search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரூரில் குவிந்த பக்தர்கள்"

    • 2 வருடங்களாக கொரோனா காரணமாக ஆடிப்பெருக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.
    • பேரூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டன.

    பேரூர்:

    ஆடி மாதம் 18-ந்தேதி ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது.

    கோவை மாவட்டம் பேரூர் படித்துறையில் இன்று காலை முதலே பக்தர்கள் அதிகளவில் திரண்டிருந்தனர். பக்தர்கள் படித் துறையில் வாழை இலை விரித்து தேங்காய், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம், பழ வகைகள் உள்பட மங்கல பொருட்களை படையலிட்டு விளக்கேற்றி பூஜை செய்த–னர். பின்னர் அவற்றை ஆற்றில் மிதக்க விட்டனர்.

    திருமணமாகாத இளம்பெண்கள் திருணம் நடைபெற வேண்டி ஆற்றின் கரையோரத்தில் 7 கூழாங்கற்களை எடுத்து அதனை 7 கன்னிமார்களாக உருவகித்து வழிபட்டனர். திருமணம் நடக்க வேண்டி கையில் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டனர். சுமங்கலி பெண்கள் ஒருவ–ருக்கொருவர் மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக கொண்டனர்.

    இேதபோல் இறந்து போன குழந்தைகளை நினைத்து காதோலை, கருகுமணி, தாழை மடல், நாணல் இழை மற்றும் பலகாரங்கள் வைத்து இலைப்படையல் வழிபாடும் நடத்தினர்.இதன் மூலம் பித்ரு தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    பின்னர் பக்தர்கள் பேரூர் கோவிலுக்கு சென்று நெய்விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலில் உள்ள பசுமாடுகளுக்கு அகத்திக்கீரைகளும் வழங்கினர்.

    கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக ஆடிப்பெருக்கு அன்று பேரூர் படித்துறைக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து காலை முதலே பேரூர் படித்துறைக்கு பக்தர்கள் அதிகளவில் வந்த வண்ணம் இருந்தனர். கோவை மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டமான திருப்பூர், நீலகிரி பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்தனர்.

    இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்தும் மாற்றப்பட்டிருந்தது. கோவை நகர் பகுதியில் இருந்து பேரூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் பேரூர் தமிழ் கல்லூரியிலேயே திருப்பி அனுப்பப்பட்டன.

    அதேபோல் பேரூர் பகுதியில் இருந்து நகர் பகுதிக்கு செல்லும் வாகனங்கள் கோவைப்புதூர், சுண்டக்காமுத்தூர் வழியாக உக்கடம் வந்து, நகர் பகுதிக்குள் வந்தது.

    ×