search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உப்பு"

    • செயற்கையாக நிறமும் ஏற்றப்படுகிறதென்பதும் அதிர்ச்சியான உண்மை.
    • இந்துப்புவிலும் போலி அதிகம் இருக்கிறது என்பது 100/100 உண்மை.

    நாம் உபயோகிக்கும் தூள் உப்பு ஏறக்குறைய 97 முதல் 99 சதவீதம் சோடியம் குளோரைடு மட்டுமே என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை பக்குவப்படுத்தும்போது வெகுநாட்களுக்கு கட்டியாகாமல் தூளாகவே இருப்பதற்காவும், நீர்த்துப்போகாமல் இருப்பதற்காவும் சோடியம் அலுமினோசிலிகேட் அல்லது மக்னீசியம் கார்போனேட் சேர்க்கப்படுகிறது என்பது தெரியுமா? இந்த வேதிப்பொருட்கள் உப்பிற்கு நல்லதே தவிர உடலுக்கு நல்லதல்ல.

    "இந்துப்பு" எனப்படும் பாறைகளிலிருந்து எடுக்கப்படும் கல் உப்பு பல்வேறு கட்ட சுத்தப்படுத்துதலுக்கு உள்ளாக்கிய பின்னரே உண்பதற்கு தகுதியாகிறது. அதன்பிறகு இந்துப்புவும் 99.99% சோடியம் குளோரைடு தான்.

    சிக்கல் என்னவென்றால் வணிகமயமாக்குதலால் சரிவர பக்குவப்படுத்தப்படாத இந்துப்புவில் சற்றே அதிகமாக கால்சியம், மெக்னீசியம், இரும்பு, காப்பர் இருப்பதால், உணவிலுள்ள வைட்டமின் 'சி' யை அழித்துவிடுதல், உணவு விரைவில் நீர்த்துப்போதல் போன்ற வேலைகள் நடப்பதை யாரும் கூறுவதும் இல்லை, கண்டுகொள்வதும் இல்லை. அதில் செயற்கையாக நிறமும் ஏற்றப்படுகிறதென்பதும் அதிர்ச்சியான உண்மை. இந்துப்புவிலும் போலி அதிகம் இருக்கிறது என்பது 100/100 உண்மை.

    உடலுக்கு நல்லது.. உடலுக்கு நல்லது என்று வியாபார ரீதியில் எந்த பொருளை விற்றாலும் வாங்கிக்கொண்டு இருக்கும் மக்கள் இருக்கும்வரை... உடலுக்கும், உணவுக்கும்... உலகுக்கும் கேடு விளைவிக்கும் பொருட்கள் பெருகிக்கொண்டுதான் இருக்கும்.

    "அப்போ எந்த உப்பைத்தான் நாங்கள் உபயோகிப்பது" என்று என்னை திட்டுவது நன்றாகவே கேட்கிறது.

    கடலில் இருந்து எடுக்கப்படும் கல்லுப்பும், அந்த கல்லுப்பை நீங்களே கொஞ்சம் கொஞ்சமாக அரைத்து வைத்துக்கொண்டு தூளுப்பு என்று கூறிக்கொண்டும் உபயோகப்படுத்துங்கள். அதையும் அளவோடு பயன்படுத்துங்கள்.

    - வண்டார்குழலி ராஜசேகர்

    • கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக பார்த்தபடி சென்றனர்.
    • சர்வதேச ஆயுர்வேத தினம் இந்தியா முழுவதும் ஒரு மாத காலம் கொண்டாடப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    ஆயுர்வேத மருத்துவத்தை அறிமுகப்படுத்தியவரும் அதன் நிறுவனருமான தன்வந்திரியின் பிறந்த தின விழா சர்வதேச ஆயுர்வேத தினமாக கொண்டாடப் பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் ஆயுர்வேத துறை சார்பில் இந்த ஆண்டு 7-வது சர்வதேச ஆயுர்வேத தினம் இந்தியா முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் 23-ந்தேதி முதல் வருகிற 23-ந்தேதிவரை ஒரு மாத காலம் கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி சார்பில் கன்னி யாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் நேற்று 7-வது தேசிய ஆயுர்வேத தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி டீன் கிளாரன்ஸ்டேவி தலைமை தாங்கினார்.

    கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற் கரை பகுதியில் நாகர் கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 200 கிலோ உப்பை பயன்படுத்தி தேசியக் கொடியின் நிறமான சிவப்பு, வெள்ளை, பச்சை ஆகிய மூவர்ண கொடி நிறத்தில் இந்திய வரை படத்தை வரைந்து அதன்நடுவே ஆயுர்வேத சின்னத்தை வண்ண ஓவிய மாக வடிவமைத்து வைத்து இருந்தனர்.

