search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூக்குழி திருவிழா"

    • கடந்த 3-ந் தேதி முளைப்பாரி கும்மி பாட்டு ஊர்வலத்துடன் சிறப்பு அபிஷேக பூஜை, அன்னதானம், நடைபெற்றது.
    • சுமார் 1,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்தி கடனை நிறைவு செய்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் அய்யாபுரம் கிராமத்தில் உள்ள இந்து நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு 30-வது ஆண்டு திருவிழாவினை முன்னிட்டு செப்டம்பர் 25-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய திருவிழா கடந்த 3-ந் தேதி (செவ்வாய்கிழமை) முளைப்பாரி கும்மி பாட்டு ஊர்வலத்துடன் சிறப்பு அபிஷேக பூஜை, அன்னதானம், வில்லிசை கச்சேரி, பலவகை மேளதாளங்கள் முழங்க விமர்சையாக நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்கள் நேர்த்தி கடனை நிறைவு செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். மேலும் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், பன்னீர் குடம், முளைப் பாத்தி ஊர்வலத்தை தொடங்கினர்
    • மறுநாள் மஞ்சள் நீராடுதல் திருஷ்டி பூஜை உற்சவ மூர்த்திக்கு நீராட்டு விழா ஆகியவை நடைபெற்றது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற ஆலயத்தில் முப்பந்தல் ஸ்ரீ ஆலமுடு அம்மன் கோவில் ஒன்றா கும். இங்கு ஆடி மாத கொடையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்களின் பால்குட ஊர்வலமும், பூக்குழி திருவிழாவும் நடந்தது.

    ஆரல்வாய்மொழி வடக்கூர் குட்டி குளத்தான் கரை இசக்கியம்மன் ஆலயத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், பன்னீர் குடம், முளைப் பாத்தி ஊர்வலத்தை தொடங்கினர். ஆரல்வாய் மொழி பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் தொடங்கி வைத்தார். அதன் பின்பு ஆலயத்தில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், சிறப்பு பூஜை, நள்ளிரவு பக்தர்கள் பரவசத்தோடு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நள்ளிரவு ஊட்டுப்படைப்பு, அன்னப்படைப்பு நடந்தது. மறுநாள் மஞ்சள் நீராடுதல் திருஷ்டி பூஜை உற்சவ மூர்த்திக்கு நீராட்டு விழா ஆகியவை நடைபெற்றது. கொடை விழா ஏற்பாடுகளை ஆலமூடு அம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் டாக்டர் அருணாச்சலம் மற்றும் பக்தர்கள் சேவா சங்கத்தினர் செய்து இருந்தனர்.

    • பூக்குழி திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • சிலர் தங்கள் குழந்தைகளுடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சங்கர்நகர் 2-ம் தெருவில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் 1-ந் தேதி சக்தி கும்பம் எடுக்கும் நிகழ்ச்சியும், 2-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும், 4-ந் தேதி கரகம் நிகழ்ச்சியும், 7-ந் தேதி அர்ஜுனன் தபசு நிகழ்ச்சியும் நடந்தது.

    8 -ந் தேதி திரவுபதி அம்மன் கூந்தல் முடிப்பு நிகழ்ச்சி நடந்தது. அதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்தது.

    பூக்குழி திருவிழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு சக்தி நிறுத்துதல், அக்னி வளர்த்தல் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு சுவாமி அம்பாள் நாதஸ்வர வாத்தியங்களுடன் காவடிக்குடம் சுமந்தபடி, மஞ்சளாடை உடுத்தி பூ இறங்கும் பக்தர்களுடன் திரவுபதி அம்மன் புஷ்ப வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து மாலை 7.25 மணிக்கு மேல் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் உள்ளிட்ட 188 பக்தர்கள் பூக்குழி இறங்கினர். சிலர் தங்கள் குழந்தைகளுடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    விழாவில் சங்கரன்கோவில் நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி சரவணன், செங்குந்தர் அபிவிருத்தி சங்க தலைவர் சங்கரசுப்பிரமணியன், செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் குருநாதன், தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி சரவணன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை செங்குந்தர் அபிவிருத்தி சங்கத்தினர் செய்திருந்தனர்.

    • சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டும், சிவகிரி பூக்குழித் திருவிழாவை முன்னிட்டும், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின் படி, சிவகிரி வடக்கு ரத வீதியில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், மாவட்ட துணைத் தலைவர் மனோ கரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சிக்கு சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தலைமை தாங்கினார். பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கட கோபு, துணைத்தலைவர் லட்சுமி ராமன், கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மருது பாண்டியன், மருத வள்ளி முருகன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சுந்தரவடிவேலு, உதயநிதி ஸ்டாலின் மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் புல்லட் கணேசன், 9-வது வார்டு செயலாளர் பிச்சைமணி ஆகியோரின் ஏற்பாட்டில் அன்ன தானம் வழங்க ப்பட்டது.நிகழ்ச்சியில் நல்லசிவம், முனி யாண்டி, துரைராஜ், கார்த்திக், பரமசிவன், ராம்குமார், அய்யாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ெதாடங்கியது.
    • வருகிற 4-ந் தேதி பூக்குழி திருவிழா நடை பெறுகிறது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் புதுப்பாளையம் பச்சமடம் மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி பொங்கல் விழா ராஜூக்கள் சமூகத்தினர் சார்பில் கடந்த 9-ந் தேதி சிறப்பாக நடந்தது.

