search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன்கள்"

    • ரூ.10.40 லட்சம் மதிப்புள்ள 52 ஸ்மார்ட் செல்போன்கள் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
    • வேறு வங்கி கணக்கு எண்ணுக்கு அனுப்பிய ரூ.10 ஆயிரம் தொகையும் திரும்ப பெறப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்கள் மற்றும் திருடிச் சென்ற செல்போன்களை மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று ஊட்டி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் கலந்து கொண்டு உரிமையாளர்களிடம் செல்போன்களை வழங்கினார்.

    இதன்படி ரூ.10.40 லட்சம் மதிப்புள்ள 52 ஸ்மார்ட் செல்போன்கள் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதேபோல் பே.டி.எம், மூலம் தவறுதலாக அனுப்பப்பட்ட ரூ.3 லட்சம் பணத்தை வங்கி மற்றும் பேடிஎம், நிர்வாகத்தின் உதவியுடன் மீட்கப்பட்டு உரியவரிடம் கொடுக்கப்பட்டது.மேலும் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டுவின் கார் டிரைவர், தவறுதலாக வேறு வங்கி கணக்கு எண்ணுக்கு அனுப்பிய ரூ.10 ஆயிரம் தொகையும் திரும்ப பெறப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆன்லைன் பண மோசடி நீலகிரி சைபர் கிரைம் போலீஸ் நிலையம் மூலம் ஆன்லைன் பண மோசடி, லோன் ஆப் மூலம் மோசடி, மார்பிங், ஆன்லைன் மூலம் ஆபாச படங்களை மற்றவர்களுக்கு அனுப்புவது போன்ற குற்றங்கள் கண்காணிக்கப்பட்டு வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதுவரை பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் 67 வழக்குகளுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 679 புகார்கள் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் நடந்த சைபர் கிரைம் வழக்குகளில் இதுவரை ரூ.6 கோடியே 1 லட்சத்து 67 ஆயிரத்து 232 பணம் மோசடி பேர்வழிகளால் ஏமாற்றப்பட்டு உள்ளது. இதில் ரூ.8 லட்சத்து 52 ஆயிரத்து 230 மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர சுமார் ரூ.4 கோடியே 39 லட்சத்து 90 ஆயிரத்து 404 பணம் செல்லாமல் வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டு உள்ளது. முடக்கப்பட்டுள்ள பணம் நீதிமன்ற உத்தரவு பெற்று மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் இதுவரை தொலைந்து போன 129 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் மோசடி தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அவருடன் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிலிப், சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாஷினி, சப் இன்ஸ்பெக்டர்கள் கலைவாணி, யசோதா மற்றும் போலீசார் பிரவீன், கருணாகரன், ஜெகதீஸ், கண்ணன் உள்பட பலர் இருந்தனர்

    • மதுரை அருகே கட்டிட காண்டிராக்டரிடம் பணம், செல்போன்கள் திருடப்பட்டன.
    • இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் சக்தி சிவராஜ் (வயது 36). கட்டிட கான்ட்ராக்டரான இவர் மதுரை துவரிமான் மேலக்கால் மெயின் ரோட்டில் உள்ள ஒரு குடியிருப்பில் தங்கி, நாகமலை புதுக்கோட்டையில் திருமண மண்டபம் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஊழியர்களை பணிக்கு அமர்த்தி தங்க வைத்து இருந்தார்.

    இந்த நிலையில் சக்தி சிவராஜ் சம்பவத்தன்று இரவு அறையில் படுத்து தூங்கினார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, அவர் வைத்திருந்த 14 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 2 செல்போன்களை காணவில்லை. இது தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் அறைக்குள் புகுந்து பணம் மற்றும் செல்போன்களை திருடியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி மேற்கண்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • லேப்டாப், 3 செல்போன்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்.

    பட்டீஸ்வரம்:

    தஞ்சை மாவட்டம் அய்ய ம்பேட்டை கடைத்தெருவில் உள்ள ஒரு இடத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாக பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரன்ட் பூரணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதனை தொடர்ந்து இதில் சம்பந்தபட்டவர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்யுமாறு அய்யம்பேட்டை போலீசா ருக்கு உத்தரவிட்டார்.

    அதன் அடைப்படையில் அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கு மார் தலைமையில் போலீசார் அருண் மற்றும் கார்த்திக் ஆகியோர் அய்யம்பேட்டை கடைவீதியில் உள்ள காம்ப்ளக்ஸில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த முகமது ரஃபீக் (வயது48), அவரது மனைவி மும்தாஜ் பேகம் (44) ஆகியோரை கைது செய்தனர்.

