என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரேசன் கடை பணியாளர்"
- கடலூரில் ரேசன் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- இதற்கு மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார்.
கடலூர்:
தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர் சங்கம் சார்பில் சரியான எடையில் நூல் மாற்றி அரிசி மூட்டைகளை இறக்கப்பட வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் இயற்றி வரும் லாரிகளில் எடை தராசுடன் வரவேண்டும். ஊதியத்தில் பிடித்தம் செய்யும் வருங்கால வைப்பு நிதி மற்றும் பணியாளர் சிக்கன நாணய கடன் சங்க நிதியை அவரவர் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும். லாரிகளில் நகர்வு பணியாளர்கள் உடன் வரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் கடற்கரை சாலையில் உள்ள கூட்டுறவு அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். நிர்வாகிகள் முத்து பாபு, நடராஜன், செல்லதுரை, பாஸ்கர், தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். இதில் நிர்வாகிகள் ஜெயச்சந்திர ராஜா, சரவணன், பிரகாஷ், சேகர், கணேசன், பழனிச்சாமி உட்பட கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.