search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணாநிதி நினைவுநாள்"

    • ராஜபாளையத்தில் கருணாநிதி நினைவுநாள் ஊர்வலம் நடந்தது.
    • ஊர்வலத்தில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    ராஜபாளையம்

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-வது நினைவு நாளை முன்னிட்டு ராஜபாளையத்தில் நினைவு நாள் ஊர்வலம் நடந்தது. தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் முகவூர் காமராஜர் சிலை முதல் செட்டியார்பட்டி, தெற்கு மாரியம்மன் கோவில் வரை தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம் சென்றனர். அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செய லாளர் ராசாஅருண்மொழி, ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், நகர சேர்மன் பவித்ரா ஷியாம், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூராட்சி சேர்மன் ஜெயமுருகன், பாலசுப்ரமணியன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல் முருகன், பேரூர் கழக செயலாளர்கள் இளங்கோவன், சிங்கம்புலி அண்ணாவி, மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி ஒன்றிய, நகர, பேரூர், துணை சேர்மன்கள் துரை கற்பகராஜ், கல்பனா, விநாயகமூர்த்தி காளிஸ்வரி மாரிச்செல்வம், கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர, அணிகளின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், வார்டு, கிளை செய லாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஆயிரக்கணக் கானோர் கலந்து கொண்டனர்.

    • திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கருணாநிதி நினைவிடம் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
    • கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டாக அமைதிப் பேரணி நடைபெறாமல் இருந்தது.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதியின் 4-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

    இதையொட்டி ஒவ்வொரு ஊரிலும் இன்று அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அமைதிப் பேரணியும் நடத்தப்பட்டன. சென்னையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

    இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதியின் முழு உருவ சிலை அருகே அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

    அந்தப் படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து முக்கிய பிரமுகர்களும் மலர் தூவி வணங்கினார்கள்.

    இதைத் தொடர்ந்து அங்கிருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

    பேரணியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நடந்து சென்றார். அவருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி எம்.பி., உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., தயாநிதி மாறன் எம்.பி., ஆ.ராசா, மு.க.தமிழரசு, அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், ஆவடி சா.மு.நாசர், சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்கள், ஜெகத்ரட்சகன் எம்.பி., தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மாவட்ட பொறுப்பாளர் நே.சிற்றரசு, மாதவரம் சுதர்சனம்.

    வில்சன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தி.நகர் ஜெ.கருணாநிதி, இனிகோ இருதயராஜ், ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, ஐட்ரீம் மூர்த்தி, ஆர்.பி.ராஜா, அம்பத்தூர் ஜோசப் சாமுவேல்.

    பகுதிச் செயலாளர், கே.ஏழுமலை, சேப்பாக்கம் மதன் மோகன், மாவட்ட பொருளாளர் ஐ.கென்னடி, பகுதி துணை செயலாளர் சேப்பாக்கம் சிதம்பரம், புழல் நாராயணன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவரான குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன், தாம்பரம் துணை மேயர் காமராஜ், பல்லாவரம் மண்டல குழுத் தலைவர் ஜோசப் அண்ணாத்துரை, பல்லாவரம் மு.ரஞ்சன், நித்யா, பாக்கியராஜ், தி.நகர் பி.மாரி, சோமசுந்தரம், உதயசூரியன், மாவட்ட பிரதிநிதி பாண்டி பஜார் பாபா சுரேஷ் உள்பட ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் அமைதிப் பேரணியில் நடந்து வந்தனர்.

    இவர்களில் ஏராளமானோர் கருப்புச் சட்டை அணிந்திருந்தனர். தொண்டர்கள் பலர் தி.மு.க. கொடி ஏந்தி அமைதிப் பேரணியில் பங்கேற்றனர்.

    அமைதிப் பேரணி கருணாநிதி நினைவிடத்தை அடைந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மலர் தூவி வணங்கி அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த கருணாநிதியின் மார்பளவு சிலைக்கும் மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து தலைமைக் கழக நிர்வாகிகளும், பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலர் தூவி வணங்கினார்.

    பின்னர் அண்ணா அறிவாலயம் சென்று கருணாநிதியின் சிலைக்கு மலர் தூவி வணங்கினார்.