    மேலும் மத்திய அரசின் ஆயுர்வேத துறையின் திட்ட மான "இல்லம் தோறும் தினம் தினம் ஆயுர்வேதம் திட்டம்" பற்றிய விழிப்புணர்வு வாசகங்களும் உப்பு கற்கள் மூலம் எழுதப்பட்டு மக்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நாகர் கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி துறை தலைவர் ரபேலா மற்றும் மருத்துவர்கள்ராய், வில்சன், லேகா, திரு நாவுக்கரசு மற்றும் முதலாம் ஆண்டு நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவி கள் கலந்து கொண்டனர்.

    கன்னியா குமரி திரிவேணி சங்கமம் கடற்கரை யில் உப்பை பயன்ப டுத்தி மூவர்ண நிறத்தில் இந்திய வரைபடம் வண்ண ஓவிய மாக தீட்டப்பட்டிருந்ததை சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக பார்த்தபடி சென்றனர். சிலர் அதனை தங்களது செல்போன்கள் மூலம் செல்பி எடுத்துச் சென்றனர்.

    • சமையல் அறையில் தவறாமல் இடம் பிடிக்கும் பொருளாக உப்பு உள்ளது.
    • சமையல் அறையில் தவறாமல் இடம் பிடிக்கும் பொருளாக உப்பு உள்ளது.

    ஒரு நாளைக்கு 1 கிராம் உப்பை குறைப்பது 2030-ம் ஆண்டளவில் 90 லட்சம் இதய நோய் பாதிப்புகளை குறைக்கும். 40 லட்சம் உயிர்களை காப்பாற்றும் என்கிறது, புதிய ஆய்வு. அதற்கேற்ப உப்பின் பயன்பாடு உலகளவில் பரவலாக இருக்கிறது.

    ஒவ்வொரு வீட்டின் சமையல் அறையிலும் தவறாமல் இடம் பிடிக்கும் பொருளாக உப்பு உள்ளது. சமையலில் உப்பை அதிகம் உபயோகிப்பது உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் போன்றவை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கச் செய்துவிடும்.

    ஹார்வர்ட் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, நரம்புகளை தூண்டுவதற்கும், தசைகளை சுருக்குவதற்கும், தளர் வடைய செய்வதற்கும், தண்ணீர் மற்றும் தாதுக்களின் சம நிலையை பராமரிப்பதற்கும் மனித உடலுக்கு சிறிதளவு சோடியம் (உப்பு) தேவைப்படுகிறது.

    சீனாவில் நிகழும் கிட்டத்தட்ட 40 சதவீதம் இறப்புகளுக்கு இதய நோய்களே காரணம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர்களின் கூற்றுப்படி, சீனர்கள் தினமும் 11 கிராம் உப்பை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள்.

    இது உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகும். ஒரு நாளைக்கு ஒரு கிராம் உப்பை குறைப்பதன் மூலம் தமனிகளின் சீரற்ற செயல்பாடுகளால் இதய நோய் ஏற்படும் அபாயத்தை 4 சதவீதம் குறைக்க முடியும். பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 6 சதவீதம் குறைக்கலாம் என்று ஆய்வு முடிவுகள் தெளிவுபடுத்தி உள்ளது.

    • இந்நிலையில் கடந்த 20 நாட்களாகவெயில் தாக்கத்தால் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வந்தது.
    • இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவக்கத்தில் இருந்து தற்போதுவரைவிட்டு விட்டு மழை பெய்ததால் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்புஉற்பத்தி நடைபெறுகிறது. இதில் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் 3 ஆயிரம் ஏக்கரிலும் இரண்டு தனியார் நிறுவனங்கள் 6 ஆயிரம் ஏக்கரிலும் உப்பு உற்பத்தி செய்கின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம்செப்டம்பர் மாதம் வரை உப்பு உற்பத்தி நடைபெறும்வழக்கமாக இந்த ஒன்பது மாதகாலத்தில் 6.50 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யபடும் இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்டபல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவக்கத்தில் இருந்து தற்போதுவரைவிட்டு விட்டு மழை பெய்ததால் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 20 நாட்களாகவெயில் தாக்கத்தால் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வேதாரண்யம் பகுதியில் மழை பெய்தது. குறிப்பாக உப்பள பகுதியான கோடிக்காடு, அகஸ்தியன் பள்ளி, கடிநெல்வயல் பகுதியில் சற்று கூடுதலாக மழை பெய்ததுஇதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் எப்போதும் பரபரப்பாக வேலை செய்துவரும் உப்பள பகுதி வெறிச்சோடி காணப்பட்டன

    இதனால் உப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பாத்திகளில் உள்ள உப்பை சேகரித்து தார்பாய்களை மற்றும் பனைமட்டைகளை கொண்டு மூடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    மீண்டும் உற்பத்தி தொடங்குவதற்கு ஒரு வார காலம் ஆகும் எனவும்அடிக்கடி மழை பெய்தால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி இலக்கைஎட்ட முடியாது எனவும் இதனால் உப்பு விலை ஏறுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    ×