search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யுபிஐ"

    • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும் யு.பி.ஐ. வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    • தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஈடாக வங்கிச் சேவைகளை அளிப்பதில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளும் முழு திறனையும் பெற்றுள்ளன.

    சென்னை:

    கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும் யு.பி.ஐ. வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    கடந்த வாரம் வரையில் காஞ்சிபுரம் நீங்கலாக மீதமிருந்த 22 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று இறுதியாக காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இதன்மூலம் தமிழ்நாடு முழுவதிலுமுள்ள 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன் 922 கிளைகளிலும் உள்ள வாடிக்கையாளர்கள் மிகுந்த பயனடைவார்கள்.

    இதன் மூலம் தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஈடாக வங்கிச் சேவைகளை அளிப்பதில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளும் முழு திறனையும் பெற்றுள்ளன.

    மேலும் இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மூலமாகவும் என்.இ.எப்.டி, ஆர்.டி.ஜி.எஸ். உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெற முடியும்.

    தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் வரலாற்றில் இது ஒரு மைல்கல் ஆகும்.

    ஏற்கனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 623 நியாயவிலைக் கடைகள், கூட்டுறவு மருந்தகங்கள், கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டக சாலை உள்ளிட்ட அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் பணமற்ற பரிவர்த்தனை சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, மாநிலம் முழுவதிலுமுள்ள அனைத்து 33,841 நியாயவிலைக் கடைகள், 41 கூட்டுறவு விற்பனைப் பண்டக சாலைகள், 363 பிரதம கூட்டுறவுப் பண்டக சாலைகள், 380 கூட்டுறவு மருந்தகங்கள், 58 கூட்டுறவு பெட்ரோல் பங்குகள் ஆகிய அனைத்திலும் விரிவுபடுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • யுபிஐ பரிவர்த்தைகளுக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் விளக்கம் அளித்தது.
    • தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் சார்பில் 1.1 சதவீதம் வரை பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    பிரீபெயிட் பேமண்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் சார்ந்து யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் ரூ. 2 ஆயிரத்திற்கும் அதிகமான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் (என்பிசிஐ) பரிந்துரை வழங்கி இருக்கிறது. இதன் மூலம் வங்கிகள் மற்றும் பேமண்ட் சேவை வழங்குவோர் அதிக வருவாய் ஈட்ட முடியும்.

    அந்த வகையில் இதற்கான கட்டணம் ஏப்ரல் 1 ஆம் தேதி மூலம் வசூலிக்கப்பட இருக்கிறது. இதோடு செப்டம்பர் 30 ஆம் தேதி இந்த கட்டணங்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளன. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.

    பிபிஐ எனப்படும் பிரீபெயிட் பேமண்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் மூலம் மேற்கொள்ளப்படும் ரூ. 2 ஆயிரத்திற்கும் அதிக பரிவர்த்தனைகளுக்கு 1.1 சதவீதம் வரை கட்டணம் செலுத்த வேண்டும். ரூ. 2 ஆயிரத்திற்கும் குறைந்த பரிவர்த்தனைகளுக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது.

     

    இதற்கான கட்டணம் ஆன்லைன் வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே வசூலிக்கப்படும். அதே சமயம் பயனர்களிடம் இருந்து கட்டணம் வசூலிப்பது பற்றி இறுதி முடிவை வணிகர்களே எடுக்கலாம். வழக்கமான யுபிஐ பரிவர்த்தனைகள், அதாவது ஒருவர் நேரடியாக தனது வங்கி கணக்கில் இருந்து மற்றொருவரின் வங்கி கணக்கிற்கு அனுப்பும் தொகைக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது.

    இந்தியாவில் யுபிஐ சார்ந்த பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, பிரபலமான ஒன்றாகவும் இருந்து வருகிறது. இதன் மூலம் பயனர்கள் வங்கி அக்கவுண்ட்களில் இருந்து மொபைல் போன் மூலமாகவே பணம் அனுப்ப முடியும். பிபிஐ-க்கள் என்பது பணத்தை வைத்துக் கொண்டு பரிமாற்றம் செய்ய அனுமதிக்கும் டிஜிட்டல் வாலெட்கள் ஆகும்.

    பேடிஎம், போன்பெ மற்றும் கூகுள்பே உள்ளிட்டவை பிரீபெயிட் பேமண்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் சேவையை வழங்கி வருகின்றன. பரிவர்த்தனையை மேற்கொள்ள வங்கி சார்பில் பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் வெளியிட்டு இருக்கும் புதிய அறிவிப்பின் படி, யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை வசூலிக்க பிரீபெயிட் பேமண்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

    • யுபிஐ சேவை வசதி 2016ல் அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது
    • யுபிஐ பரிவர்த்தனை அக்டோபர் மாதத்தில் முதல் முறையாக 700 கோடியை தாண்டியது.

