என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நேரு ரைபிள் கிளப் சாதனை"
- தனியார் பள்ளி மாணவர்கள் திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டனர்.
- கோவை மாவட்ட கலெக்டர் சமீரனை சந்தித்தனர். மாணவ- மாணவிகளை கலெக்டர் சமீரன் பாராட்டினார்.
கோவை:
கோவை நேரு ரைபிள் கிளப்பை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டனர்.
இதில் டுவிங்கிள் யாதவ் பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கமும், மாணவி பிரீத்தி மாஸ்டர் உமன் பிரிவில் தங்கப்பதக்கமும் மற்றும் ஜெய்கிஷோர் தங்கப்பதக்கமும், கார்த்திக் தனபால் வெண்கல பதக்கமும் வென்றனர். சஜய் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்றார்.
மாணவி ஸ்வர்ணலதா தங்கப்பதக்கமும், வெள்ளி பதக்கத்தையும், மாணவி பிரியதர்ஷினி வெள்ளி பதக்கத்தையும் வென்றனர். மொத்தம் 4 தங்கப்பதக்கம், 5 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களை வென்றனர்.
இவர்கள் கோவை மாவட்ட கலெக்டர் சமீரனை சந்தித்தனர். மாணவ- மாணவிகளை கலெக்டர் சமீரன் பாராட்டினார்.
அப்போது நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும் நேரு ரைபிள் கிளப் தலைவர் டாக்டர் பி. கிருஷ்ணகுமார் மற்றும் செயலார் எஸ். அஜய் மற்றும் நேரு கல்வி குழுமங்களின் மக்கள் தொடர்பு இயக்குனர் முரளிதரன் மற்றும் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.