    அதன் தொடர்ச்சியாக பல்வேறு சமூகத்தினர் இணைந்து சிறப்பாக கொண்டாடும் சித்திரை பூக்குழி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை யொட்டி சுவாமி அம்பா ளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து சிவாச்சா ரியார்கள் அலங்கரிக் கப்பட்ட கம்பத்தில் திரு விழா கொடியேற்றினர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கொடி யேற்றம் தொடங்கியது முதல் ஒவ்வொரு சமூகத்தி னற்கு ஒரு திருவிழா என 11 நாட்கள் திருவிழா நடை பெறும். வருகிற 4-ந் தேதி பூக்குழி திருவிழா நடை பெறுகிறது.

    திருவிழாவில் புதுப் பாளையம் மாரியம்மனுக்கு பல்வேறு அலங்காரங்கள் ஆராதனைகள் செய்யப் பட்டு அம்மன் கண்ணாடி சப்பரம், பூ சப்பரம், பூத வாகனம், தண்டியல் தட்டு சப்பரம் உள்ளிட்ட வாக னங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க இருக்கிறார்.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ரவிராஜா தலைமையில் அறங்காவலர் குழு ரமேஷ்ராஜா,ராம்ராஜ்ராஜா,ஜெய்குமார்ராஜா, கார்த்திக்ராஜா மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • ராஜபாளையம் அருகே மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடந்தது.
    • விழாவில் ராஜபாளையம் சேத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மன் பூப்பல்லக்கு, சிம்ம வாகனம் என பல்வேறு அலங்கார வாகனங்களில் திருவீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழாவையொட்டி தீ குண்டம் வளர்க்கப்பட்டது.

    பூக்குழி இறங்கும் பக்தர்கள் மற்றும் பெண்கள் பெண்கள் முளைப்பாரி எடுத்தும், ஆயிரங்கண் பானை எடுத்தும் ஊர்வலமாகச் சென்றனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர். விழாவில் ராஜபாளையம் சேத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

    • கடந்த 5-ந்தேதி கொடியேற்றி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய விழா நாளான இரவு பூக்குழி திருவிழா நடைபெற்றது.
    • அரிவாள்கள் மீது ஏறி நின்று சாமியாடி அருள்வாக்கு கூறி பக்தர்கள் மீது மலர் தூவும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கோட்டநத்தம் கிராமத்தில் உள்ள பதினெட்டாம் படி கருப்புசாமி மற்றும் கள்ளழகர், கோவில் பூக்குழி திருவிழா ஆண்டுதோறும் ஆடி பவுர்ணமி அன்று நடைபெறுவது வழக்கம். கடந்த 5-ந்தேதி கொடியேற்றி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முக்கிய விழா நாளான இரவு பூக்குழி திருவிழா நடைபெற்றது. அரிவாள்கள் மீது ஏறி நின்று சாமியாடி அருள்வாக்கு கூறி பக்தர்கள் மீது மலர் தூவும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    • மொகரம் பண்டிகையை முன்னிட்டு மதநல்லிணக்க பூக்குழி திருவிழா நடந்தது.
    • இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் பூக்குழி இறங்கியும், பெண்கள் தலையில் தீக்கங்குகளை போட்டு தெய்வமாக வணங்கி வருகின்றனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பெரியகுளம் கிராமத்தில் முகரம் பண்டிகையை முன்னிட்டு மத நல்லிணக்க பூக்குழி திருவிழா நடந்தது. பெரியகுளம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு அசனார், உசேனார், மாமூனச்சி ஆகிய உடன் பிறந்தவர்கள் இருந்தனர்.

    அங்கு நடந்த கலவரத்தில் அசனார், உசேனார் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். அவர்களை எரித்த தீயில் சகோதரியான மாமுனாட்சி அதே நெருப்பில் தன் உயிரை மாய்த்துக் கொண்டார். அதன் பின்பு பெரியகுளம் பகுதியில் காலரா பரவி அதிக அளவில் பொதுமக்கள் இறந்தனர்.

    அந்த கிராமத்தில் பெரியவர் ஒருவர் கனவில் தலையில் முக்காடு அணிந்த பெண் தோன்றி நோய் குணமாக வேண்டுமானால் வருடந்தோறும் பூக்குழி இறங்கி எங்களை வணங்கி வந்தால் நோய் குணமாகும் என்று கூறி மறைந்தார். அதன்படி பொதுமக்கள் நேர்த்திக்கடனாக செய்தனர்.

    பரவிய நோய் காணாமல் போனது. அது முதல் பெரியகுளம் கிராம மக்கள் ஆண்டுதோறும் மொகரம் பண்டிகை அன்று இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் பூக்குழி இறங்கியும், பெண்கள் தலையில் தீக்கங்குகளை போட்டு தெய்வமாக வணங்கி வருகின்றனர். விழாவில் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்றனர்.

    ×