search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடலூரில்"

    • திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் கூடலூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.
    • கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி திராவிட இயக்க வரலாறு எனும் தலைப்பிலும் கருத்துரையாற்றினார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட தி.மு.க இளைஞரணி சார்பில் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் கூடலூரில் உள்ள திருமண மண்டபத்தில் மாவட்ட இளைஞரணி செயலாளர் இமயம் சசிகுமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை அமைப்பாளர் நவபுல் அனைவரையும் வரவேற்றார்.

    மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தொடக்க உரையாற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார், மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாபு, நாகராஜ், உமாநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தி.மு.க செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா மாநில சுயாட்சி எனும் தலைப்பிலும், கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி திராவிட இயக்க வரலாறு எனும் தலைப்பிலும் கருத்துரையாற்றினர்.

    இதில் முன்னாள் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், ஒன்றிய நகர செயலாளர்கள் லியாகத் அலி, இளஞ்செழியன் பாபு, சிவானந்தராஜா, சேகர், சுஜேஷ், முன்னாள் நகர செயலாளர்கள் காசிலிங்கம், ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜா, சதக்கத்துல்லா, பேரூர் கழக செயலாளர்கள் சின்னவர், சுப்பிரமணி, நகராட்சி தலைவர்கள் பரிமளா, சிவகாமி, பேரூராட்சி தலைவர்கள் சித்ராதேவி, வள்ளி, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் ஆலன், ரெனால்டு, மகேஸ்வரன் உட்பட கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் திரளாக கலந்துகொண்டனர். இளைஞர் அணியினர் 400-க்கும் மேற்பட்டவர்கள் திரளாக கலந்துகொண்டனர். முடிவில் நெல்லியாளம் நகர துணை அமைப்பாளர் சூசைராஜ் நன்றி கூறினார்.

    • கூடலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
    • வீட்டுக்குள் வைத்திருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களையும், பிற பொருட்களையும் காட்டு யானை சேதப்படுத்தியது.

    கூடலூர்

    கூடலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஓவேலி பேரூராட்சி சூண்டி அருகே மரப்பாலம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன். கடந்த ஆண்டு இறந்து விட்டார்.

    இவரது மனைவி முத்துலட்சுமி. தேயிலை தோட்டத்துக்கு வேலைக்கு சென்று தனது மகனை கவனித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு அப்பகுதிக்குள் காட்டு யானை நுழைந்தது. தொடர்ந்து முத்துலட்சுமியின் வீட்டை முற்றுகையிட்டது.

    சிறிது நேரத்தில் வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு எழுந்த முத்துலட்சுமி தனது மகனை தூக்கிக் கொண்டு வீட்டின் மறுபுறம் வழியாக வெளியேறி தப்பி ஓடினார்.

    தொடர்ந்து வீட்டுக்குள் வைத்திருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களையும், பிற பொருட்களையும் காட்டு யானை சேதப்படுத்தியது. பாக்கு மரங்கள் சேதம் இதை அறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    இதனால் காட்டு யானை அங்கிருந்து சென்றது. தொடர்ந்து ஊருக்குள் காட்டு யானை வருவதால் தோட்ட தொழிலாளர்கள் மட்டுமின்றி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதற்கிடையே தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாலம்வயல், ஒற்றவயல் உள்ளிட்ட இடங்களில் தோட்டத்துக்குள் புகுந்து விநாயகன் காட்டு யானை நேற்று பாக்கு மரங்களை தின்று சேதப்படுத்தியது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். பல மாதங்களாக பயிர்கள், வாகனங்களை காட்டு யானை தொடர்ந்து சேதப்படுத்தி வருவதாக புகார் தெரிவித்து உள்ளனர்.

    ×