search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனித எலும்பு கூடு"

    • எலும்பு கூடை கண்டு அப்பகுதி வழியாக சென்ற மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியாமல் உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.

    அரூர்,

    கிருஷ்ணகிரி-தருமபுரி மாவட்ட எல்லை பகுதியான தொட்டம்பட்டி ரெயில்வே பாலம் அருகே தென்பெண்ணை ஆற்றின் பாறையில் சிக்கிக் கிடந்த எலும்பு கூடை கண்டு அப்பகுதி வழியாக சென்ற மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் எலும்புக்கூடு கிடந்த இடம் குறித்து விசாரணை நடத்தினர்.

    இது தருமபுரி மாவட்டம், மொரப்பூர் பகுதியை சேர்ந்தது என வருவாய் துறையினர் தெரிவித்த நிலையில், எலும்பு கூடு குறித்த தகவல்களை மொரப்பூர் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டும், தற்போது வரை அந்த பகுதியில் மனித எலும்புக்கூடு அகற்றப்படாமல் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    அங்கு காணப்படும் எலும்பு கூடில் பச்சை நிற புடவை கிழிந்து சிக்கி இருப்பதை அடுத்து இறந்தது பெண்ணாக இருக்கக்கூடும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

    இறந்து பல நாட்கள் ஆகிய நிலையிலும் பொதும க்களின் கண்ணில் பட்டும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் இதுவரை அந்த எலும்புக்கூடு அகற்றப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் இறந்து எலும்பு கூடாக காட்சி அளிக்கும் உடல் யாருடையது? எந்த ஊரை சேர்ந்தவர்? கொலை செய்யப்பட்டாரா? தண்ணீரில் அடித்து வரப்ப ட்டாரா? அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா? என்று பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியாமல் உள்ளது என்று கூறும் சமூக ஆர்வலர்கள் இன்று வரை காவல்நிலைய எல்லை கண்டறிய மட்டுமே ஆய்வு நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • மனித எலும்பு கூடு மற்றும் மண்டை ஓடு கிடந்தது.
    • எலும்பு கூடை மீட்டு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை 

    கோவை மதுக்கரை கிராம நிர்வாக அலுவலராக உள்ளவர் பாலசந்திரன். இவர் தனது உதவியாளருடன் மதுக்கரை ராணுவ முகாம் எதிரே ரோந்து சென்றனர். அப்போது அங்கு துர்நாற்றம் வீசியது. உடனே அவர்கள் அங்கு சென்று பார்த்தனர்.


    அங்கு மனித எலும்பு கூடு மற்றும் மண்டை ஓடு கிடந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து மதுக்கரை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து எலும்பு கூடை மீட்டு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.


    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு இங்கு கிடந்த எலும்பு கூடு ஆணின் எலும்பா அல்லது பெண்ணா? அது யார்? எங்வாறு இறந்தார் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×