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கருணாநிதி நினைவிடம் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டாக அமைதிப் பேரணி நடைபெறாமல் இருந்தது. இதனால் இந்த ஆண்டு நடைபெற்ற அமைதி பேரணியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தி.மு.க.வினர் பல்லாயிரகக்கணக்கில் பங்கேற்றனர்.

    • திருவல்லிக்கேணி ஓமந்தூரார் வளாகத்திலிருந்து, அண்ணாசதுக்கம் வரையில் அனுமதிக்கப்பட்ட ஊர்வலம் நடைபெற உள்ளது.
    • ஊர்வலம் வாலாஜா சாலைக்கு வரும் போது வாகனங்கள் அண்ணாசிலையில் இருந்து பெரியார் சிலை நோக்கி திருப்பி விடப்படும்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள அவருடைய உருவச்சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    பின்னர் அங்கிருந்து அவரது தலைமையில் தி.மு.க.வினர் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு ஊர்வலமாக சென்று மரியாதை செலுத்த உள்ளனர். இதனால் இப்பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    7-ந்தேதி காலை 8 மணியளவில் திருவல்லிக்கேணி ஓமந்தூரார் வளாகத்திலிருந்து, அண்ணாசதுக்கம் வரையில் அனுமதிக்கப்பட்ட ஊர்வலம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக விரிவான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வாகனங்கள் எளிதாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    எனினும் தேவைப்படும் பட்சத்தில் போர்நினைவு சின்னத்தில் இருந்து நேப்பியர்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் சாலை செல்ல அனுமதிக்காமல் கொடி மரச்சாலை வழியாக திருப்பி விடப்படும்.

    காந்தி சிலையில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் கண்ணகி சிலை வரை அனுமதிக்கப்பட்டு, பாரதிசாலை வழியாக திருப்பி விடப்படும். ஊர்வலம் வாலாஜா சாலைக்கு வரும் போது வாகனங்கள் அண்ணாசிலையில் இருந்து பெரியார் சிலை நோக்கி திருப்பி விடப்படும்.

    அதனால் காலை நேரத்தில் அண்ணாசாலை, வாலாஜா சாலை, டேம்ஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை மற்றும் காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் பயணத்தைத் திட்டமிடலாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தின் ஐந்து முறை முதல்-அமைச்சராக, உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக கலைஞர் விளங்கினார்.
    • திராவிட இயக்கத்தின் போர்வாள்களில் ஒருவராகத் தமது பொதுவாழ்வைத் தொடங்கி, அறிஞர் அண்ணாவோடு திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து பணியாற்றினார்.

    சென்னை:

    தி.மு.க.வில் 50 ஆண்டுகளுக்கு மேலாக தலைவராக பதவி வகித்தவர் கருணாநிதி. தேர்தலில் தோல்வி அடையாத தலைவர் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு. கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி அவர் மரணம் அடைந்தார்.

    அவருக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய நாட்களில் தி.மு.க. தலைவர்கள் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது வழக்கம்.

    இந்த நிலையில் வருகிற 7-ந்தேதி அவருக்கு 4-ம் ஆண்டு நினைவுநாள் ஆகும். இதையொட்டி அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடத்தப்போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தகைமைசால் தலைவராக, எழுத்தாளராக, கவிஞராக, சொற்பொழிவாளராக, திரைக்கதை வசனகர்த்தாவாக, இலக்கியவாதியாக, திரைப்படத் தயாரிப்பாளராக, தலைசிறந்த நிர்வாகியாக, தமிழகத்தின் ஐந்து முறை முதல்-அமைச்சராக, உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக கலைஞர் விளங்கினார்.

    திராவிட இயக்கத்தின் போர்வாள்களில் ஒருவராகத் தமது பொதுவாழ்வைத் தொடங்கி, பின்னர், அறிஞர் அண்ணாவோடு திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து பணியாற்றினார்.

    அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து, அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்து, தமிழக வரலாற்றில் தமக்கென்று சில பக்கங்களை ஒதுக்கிக்கொண்டார்.

    முத்தமிழறிஞர் தமிழினத் தலைவர் கலைஞரின் 4-வது நினைவுநாளினை யொட்டி முதல்-அமைச்சர், மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச்செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட கழக முன்னணியினர் கலந்துகொள்ளும் "அமைதிப்பேரணி", வருகிற-7 ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு சென்னை, அண்ணாசாலை, ஓமந்தூரர் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகில் இருந்து புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×