என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தொழிற்சாலைக்கு"
- தொழிற்சாலையில் முறையாக அனுமதி பெறாமலும், வரிகள் செலுத்தாமலும் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
- மங்களபுரத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சந்தோஷ் ஸ்டார்ச் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மங்களபுரத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சந்தோஷ் ஸ்டார்ச் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு மக்காச்சோளத்தில் இருந்து சாக்லெட் தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
தொழிற்சாலையில் முறையாக அனுமதி பெறாமலும், வரிகள் செலுத்தாமலும் இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தொழிற்சாலைக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தில் 100 அடி ஆழத்திற்கு 2 கிணறுகளை அமைத்து அதில் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யாமல் விடுவதால் சுற்றுப்புறத்தில் சுமார் 7 கிலோமீட்டர் தொலைவிற்கு நிலத்தடி நீர், மண் வளம், காற்று போன்றவை மாசு அடைந்து வருவதால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது தவிர கால்நடைகள் நோய்வாய்ப்பட்டு இறப்பதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் காற்றில் ரசாயனம் கலந்த சாம்பல் கரித்துகள்கள் துர்நாற்றத்துடன் வீசுகிறது. தொழிற்சாலையின் கழிவுநீர் தேக்கத்தால் மக்களுக்கு தோல் நோய், கண் நோய், இதய நோய், நுரையீரல் பாதிப்பு, தோல் நோய் ஏற்பட்டுள்ளது. இது பற்றி பொதுமக்கள் அளித்த தொடர் புகாரின் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொழிற்சாலைக்கு சீல் வைத்தது.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை மங்களபுரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரின் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மூடி கிடக்கும் தொழிற்சாலையில் இருந்து விஷவாயு வெளியேற வாய்ப்புள்ளதாகவும் எனவே இது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.
இது தொடர்பாக கலெக்டர் ஸ்ரேயா சிங், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன் மங்களபுரத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சென்னையில் இருந்து ஒரு குழுவினர் வந்திருந்து ஆய்வை மேற்கொண்டனர்.
பிறகு கலெக்டர் ஸ்ரேயா சிங் கூறியதாவது:-
பொதுமக்களின் புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட தனியார் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் இருந்து தனிக்குழு ஒன்று வரவழைக்கப்பட்டு தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டு ரசாயன கழிவு அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவை–யில்லை என கூறினார்.
இது பற்றி பொதுமக்கள் கூறியதாவது:-
தொழிற்சாலை கடந்த மாதம் மூடப்பட்டது தொடர்ந்து அங்கு தொழிற்–சாலை காவ–லர்கள் பணியில் இருந்து வருகின்றனர் தொழிற்சாலையில் இருந்து ஒரு விதமான துர்நாற்றம் வீசுவதால் விஷவாயு தாக்குமோ என்ற அச்சத்தில் மனு கொடுத்தோம் இதை அடுத்து அதிகாரிகள் உடனடி–யாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தொழிற்சாலையின் கழிவு நீரால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் காற்று போன்றவை மாசுபட்டு உள்ளன எனவே இந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்