search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவகம்"

    • பிடிபடுபவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்
    • கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஓட்டல்கள் மற்றும் டீ கடைகளில் பார்சலுக்கு பிளாஸ்டிக் கவர், சில்வர் பேப்பர்களை பயன்படுத்த உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது.

    பிளாஸ்டிக் பேப்பர், கவர்கள், சில்வர் பாயில் கவர் போன்றவற்றில் உணவுகளை கட்டிக் கொடுத்தால், முதல் முறை பிடிபடுபவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், தடையை மீறினால் உணவு பாதுகாப்புத்துறை சட்டப்படி கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • சாலையோர உணவகத்தில் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டார்.
    • அந்த கரப்பான்பூச்சி 3 சென்டிமீட்டர் நீளம் கொண்டதாக இருந்துள்ளது.

    டெல்லியை சேர்ந்த வாலிபரின் வயிற்றிலிருந்து உயிருடன் இருந்த கரப்பான்பூச்சியை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லியை சேர்ந்த 23 இளைஞர் ஒருவர் சாலையோர உணவகத்தில் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டார்.

    3 நாட்கள் வலியால் அவதிப்பட்ட அவர் கடைசியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை எண்டோஸ்கோப்பி பரிசோதனைக்கு உட்படுத்திய மருத்துவர்கள் அவரது வயிற்றில் கரப்பான்பூச்சி ஒன்று உயிருடன் இருப்பதை அறிந்தனர்.

    உடனே எண்டோஸ்கோப்பி முறையில் 10 நிமிடத்தில் அவரது வயிற்றில் இருந்த கரப்பான்பூச்சியை வெற்றிகரமாக மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். அந்த கரப்பான்பூச்சி 3 சென்டிமீட்டர் நீளம் கொண்டதாக இருந்துள்ளது.

    இளைஞர் சாப்பிடும்போது கரப்பான் பூச்சியை விழுங்கி இருக்கலாம் என்றும் தக்க சமயத்தில் சிகிச்சை அளித்ததால்தான் சிக்கலின்றி அவரை காப்பாற்ற முடிந்தது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

    • இன்று அதிகாலை 2 மணியளவில் விமானி உட்பட 2 பேர் பயணித்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.
    • ஹெலிகாப்டர்களின் 2 புரொபெல்லர்களும் [propellers] செயலிழந்ததால் இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது

    ஆஸ்திரேலியாவில் நட்சத்திர ஹோட்டலின் மேற்கூரையில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.வடக்குப் பகுதியில் உள்ள கெய்ர்ன்ஸ் Cairns நகரில் இயங்கி வரும் ஹில்டன் டபுள் ட்ரீ ஹோட்டலின் நீச்சல் குளம் அமைந்துள்ள மேற்கூரையில் இன்று அதிகாலை 2 மணியளவில் விமானி உட்பட 2 பேர் பயணித்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.

     

    விழுந்த வேகத்தில் ஹெலிகாப்டர் தீப்பற்றியெரிந்த நிலையில் விமானி சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஹோட்டலில் இருந்த 100க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் ஹோட்டலில் இருந்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

    வானில் பறந்துகொண்டிருந்தபோது ஹெலிகாப்டர்களின் 2 புரொபெல்லர்களும் [propellers] செயலிழந்ததால் இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விபத்துக்குப் பின் ஹெலிகாப்டர் தீப்பற்றியும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

    • ரம்யமான நாளொன்றின் காலைப் பொழுதில் சிற்றுண்டி சாப்பிட பெங்களூரில் உள்ள உடுப்பி கார்டன் ரெஸ்டாரண்டில் நுழைந்தார் ஒரு பெண்
    • சூடான உணவுதான் வேண்டும் என்று அந்த பெண் கேட்ட நிலையில் அதெல்லாம் தரமுடியாது என்று சர்வர் தெனாவட்டாக பதிலளித்துள்ளார்.

