search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரம் விழுந்தது"

    • நெடுஞ்சாலை அருகே கார் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருபவர் செல்வம்.
    • மரம் விழுந்தவிபத்தில் கார் மற்றும் கடையில் இருந்த சுமார் 6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உதய் நகர் நெடுஞ்சாலை அருகே கார் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருபவர் செல்வம். இவர் சர்வீஸ் சென்டருக்கு வந்த காரை தனது செட்டில் நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் திடீரென அருகில் இருந்தமரம் முறிந்து அருகே இருந்த கார் மீது விழுந்தது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி சேதமடைந்தது. அதேபோல அருகே பங்க் கடை நடத்தி ஒருவர் ராம் இவர் கடை மீதும் மரம் விழுந்து கடைகளில் இருந்த அனைத்து பொருட்களும் சேதம் அடைந்தது. மரம் விழுந்தவிபத்தில் கார் மற்றும் கடையில் இருந்த சுமார் 6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது.மரம் நள்ளிரவு விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் மேல்புறத்தில் கொடுக்காப்புளி மரம் ஒன்று நின்றது.
    • அதன் அருகில் அதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் ஆஸ்பெட்டாஸ் சீட்டால் மேற்கூரை அமைத்த வீடு கட்டி குடியிருந்து வருகிறார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் மேல்புறத்தில் கொடுக்காப்புளி மரம் ஒன்று நின்றது. அதன் அருகில் அதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் ஆஸ்பெட்டாஸ் சீட்டால் மேற்கூரை அமைத்த வீடு கட்டி குடியிருந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று திடீரென அந்த மரம் முறிந்து விழுந்தது. அது மகாலிங்கத்தின் வீட்டின் மேற்கூரையை தொட்டபடி காம்பவுண்ட் சுவற்றுக்குள் விழுந்தது. அந்த நேரத்தில் சிறுவர்கள் யாரும் அந்த பகுதியில் விளையாடாமல் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்க ராஜன் அருகில் இருந்த பொதுமக்களுடன் இணைந்து மரக்கிளைகளை அப்புறப்படுத்தி வீட்டில் மாட்டிக்கொண்ட மகாலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினரை பத்திரமாக மீட்டனர். 

    • மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
    • மின் கம்பிகளை ஊழியர்கள் அகற்றினர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் போலீஸ் நிலையத்தின் வளாகத்தில் பழமை வாய்ந்த மரம் ஒன்று இருந்தது.

    இது காய்ந்து போன நிலையில் இருந்ததால் திடீரென மின் கம்பி மீதும், போலீஸ் நிலையம் மீதும் திடீரென விழுந்தது. இதில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    அப்பகுதியில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மின் கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்ததால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின் ஊழியர்கள் மின் கம்பிகளை அகற்றி மீண்டும் மின் இணைப்பு வழங்கினர்.

    ×