    மேலும் ஆன்லைன் லாட்டரி வியாபாரத்திற்கு பயன்படுத்திய லேப்டாப், 3 செல்போன்கள், மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கைப்பற்றி தம்பதியினர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • போலீசார் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
    • ரூ.5 லட்சம் மதிப்புள்ள 45 செல்போன்களை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம், ராசா மிராசுதாரர் மருத்துவமனை உள்பட மேற்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காணாமல் போன செல்போன்கள் கண்டுபிடிக்க சம்பந்தப்பட்ட பொதுமக்கள் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    இதையடுத்து நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில்
    சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் , ஏட்டு செந்தில் குமார் மற்றும் போலீசார்
    காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்கும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    மாயமான செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ நம்பர் மூலம் தேடும் பணியை தொடங்கினர். மேலும் பல்வேறு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் செல்போனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.

    அப்போது சம்பந்தப்பட்ட செல்போன்கள் ஈரோடு, நாமக்கல், சென்னை உள்ளிட்ட இடங்களில் சிலர் ஏற்கனவே கடைகளில் வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபர்களிடம் செல்போன்களை போலீசார் மீட்டனர்.

    மேலும் சில செல்போன்கள் தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் சில இடங்களில் உள்ள கடைகளில் விற்கப்பட்டதும் தெரியவந்தது. அதனை ஐ.எம்.இ.ஐ நம்பர் மூலம் உறுதிப்படுத்திய பிறகு போலீசார் மீட்டனர்.

    சில செல்போன்களை கீழே கிடந்ததாக பொதுமக்கள் சிலர் போலீசிடம் ஒப்படைத்தனர். இவ்வாறாக பொதுமக்களால் தவறவிட்டு, புகார் பெற்று ரூ.5 லட்சம் மதிப்புள்ள 45 செல்போன்களை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர்.

    இன்று அந்த செல்போன்களை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் சந்திரா முன்னிலையில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா இன்று சம்பந்தப்பட்டவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார்.

    அப்போது அவர், கஷ்டப்பட்டு செல்போன்கள் வாங்குகிறீர்கள். அதனை சரியான முறையில் பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார்.

    • மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
    • கன்னியாகுமரி டி.எஸ்.பி., திருட்டு நடந்த இடத்தை பார்வையிட்டார்.

    கன்னியாகுமரி:

    தென்தாமரைகுளம் அருகே உள்ள சந்தையடி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அகஸ்தீஸ்வரம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம் போல் செல்போன் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது அவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த விலை உயர்ந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான 10 செல்போன்கள் திருட்டுபோய் இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தினர். அதில், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், ஒரு பெரிய கல்லை எடுத்து கடையின் பூட்டை உடைத்து கடைக்குள் சென்று செல்போன்களை திருடி சென்றது தெரிய வந்தது.

    செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் கன்னியாகுமரி டி.எஸ்.பி., திருட்டு நடந்த இடத்தை பார்வையிட்டார். இது தொடர்பாக 2 தனிப்படைகள் அமைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க அவர் உத்தரவிட்டார்.

    பெண் ஊழியரிடம்நைசாகபேசிபெண் ஊழியரின்செல்போனை அபேஸ்செய்துகொண்டுஅங்குஇருந்துவெளியே சென்றான்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ராமசாமி தெருவில் சூப்பர்மார்க்கெட் உள்ளது .இங்கு வந்த டிப்டாப் சாமி ஒருவன்,தான் முதியோர்காப்பகம் நடத்துவதாக கூறி ஒரு பிட் நோட்டீசுடன் கடைக்குள் புகுந்தான். .அங்கிருந்த பெண் ஊழியரிடம்நைசாகபேசிபெண் ஊழியரின்செல்போனை அபேஸ்செய்துகொண்டுஅங்குஇருந்துவெளியே சென்றான்.

    பின்னர் அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் உள்ளமற்றொருகடையிலும் கைவரிசை காட்டி விலை உயர்ந்த செல்போனை அபேஸ் செய்துள்ளான்.

    இது குறித்து பண்ருட்டி போலீசர் விசாரித்து வருகிறார்கள். 

    • 2014-ல் இந்தியர்கள் பயன்படுத்திய 92 சதவீத செல்போன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.
    • ஆனால் தற்பொழுது அந்த நிலை மாறியுள்ளது என மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    பாமர மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை ஒவ்வொருவர் கையிலும் நிச்சயமாக இருப்பது செல்போன்தான்.