    ஐஸ்கிரீமில் மனித விரல், பூரான், மெஸ் உணவில் பாம்பு, குலோம்பஜாமூனில் கரப்பான் பூச்சி, தோசைக்கு பரிமாறப்பட்ட சாம்பாரில் செத்துக்கிடந்த எலி என சமீப காலமாக இந்தியாவில் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாத வகையில் சம்பவங்கள் அடுத்தடுத்து வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன. சிறியது முதல் பெரிய ஹோட்டல்கள் வரை பரிமாறப்படும் உணவின் தரம் குறித்த புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில் கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள உடுப்பி ஹோட்டல் ஒன்றில் பரிமாறப்பட்ட உணவு ஆறியிருந்ததால் டென்ஷனான கஸ்டமர் சட்டப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ரம்யமான நாளொன்றின் காலைப் பொழுதில் சிற்றுண்டி சாப்பிட பெங்களூரில் உள்ள உடுப்பி கார்டன் ரெஸ்டாரண்டில் நுழைந்த பெண்ணுக்கு ஆறிப்போன உணவு பரிமாறுபாடுள்ளது.

     

    தனக்கு சூடான உணவுதான் வேண்டும் என்று அந்த பெண் கேட்ட நிலையில் அதெல்லாம் தரமுடியாது என்று சர்வர் தெனாவட்டாக பதிலளித்துள்ளார். இதனால் மனம் நொந்த பெண் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஆறிப்போன உணவைப் பரிமாறியதற்காக உடுப்பி ஹோட்டலுக்கு ரூ.7000 விதித்து மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  

    • காத்திருந்த அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இருக்கைகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில் நபீஸா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து காத்திருக்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • தாங்கள் முஸ்லீம் என்பதற்காக பாரபட்சமாக செய்லபடுகிறார் என்று வெளிப்படையாக தெரிந்தது என்று நபீஸா கூறுகிறார்.

    புர்கா அணிந்து வந்த ஒரே காரணத்தால் பெண் ஒருவர் உணவகத்தில் மணிக்கணக்காக காத்திருக்க வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பல ஊர்களில் கிளைகள் கொண்டுள்ள கிருஷ்ணா பவன் உணவகத்துக்கு தனது கணவன், 2 வயது மகன் மற்றும் மாமியாருடன் நபீஸா என்ற இஸலாமிய பெண் ஒருவர் நேற்றிரவு உணவருந்த சென்றுள்ளார்.

    ஹோட்டலில் அதிக கூட்டம் இருந்ததால் ஒருவர் பின் ஒருவராக ரிசர்வ் முறையில் காத்திருந்த வாடிக்கையாளர்களை இருக்கைகளுக்கு அனுப்பியுள்ளது ஹோட்டல் நிர்வாகம். நபீஸாவும் தனது குடும்பத்துடன் இருக்கையை ரிசர்வ் செய்ய பெயர் கொடுக்க சென்றுள்ளார்.

    ஆனால் உணவக மேனேஜர் அந்த பெயர்களை குறித்துக்கொண்டதாக தெரியவில்லை. காத்திருந்த அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இருக்கைகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில் நபீஸா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து காத்திருக்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து இரண்டொரு முறை மேனேஜரிடம் கேட்டும் அவர் சரியாக பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. ஆனால் பலர் உணவருந்திவிட்டு எழுந்து சென்ற நிலையில் இருக்கைகள் காலியாக இருந்ததாக நபீஸா கூறுகிறார். சுமார் ஒரு மணி நேரம் கழித்து நபீஷாவின் கணவர் சென்று கேட்ட பிறகு அவர்களுக்கு இருக்கை அளிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் ஆர்டர் செய்த உணவை கொண்டுவர மேலும் 1 மணி நேரம் தாமதம் செய்துள்ளனர். இதுகுறித்து மேனேஜரிடம் கேட்டபொழுது தங்களை துளியும் பொருட்படுத்தாமல் அவர் அங்கிருந்து சென்றார் என்றும் அவர் தாங்கள் முஸ்லீம் என்பதற்காக பாரபட்சமாக செய்லபடுகிறார் என்று வெளிப்படையாக தெரிந்தது என்று நபீஸா கூறுகிறார்.

    இதுகுறித்து நபீஸா தனது பேஸ்புக் பதிவில், பொதுவாக இந்து - முஸ்லீம் பாகுபாடு என்று சொல்லப்படுவதின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் எனது வாழ்நாளில் தற்போது சந்தித்தது போன்ற பாகுபாட்டை சந்தித்ததே இல்லை. என்று தெரிவித்துள்ளார். 

