search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saradha Women’s College"

    • நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் குறிக்கோள்களில் உயர்கல்வி நிறுவனங்களின் பங்கினை பற்றி அமெரிக்காவின் நார்தர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் கேத்தலின் வெஸ்ட்மன் நேரில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
    • அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர் சவுஜான்யா தர்மசங்கர் நிலையான வளர்ச்சியில் உள்ள பசி இல்லாமை பற்றி பேசினார்.

    நெல்லை:

    நெல்லை அரியகுளம் ஸ்ரீ சாரதா மகளிர் தன்னாட்சி கல்லூரியில் நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் குறிக்கோள்களில் உயர்கல்வி நிறுவனங்களின் பங்கு குறித்த சர்வதேச கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    கல்லூரி முதுநிலை சமூகப்பணித்துறையின் சார்பாக நடைபெற்ற இக்கலந்துரையாடல் நிகழ்வுகளை கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவணபவப்ரியா அம்பா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    முதுநிலை சமூகப்பணித் துறையின் 2-ம் ஆண்டு மாணவி கீதாஞ்சலி வரவேற்றார். கல்லூரி முதல்வர் கமலா தலைமை உரையாற்றினார். தொடக்க உரையினை கல்லூரியின் கல்வி இயக்குநர் மேஜர் சந்திரசேகரன் வழங்கினார்.

    நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் குறிக்கோள்களில் உயர்கல்வி நிறுவனங்களின் பங்கினை பற்றி அமெரிக்காவின் நார்தர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் கேத்தலின் வெஸ்ட்மன் நேரில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர் சவுஜான்யா தர்மசங்கர் நிலையான வளர்ச்சியில் உள்ள பசி இல்லாமை பற்றியும், பேராசிரியர் சந்திரசேகர் தேசிய கல்விக்கொள்கை -கல்வியின் தரத்தினை பற்றியும், திருவேடகம், விவேகானந்தா கல்லூரியின் பொருளியல் துறைத்தலைவர் சதீஷ்பாபு சிறந்த வேலைவாய்ப்பும் பொருளாதார வளர்ச்சியும் என்ற தலைப்பிலும் உரை யாற்றினர்.

    லண்டனிலிருந்து இணைய வழியில் கலந்து கொண்ட நியூட்டன் சர்வதேச சக ஸ்வான்சீ பல்கலைக்கழக லோகு இக்கலந்தாய்வில் நிலையான வளர்ச்சி இலக்கினை அடைய, தேசிய கல்விக்கொள்கையில் உயர்கல்வி நிறுவனங்களின் பங்கின் முக்கியத்துவத்தினை தொகுத்து தொகுப்புரை யாற்றினார். இந்நிகழ்வில் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி மற்றும் சாரதா கல்வியியல் கல்லூரி பேராசிரியர்களும், ஸ்ரீசாரதா மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களும், மாணவிகளும் கலந்து கொண்டனர். உலகளவில் பேராசிரியர்களும், மாணவ-மாணவிகளும் இணைய வழியில் பங்கேற்ற னர்.

    கல்லூரியின் சமூகப் பணித்துறை தலைவர் அகிலா நன்றி கூறினார். இந்நிகழ்வி னை ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் ஜானகி மற்றும் ஆங்கிலத்துறை முதுநிலை 2-ம் ஆண்டு மாணவி லிசி சுபாஷினி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.


    ×