என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அமெரிக்காவில் கனமழை"
- தலைநகர் வாஷிங்டனில் புயல் தாக்கத்தால் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன.
- தேசிய உயிரியல் பூங்கா, நூலகங்கள், அருங்காட்சியகங்களும் மூடப்பட்டன. புயல்-கனமழை காரணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
வாஷிங்டன்:
மத்திய-அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான சூறாவளி புயல், அமெரிக்காவின் 10 மாகாணங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைநகர் வாஷிங்டன், நியூயார்க், டென்னிசி, பிலடெல்பியா, அரிசோனா, நியூ மெக்சிகோ உள்பட 10 மாகாணங்களை சூறாவளி புயல் தாக்கியது. பலத்த காற்று காரணமாக மரங்கள், மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. புயலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் 10 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின.
புயல் தொடர்பாக தேசிய வானிலை மையம் கூறும்போது, சூறாவளி, ஆலங்கட்டி மழை, மின்னல் உள்ளிட்ட அபாயங்கள் இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
வாஷிங்டன்-பால்டி மோர் பிராந்தியம், புயல் தாக்குதலில் முக்கிய பகுதியாக உள்ளது என்று எச்சரிக்கை விடுத்தது. மேலும் இன்று வரை வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
தலைநகர் வாஷிங்டனில் புயல் தாக்கத்தால் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. மேலும் தேசிய உயிரியல் பூங்கா, நூலகங்கள், அருங்காட்சியகங்களும் மூடப்பட்டன. புயல்-கனமழை காரணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இடியுடன் கூடிய மழை காரணமாக நியூயார்க் வாஷிங்டன், பில்டெல்பியா அட்லாண்டா, பால்டிமோர் விமான நிலையங்களில் விமானங்கள் புறப்படுவதை நிறுத்தி வைக்க மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் உத்தரவிட்டது.
2600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 7,700 விமானங்கள் தாமதமாக வந்தன. புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
- கலிபோர்னியா மற்றும் சான்பிரான்சிஸ்கோ நகரில் தொடர்ந்து கொட்டி தீர்த்து வரும் கனமழையால் ரோடுகளில் தண்ணீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுகிறது.
- ஆறுகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது.
நியூயார்க்:
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்புயல் வீசியது. இதனால் அந்நாட்டின் பல்வேறு மாகாணங்கள் பனியால் சூழப்பட்டன. ரோடுகளில் பல அடி உயரத்துக்கு பனிக்கட்டிகள் உறைந்து போய் இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர்.
இந்த பனிப்புயலில் சிக்கி 60-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். இந்த சோகம் மறைவதற்குள் தற்போது அமெரிக்காவில் 2 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. கலிபோர்னியா மற்றும் சான்பிரான்சிஸ்கோ நகரில் தொடர்ந்து கொட்டி தீர்த்து வரும் கன மழையால் ரோடுகளில் தண்ணீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆறுகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. பல பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளத்தில் பல வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. இதையடுத்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போய் உள்ளது. பல இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு உள்ளது. பனிப்புயலை தொடர்ந்து தற்போது பெய்யும் மழை அமெரிக்காவை புரட்டி போட்டு உள்ளது.
- அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது.
- கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 16 பேர் பலியாகினர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை மேலும் பாதித்துள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது.
இந்நிலையில், கெண்டகி மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 16 பேர் பலியாகினர்.
தொடர் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மின்தடையால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.
ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் மக்கள் பத்திரமாக மீட்கப்ப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
வெள்ளத்தின் அளவு அதிகரித்து வருவதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அம்மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்