    • பதர்களை ஏற்றிக்கொண்டு வந்த பஸ் நேற்று (மே 26) இரவு ஷாஜஹான்பூர் அருகே சாலையோர உணவகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
    • பேருந்தில் பயணம் செய்த பக்தர்கள் அனைவரும் உத்தர்காண்டின் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஜெதா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

    உத்தரகாண்டில் உள்ள பிரசித்தி பெற்ற பூர்ணகிரி கோயிலுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது டிரக் மோதியதில் 11 உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்களை ஏற்றிக்கொண்டு வந்த பஸ் நேற்று (மே 26) இரவு ஷாஜஹான்பூர் அருகே சாலையோர உணவகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

    அப்போது அந்த வழியாக போலஸ்ட் கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி நிலை தடுமாறி பஸ் மீது கவிழ்ந்ததில் பஸ்ஸின் உள்ளே அமர்ந்திருந்த பக்தர்கள் 10 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

     

    இந்த விபத்தில் மேலும் 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்தில் பயணம் செய்த பக்தர்கள் அனைவரும் உத்தரகாண்டின் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஜெதா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். விபத்து தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

     

    • சோதனையின் போது தண்ணீருக்கான பகுப்பாய்வு அறிக்கை இன்னும் வழங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
    • பல்வேறு பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    ஹைதராபாத்தில் உள்ள உப்பல் பகுதியில் உள்ள உணவகங்களில் சுகாதார மற்ற முறையில் உணவகங்கள் செயல்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது.

    இந்நிலையில் உணவு ஆய்வார்கள் பிரபலமான உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் உணவு பொருட்கள் சுகாதாரமற்ற நிலையில் இருந்தது அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

    FSSAI அதிரடிப்படை குழு உப்பல் பகுதியில் சோதனை நடத்தியதில் செயற்கை உணவு வண்ணங்களை பயன்படுத்தியதும், 4 காலாவதியான விஜயா பால் பாக்கெட்டுகள், 65 கிலோ லேபிள் இல்லாத இஞ்சி பூண்டு விழுதுகள், பேக்கரி பொருட்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தினர்.


    சோதனையின் போது தண்ணீருக்கான பகுப்பாய்வு அறிக்கை இன்னும் வழங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

    மிகவும் சுகாதாரமற்ற நிலையில் உள்ள குளிர்சாதனப் பெட்டி, சரியாக சேமிக்கப்படாத அரைத்த தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள், ஹேர்கேப்கள், கையுறைகள், ஏப்ரான்கள் மற்றும் மருத்துவ உடற்பயிற்சி சான்றிதழ்கள் இல்லாமல் உணவு கையாளுபவர்கள் என பல்வேறு பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் இந்த ஆய்வில் எடுக்கப்பட்ட படங்கள் சமூகவளைதலங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பான ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, காலாவதியான பால், செயற்கை வண்ணங்களைப் பயன்படுத்துவது மற்றும் பல விதிமீறல்களில் ஈடுபட்டுள்ள இந்த உணவகங்கள் குறித்து ஜாக்கிரதையாக இருக்குமாறும், மேலும் இது ஹைதராபாத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ளதாக நான் உறுதியாக நம்புகிறேன்... என்று சமூக வலைதலங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


    • இந்த படத்தின் முதல் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
    • இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் புஷ்பா 2 படம் விரைவில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் அல்லு அர்ஜூன் பிறந்த நாளை ஒட்டி இந்த படத்தின் முதல் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில், அல்லு அர்ஜூன் தனது மனைவியுடன் அமர்ந்து சாப்பிடும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்துடன், "அல்லு அர்ஜூன் அண்ணாவும், ஸ்னேகா காருவும் எளிமையான சாலையோர தாபா ஒன்றில் சாப்பிடுகிறார்கள். எளிமையான மனிதர்," என்ற தலைப்பிடப்பட்டு உள்ளது.

     


    2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாகவே இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெஜிடபிள் எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடாக்கி பயன்படுத்துவது இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • வெஜிடபிள் எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடாக்கும்போது அதில் நச்சு கலவைகள் மற்றும் ட்ரான்ஸ் கொழுப்புகள் உருவாகிறது.

