என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருச்சி மாநகராட்சி"
- ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியில் இணைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருச்சி:
ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.
ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர் தொகுதிகளுக்குட்பட்ட சில ஊராட்சிகளையும் லால்குடி, திருவெறும்பூர் தொகுதிகளுக்குட்ட சில ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியில் இணைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
- வரி செலுத்தவும், குறைகள் குறித்த புகார்களை தெரிவிக்கவும் விரைவில் திருச்சி மாநகராட்சி சார்பில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது
- இந்த செயலியில் மாநகராட்சி வர்த்தக நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களின் விவரங்கள் இடம் பெறும்
திருச்சி:
திருச்சி மாநகராட்சி நிர்வாகம் ஆன்லைன் சேவையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக புதிய மொபைல் செயலி ஒன்றை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே இருக்கும் மொபைல் அப்ளிகேஷனை மாற்றிவிட்டு புதிதாக அறிமுகம் செய்ய உள்ளனர்.
இந்த செயலியில் மாநகராட்சி வர்த்தக நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களின் விவரங்கள் இடம் பெறும். இதில் மாநகர வாசிகள் முன்பதிவு செய்து தேவைகளை நிவர்த்தி செய்யலாம். அது மட்டும் அல்லாமல் புகார்கள் அளிக்கும் வசதி, வரி செலுத்துதல் போன்ற அம்சங்களும் இடம்பெறுகிறது.
மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கான ஒரு இடத்தையும் ஒதுக்கியுள்ளனர். இந்த புதிய செயலிக்கு திருச்சி சிட்டிசன் ஆப் என பெயரிடப்பட்டுள்ளது. ஒன்று அல்லது இரண்டு மாதத்திற்குள் புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே உபயோகமாக இருக்கும். மற்றவர்களுக்கு உதவாது என்று சொல்லப்பட்டாலும் பெரும்பாலான மக்களிடம் ஸ்மார்ட் போன் வசதி இருப்பதால் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு செயலி மூலம் உதவ முடியும் என்கிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்