search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நில ஆவணங்கள் இணைப்பு"

    • பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியுதவி திட்டத்தில் பயனாளர் குறியீட்டுடன் அவர்களுக்கு சொந்தமான நில ஆவணங்களை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • இந்த இணைப்பு மற்றும் பதிவு செய்யும் பணி களை ஜூலை 31-ந்தேதி க்குள் முடித்திருக்க வேண்டு ம் எனவும் தெரிவித்தனர்.

    திண்டுக்கல்:

    பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியுதவி திட்டத்தில் இடம்பெற்றுள்ள 1.28 லட்சம் விவசாயிகளின் பயனாளர் குறியீட்டுடன் அவர்களுக்கு சொந்தமான நில ஆவணங்களை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்தொகை தலா ரூ. 2 ஆயிரம் வீதம் 3 தவணை களில் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. இதில் தகுதியில்லா பயனாளிகள் பலர் நிதி உதவி பெறுவதாக, மத்திய அரசு சுட்டிக்காட்டி யதை அடுத்து கடந்த சில மாதங்களாக ஆய்வு ப்பணிகள் நடைபெற்று வந்தன.

    அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள 9,438 பேர் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற்று வருவது குறித்து விசாரிக்கப்பட்டு வந்தது. அதில் தகுதியற்றதாகக் கண்டறியப்பட்ட சுமார் 5,400 விவசாயிகள் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

    இந்நிலையில் எதிர்கால த்தில் இதுபோல் தகுதி யில்லாத பயனாளிகள் இடம் பெறுவதை தடுக்கும் வகையில் பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்து க்கான விவசாயிகளின் பயனாளர் குறியீட்டுடன் (ஐ.டி.) அவர்களுக்கு சொந்தமான நில ஆவண ங்களை இணைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 1.28 லட்சம் விவசாயிகளின் நில ஆவணங்கள், பிரதம மந்திரி கிசான் பயனாளர் குறியீட்டுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    மாவட்டத்தில் தற்போது வரை 62 ஆயிரம் விவசாயிகளின் விபரங்கள் பயனாளர் குறியீட்டுடன் இணைக்கப்பட்டு ள்ளது.

    இது தொடர்பாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது,

    பிரதம மந்திரி கிசான் திட்டப்பயனாளிகள் தங்களின் பயனாளர் குறியீட்டுடன் நில ஆவண ங்களை இணைத்து பதிவு செய்திருந்தால் மட்டுமே இனி நிதி உதவித்தொகை வழங்கப்படும். அதேபோல் முதல்முறையாக பயனாளி களின் உயர்வாழ் சான்றி தழை சமர்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு ள்ளது.

    ஆதாருடன் இணைக்கப்பட்ட பயனாளி களின் செல்போனுக்கு கிடைக்கும் ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவு ச்சொல்லை பயன்படுத்தியும், பொது இ-சேவை மைய ங்களில் கைரேகை பதிவு செய்தும் பயனாளர் பட்டி யலில் தொடர்ந்து நீடிக்க லாம். இந்த இணைப்பு மற்றும் பதிவு செய்யும் பணி களை ஜூலை 31-ந்தேதி க்குள் முடித்திருக்க வேண்டு ம் எனவும் தெரிவித்தனர்.

    ×