    வெஜிடபிள் எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடாக்கி பயன்படுத்துவது இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) எச்சரிக்கை விடுத்துள்ளது.

     

    ICMR மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் இணைந்து, இந்தியர்களிடையே ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தடுப்பதற்கும் ஏற்ற உணவுப் பழக்கங்களை கடைபிடிக்க வலியுறுத்தி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், சமயல் எண்ணெய்கள் அல்லது கொழுப்பு நிறைந்த எண்ணெய்களை மீண்டும் மீண்டும் சூடாக்கி பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

     

    வெஜிடபிள் எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடாக்கும்போது அதில் நச்சு கலவைகள் மற்றும் ட்ரான்ஸ் கொழுப்புகள் உருவாகிறது. இது இதய நோய்கள் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. உணவகங்களிலும் வீடுகளிலும் வெஜிடபிள் எண்ணெய்யை சூடாக்கி பயன்படுத்துவது சாதாரணமாக நிகழ்ந்து வருகிறது. இதை சுட்டிக்காட்டியே ICMR இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. வெஜிடபிள் எண்ணெய்யை 1 அல்லது 2 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்துவதே பாதுக்காப்பானதாகும். அதற்கு மேல் அதை சேமித்து வைத்துப் பயன்படுத்துவது ஆபத்திலேயே முடியும் என்று மருத்துவ வல்லுனர்களும் தெரிவிக்கின்றனர்.

    • தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் நடைபெறவுள்ளது
    • 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்குச்சாவடிக்குச் சென்று 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து பொது மக்களிடம் பல்வேறு வகையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தவறாமல் தேர்தல் நாளான ஏப்ரல் 19ம் தேதி தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

    "ஏப்ரல் 19ம் தேதி தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்கும்போது விரலில் வைக்கப்பட்ட மை அடையாளத்தை செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள உணவகங்களில் ஏப்ரல் 20ம் தேதி சாப்பிடச் செல்லும்போது காண்பித்தால் உணவு விலையில் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும், என்று செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்துள்ளனர் என்பதையும் உறுதிசெய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாநகர காவல் ஆணையர் விரைந்து ஆய்வு.
    • 10 விநாடிகளில் இரண்டு முறை வெடி சத்தம் கேட்டதாக தகவல்.

    கர்நாடகா மாநிலம், பெங்களூரு வைட் பீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தில், உணவகத்தில் இருந்த 3 ஊழியர்கள் மற்றும் ஒரு வாடிக்கையாளர் என 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாநகர காவல் ஆணையர் விரைந்து ஆய்வு செய்தார். மேலும், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் ஆய்வு நடத்தியுள்ளனர்.

    இதில், சிலிண்டர் வெடிக்கவில்லை என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 10 விநாடிகளில் இரண்டு முறை வெடி சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம், கை கழுவும் இடத்தில் நடந்துள்ளதாக தகவல் வெளியானது. வாடிக்கையாளர் விட்டுச் சென்ற பையில் வெடித்ததாக உணவகத்தின் உரிமையாளர் கூறியதாக எம்.பி தேஜஸ்வி சூர்யா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயம் அடைந்தவர்களிடமும் தேசிய புலனாய்வு முகமே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்தது குண்டுவெடிப்புதான் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர்,"முதற்கட்ட விசாரணையில் மேலோட்டமாக பார்க்கும் போது IED குண்டு வெடிப்பு போல் தெரிகிறது. ஆனால், இது சிலிண்டர் இல்லை. காவல்துறை முறையான அறிக்கை வழங்கிய பிறகுதான் எந்த தகவலும் தெரிவிக்க முடியும்" என்றார்.

    • காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
    • 3 ஊழியர்கள் மற்றும் ஒரு வாடிக்கையாளர் படுகாயம்.

    கர்நாடகா மாநிலம்,பெங்களூரு வைட் பீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

    வெடி விபத்தில், உணவகத்தில் இருந்த 3 ஊழியர்கள் மற்றும் ஒரு வாடிக்கையாளர் என 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

    மேலும், உணவத்தில் சிலிண்டர் வெடித்ததா ? அல்லது வேறு ஏதேனுமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×