    இந்நிலையில், இந்தியர்கள் பயன்படுத்தும் 97 சதவீத செல்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குறித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    2014-ம் ஆண்டு இந்தியர்கள் பயன்படுத்திய 92 சதவீத செல்போன்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. தற்பொழுது அந்த நிலை மாறி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 97 சதவீத செல்போன்களை இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர்.

    மேலும், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மின்னணு சாதனங்களின் மதிப்பு 12 பில்லியனை எட்டியுள்ளது என தெரிவித்தார்.

    • செந்தில்குமார் செட்டிப்பாளையத்தை அடுத்த தேங்கனி பகுதியில் குவாரி வைத்துள்ளார்.
    • 3 வாலிபர்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் மடக்கி பிடித்தனர்.

    கோவை 

    கோவை கிணத்துக்கடவு வாலி தோட்டத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). இவர் செட்டிப்பாளையத்தை அடுத்த தேங்கனி பகுதியில் குவாரி வைத்துள்ளார்.


    இங்கு வடமாநிலத்தை சேர்ந்த சிக்கந்தர், சாகானி, பங்கச் சாகானி, நித்திஷ் ஆகியோர் கூலி வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று அவர்கள் வழக்கம் போல வேலைகளை முடித்து குவாரியில் உள்ள தங்களாது அறைக்கு தூங்க சென்றனர்.

    மறுநாள் அதிகாலை வடமாநில தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதற்காக எழுந்தனர். அப்போது அறையில் இருந்த அவர்களது 3 செல்போன்கள் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தேடி பார்த்து கிடைக்காததால் அவர்கள் சென்று செந்தில்குமாரிடம் தெரிவித்தனர்.

    அவர் குவாரியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்தார். அதில் 3 வாலிபர்கள் குவாரியில் இருந்து வெளியே செல்வது பதிவாகி இருந்தது. உடனே செந்தில்குமார் அவர்களை அழைத்து கொண்டு விரைந்தார்.

    அப்போதுஅங்கு சென்று கொண்டு இருந்த 3 வாலிபர்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த வாலிபர்களை செட்டிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீஸ் விசாரணையில் அவர்கள் விருதுநகரை சேர்ந்த மாரிஸ்வரன் (19), ஈச்சனாரியை சேர்ந்த குனசேகரன் (19), செட்டிப்பாளையத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (19) என்பதும், நண்பர்களான அவர்கள் செட்டிப்பாளையத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 121 செல்போன்கள் மீட்கப்பட்டது.
    • உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் நடந்தது.

    vசெல்போன்கள் ,recovery, மீட்பு, cell phones

    மதுரை

    மதுரை நகரில் மீனாட்சி அம்மன் கோவில் (7), தெற்கு வாசல் (2), திடீர்நகர் (17), திலகர் திடல் (10), திருப்பரங்குன்றம் (5), தல்லாகுளம் (39), செல்லூர் (10), அண்ணாநகர் (31) ஆகிய இடங்களில் தொலைந்து போன ரூ.12.10 லட்சம் மதிப்பு உடைய 121 செல்போன்கள் போலீசாரால் மீட்கப்பட்டன. அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் நடந்தது. போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

    மதுரை மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.82.10 லட்சம் மதிப்பு உடைய மொத்தம் 821 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • செல்போன் திருடர்கள் கைது செய்யப்பட்டு, ஏராளமான செல்போன்கள் மீட்கப்பட்டன
    • வழிப்போக்கு நபரிடமோ, தெரியாத நபரிடமோ செல்போன்களை கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் அடிக்கடி செல்போன்கள் திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிர ண்டு ஹரிகிரண் பிரசாத் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். அவரது உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதன் பலனாக செல்போன் திருடர்கள் கைது செய்யப்பட்டு, ஏராளமான செல்போன்கள் மீட்கப்பட்டன. அவை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த சூழலில் தக்கலை பகுதியில் மாயமான செல்போன்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் 211 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன.

    அவற்றை உரியவர்க ளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தக்கலையில் இன்று நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மீட்கப்பட்ட செல்போன்களை உரிய வர்களிடம் ஒப்படைத்தார்.

    துணை சூப்பிரண்டு கணேசன், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்வேல் முருகன், எழிலரசு ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட னர். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறுகையில், வழிப்போக்கு நபரிடமோ, தெரியாத நபரிடமோ செல்போன்களை கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.

    ×