search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "களப்பணி"

    • பொது வினியோக திட்டத்தை தமிழக அரசு, தனியார் துறையாக அறிவிக்க வேண்டும்.
    • மகளிர் உரிமை திட்டத்து க்காக, களப்பணியில் ஈடுபட்ட ரேஷன் பணியாளர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்க (சி.ஐ.டி.யு.,) நிர்வாகிகள் கூட்டம், சி.ஐ.டி.யு., மாவட்ட குழு அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் கவுதமன் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதிப்படி பொது வினியோக திட்டத்தை தமிழக அரசு, தனியார் துறையாக அறிவிக்க வேண்டும். ரேஷன் பணியாளர் அனைவரையும் பி.எப்., திட்டத்தில் சேர்க்க வேண்டும். பல கூட்டுறவு சங்கங்களில் தேர்வு நிலை சிறப்பு நிலை ஊதியம் வழங்கப்படவில்லை. மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகளில் தேங்கியுள்ள காலி சாக்குகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

    மகளிர் உரிமை திட்டத்து க்காக, களப்பணியில் ஈடுபட்ட ரேஷன் பணியாளர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பிட வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். காலாவதியாகாத தரமான மளிகை பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    அனைத்து பொருட்களும் 10-ந்தேதிக்குள் ரேஷன் கடைகளுக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    • ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குனர் மாலதி செய்திருந்தார்.
    • கூட்டத்தினை வேளாண் துணை இயக்குனர் மாநிலத் திட்டம் பொறுப்பு சாருமதி ஒருங்கிணைத்தார்.

    மதுக்கூர்:

    தமிழ்நாடு அரசு வேளாண் துறையின் கூடுதல் இயக்குனர் சிவக்குமார் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் மற்றும் திருவோணம் ஆகிய 5 வட்டாரங்களை சேர்ந்த வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளை எவ்வாறு செயல்படுத்துகின்றனர் என ஆய்வு செய்தார்.

    மேலும் இனி செயல்படுத்த மேற்கொண்டுள்ள பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து வேளாண் உதவி அலுவலர் வாரியாக ஆய்வு செய்தார்.

    அபோது அவர் வேளாண் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் அனைத்து திட்டங்களையும் விவசாயிகளுக்கு ஏற்ற நேரத்தில் கிடைக்கும் வகையில் செயல்படுத்திட கேட்டுக் கொண்டார்.

    கூட்டத்தில் தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நில ஆவணங்களின் உரிமை குறித்த ஆய்வு மற்றும் பிஎம் கிசான் திட்ட பயனாளிகள் ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண்ணை இணைக்கும் இ கேஒய்சி பணியினையும், ஆகஸ்ட் 15க்குள் செயல்பட்டு முடித்திட கேட்டுக் கொண்டார்.

    ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குனர் மாலதி செய்திருந்தார். கூட்டத்தில் பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குனர் செல்வநாயகம், சேதுபாவாசத்திரம் வேளாண்மை இயக்குனர் சாந்தி, திருவோணம் சுதா மற்றும் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி உட்பட கலந்து கொண்டனர்.

    கூட்டத்தினை வேளாண் துணை இயக்குனர் மாநிலத் திட்டம் பொறுப்பு சாருமதி ஒருங்கிணைத்தார். கூட்டத்திற்கு பின் வேளாண் கூடுதல் இயக்குனர் கலைஞர் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட அத்திவெட்டி பஞ்சாயத்தில் ஊரக வளர்ச்சித்துறை வேளாண் பொறியியல் துறை மற்றும் சொந்தமாகவும், பண்ணை குளங்கள் வெட்டி தற்போது மீன்வளத் துறையின் மூலம் உள்நாட்டு மீன் வளர்ப்புகாக மானியம் பெற தேர்வு செய்யப்பட்டுள்ள அத்திவெட்டி பெரியசாமி உள்ளிட்ட 2 விவசாயிகளின் பண்ணை குட்டைகளை ஆய்வு செய்தார்.

    வேளாண் துணை அலுவலர் அன்புமணி, வேளாண் உதவி அலுவலர்கள் முருகேஷ்ஜெரால்டு மற்றும் பூமிநாதன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    வேளாண் உதவி இயக்குனர் திலகவதி மானியத்தில் மீன் வளர்ப்பதற்கு கலைஞர் திட்டத்தின் கீழ் அத்திவெட்டியில் 20 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்த தெரிவித்தார். வேளாண் துணை இயக்குனர் பொறுப்பு சாருமதி மற்றும் பட்டுக்கோட்டை விதை ஆய்வாளர் நவீன் சேவியர் உள்நாட்டு மீன் வளர்ப்பு பற்றி கூடுதல் இயக்குனரிடம் எடுத்துரைத்தனர்.

    ×