    புதுடெல்லி:

    யு.பி.ஐ என்று அழைக்கப்படும் 'ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம்', ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். 2016ம் ஆண்டு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. கூகுள் பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

    இந்நிலையில், 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் யுபிஐ பரிவர்த்தனை மூலம் மேற்கொள்ளப்பட்ட தொகை ரூ.12.8 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த மாதத்தைக் காட்டிலும் 8 சதவீதம் அதிகமாகும்.

    இந்திய தேசிய பேமண்ட்ஸ் காா்ப்பரேஷன் தரவுகளின்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.12.11 லட்சம் கோடி மதிப்பிலான 730 கோடி யுபிஐ பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. யுபிஐ பரிவர்த்தனை 700 கோடியை தாண்டியது அக்டோபர் மாதத்தில்தான் முதல் முறை.

    ஒட்டுமொத்தமாக, 2022-ம் ஆண்டு யுபிஐ மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 7,404 கோடியாகவும், பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகை ரூ.125 லட்சம் கோடியாகவும் உள்ளது. இதன்படி, கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 2022-ம் ஆண்டு பரிவர்த்தனை எண்ணிக்கை 90 சதவீதமும், பரிவர்த்தனை தொகை 76 சதவீதமும் அதிகரித்துள்ளது.

    • யுபிஐ சேவை வசதி 2016ல் அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது
    • அக்டோபர் மாதத்தில் ரூ.12.11 லட்சம் கோடி மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

    புதுடெல்லி:

    யுபிஐ என்று அழைக்கப்படும் 'ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம்', ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். 2016ம் ஆண்டு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. கூகுள் பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

    இந்தியாவில் முதன்முறையாக யுபிஐ சேவை வசதி, 2016ம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 730 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டது என நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

    கடந்த செப்டம்பர் மாதம் யுபிஐ மூலம் 678 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது அது 7.7 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், 6 ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி தொடங்கப்பட்டதிலிருந்து அதிகபட்சமாக கடந்த அக்டோபர் மாதத்தில், ரூ.12.11 லட்சம் கோடி மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

    • இந்தியாவில் செப்டம்பர் மாதம் யுபிஐ மூலம் 678 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.
    • யுபிஐ சேவை வசதி 2016ல் அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது

    புதுடெல்லி:

    யு.பி.ஐ. என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம், ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். 2016ம் ஆண்டு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. கூகுள் பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

    தேசிய பணப்பரிவர்த்தனை நிறுவனம் - நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்.பி.சி.ஐ.) வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த செப்டம்பர் மாதத்தில் 678 கோடி பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி (ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை வசதி - யுபிஐ), தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த செப்டம்பர் மாதத்தில், ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

    2022-ம் நிதி ஆண்டில், யுபிஐ 4600 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தியது. அதாவது அதன் மதிப்பு ரூ.84.17 டிரில்லியனுக்கும் அதிகமாகும்.

    இந்தியாவில் முதன்முறையாக யுபிஐ சேவை வசதி, 2016ம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இது புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும் செய்வதற்கும் மக்களின் கூட்டு முயற்சியைக் குறிக்கிறது.
    • கொரோனா தொற்று காலங்களின்போது, டிஜிட்டல் பரிமாற்றங்கள் உதவியாக இருந்தன.

    இந்தியாவில் ஜூலை மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 600 கோடிக்கு பரிவர்த்தனை நடந்து சாதனை படைத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். மேலும், இது புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும் செய்வதற்கும் மக்களின் கூட்டு முயற்சியைக் குறிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், "ஜூலை மாதத்தில் யுபிஐ மூலம் 600 கோடிக்கு பரிவர்த்தனை நடந்துள்ளது, இது 2016-ம் ஆண்டுக்கு பிறகு மிக அதிகம்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    இவரது பதிவுக்கு பதிலளித்த பிரதமர் மேடி, " இது ஒரு சிறந்த சாதனை. புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும், பொருளாதாரத்தை தூய்மைப்படுத்துவதற்கும் இந்திய மக்களின் கூட்டு முயற்சியை இது குறிக்கிறது. குறிப்பாக, கொரோனா தொற்று காலங்களின்போது, டிஜிட்டல் பரிமாற்றங்கள் உதவியாக இருந்தன" என்று குறிப்பிட்டார்.

    ×