search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 251063"

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • சுமார் 300 பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாக்கூர் அறிவுறுத்தலின்படி, காவல் துணை கண்காணிப்பாளர் அமல அட்வின் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், குற்றப்பிரிவு காவலர்கள் ஹனுமந்த தீர்த்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, அவ்வழியாக வந்த காரை சோதனை செய்ததில், அதில் சுமார் 300 பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    காரில் மதுபாட்டில்களை கடத்தி வந்தவர்கள் ஹனுமந்த தீர்த்தத்தை சேர்ந்த லோகநாதன் மகன் சக்திவேல் (வயது 34),சிவபாலன் (31) மற்றும் தருமபுரி மாவட்டம் மாம்பட்டியை சேர்ந்த அண்ணாதுரை மகன் மணி (25) என்பது தெரிய வந்தது.

    3 பேரையும் கைது செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து ஊத்தங்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

    • கருங்கல்பாளையம் சோதனைசாவடியில் போலீஸ் ஏட்டு அற்புதராஜ் மீது மோட்டார் சைக்கிள் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
    • இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆறு சோதனை சாவடியில் கருங்கல்பாளையம் போலீஸ் ஏட்டு அற்புதராஜ் (46) நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் பள்ளிபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி வேகமாக வந்தது. அந்த மோட்டார் சைக்கிளில் 3 நபர்கள் இருந்தனர்.

    அந்த மோட்டார் சைக்கிளை ஏட்டுஅற்புதராஜ் நிறுத்த முயன்றார். ஆனால் அற்புதராஜ் மீது அந்த மோட்டார் சைக்கிள் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் அற்புதராஜின் 2 கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மற்ற போலீசார் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    சோதனை சாவடியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மோட்டார்சைக்கிளை ஓட்டிய நபர் கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவில், கிருஷ்ணன் வீதியை சேர்ந்த முத்துக்குமார் (30) சுமை தொழிலாளி, ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (28), இவரது சகோதரர் முரளிதரன் (27) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்க ப்பட்டனர்.

    விபத்தில் படுகாயம் அடைந்த ஏட்டு அற்புதராஜ் தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

    • மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் சந்தோசை வழிமறித்து கத்திமுனையில் அவரிடமிருந்த 700 மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
    • சந்தோஷ் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள மாசிநாயக்கன்பட்டி காசி நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 22). லாரி டிரைவரான இவர் நேற்று அம்மாபேட்டை ஜங்சன் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் சந்தோசை வழிமறித்து கத்திமுனையில் அவரிடமிருந்த .700 மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து சந்தோஷ் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து சேலம் எருமாபாளையம் நேதாஜி தெருவைச் சேர்ந்த கதிர்வேல் (20), கிச்சிபாளையம் சுண்ணாம்பு சூலை பகுதியைச் சேர்ந்த நடராஜ் (20) மற்றும் மதன் குமார் (வயது 18) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம், செல்போன் மற்றும் கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்பு 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×