார்.
இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி நேற்று முன்தினம் இரவு வாலிபர் மகேஷ் பரிதாபமாக பலியானார்.
இந்தச் சம்பவம் குறித்து மகேஷின் தந்தை நடராஜன் நேற்று வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
- வாலிபர் நடனமாடி மயங்கி விழுந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
- பிப்ரவரி 22-ந்தேதி ஐதராபாத்தில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்த போது 24 வயது போலீசார் ஒருவர் மாரடைப்பால் இறந்தார்.
திருப்பதி:
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் முத்யம் (வயது 19). இவர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிர்மல் மாவட்டத்தில் உள்ள பார்டி கிராமத்தில் உறவினரின் திருமணத்திற்கு சென்றார்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இசை நடனம் என திருமண வரவேற்பு நிகழ்ச்சி களை கட்டியது. இதனால் வாலிபர் முத்யம் கொண்டாட்ட மனநிலையில் இருந்தார்.
அப்போது விருந்தினர்கள் முன்னிலையில் ஒரு பிரபலமான இசைக்கு நடனமாடினான்.
இதனை உறவினர்கள் வெகுவாக ரசித்தனர். மேலும் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். நடனமாடிக்கொண்டிருந்த போது, முத்யம் திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார்.
விருந்தினர்கள் அவரை பைன்சா பகுதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
வாலிபர் நடனமாடி மயங்கி விழுந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
4 நாட்களில் தெலுங்கானாவில் இதுபோன்ற 2-வது சம்பவம் நடந்துள்ளது.
பிப்ரவரி 22-ந்தேதி ஐதராபாத்தில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்த போது 24 வயது போலீசார் ஒருவர் மாரடைப்பால் இறந்தார்.
இந்த சம்பவங்களால் தெலுங்கானாவில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.