search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீன ராக்கெட்"

    சீன ராக்கெட் பாகங்கள் இன்று அதிகாலை இந்திய-பசிபிக் பெருங்கடலில் விழுந்தது.

    பீஜிங்:

    சீனா, விண்வெளியில் சொந்தமாக ஆய்வு நிலையத்தை அமைத்து வருகிறது. சமீபத்தில் விண்வெளி நிலையத்துக்கு தேவையான பொருட்களை லாங் மார்ச் 5பி ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பியது.

    23 டன் எடை மற்றும் 176 உயரம் கொண்ட இந்த ராக்கெட், செயற்கை கோளை நிலை நிறுத்திவிட்டது. இந்த நிலையில் ராக்கெட்டில் இருந்தது பூஸ்டர் பாகங்கள் என்றும் புவி ஈர்ப்பு விசை காரணமாக பூமியை நோக்கி திரும்பிக் கொண்டிருப்பதாக தெரியவிக்கப்பட்டது.

    செயற்கைகோள், விரும்பிய திசையில் செல்ல உதவ பூஸ்டர்கள் அனுப்பப்படும். அந்த பூஸ்டரின் ஒரு பகுதி தான் பூமியில் விழவில் உள்ளது என்றும் அந்த பாகங்கள் மீது பெரியதாக இருப்பதால் புவி மண்டலத்தில் நுழையும்போது எரிந்து சாம்பல் ஆகாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    விண்ணில் ஏவப்பட்ட 6 நாட்களுக்கு பிறகு சீன ராக்கெட்டின் பாகங்கள் இன்று பூமியில் விழும் என்றும் ஆனால் எந்த பகுதியில் விழும் என்று தெரியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் ராக்கெட் பாகங்கள் கட்டுப்பாடற்ற வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்தது.

    இந்த நிலையில் சீன ராக்கெட் பாகங்கள் இன்று அதிகாலை இந்திய-பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. தென்கிழக்கு ஆசியாவில் பூமியின் வளிமண்டலத்தின் வழியாக கடும் வேகத்தில் வந்த ராக்கெட் பாகங்கள் கடலில் விழுந்தது.

    இதனை அமெரிக்க ராணுவம் உறுதிபடுத்தியது. அதேவேளையில் சீனா எந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தது. ராக்கெட் பாகங்கள் வானில் சீறிப் பாய்ந்து செல்லும் போது அதனை மலேசியாவில் மக்கள் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது.

    ×