search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அயர்லாந்து ஆப்கானிஸ்தான் தொடர்"

    • ஆப்கானிஸ்தான் 54.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்கள் எடுத்தது.
    • அயர்லாந்து தரப்பில் மார்க் அடேர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    அயர்லாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக இப்ராஹிம் சத்ரான்- நூர் அலி சத்ரன் களமிறங்கினர்.

    நூர் அலி சத்ரன் 7 ரன்னிலும் அடுத்து வந்த ரஹமத் 0 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார். இதனையடுத்து இப்ராஹிம் சத்ரான் - ஷாஹிதி ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து கொடுத்தது.

    20 ரன்கள் எடுத்த போது ஷாஹிதி அவுட் ஆனார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இப்ராஹிம் சத்ரான் அரை சதம் விளாசி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். கடைசி வரை கரீம் ஜனத் ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில் ஆப்கானிஸ்தான் 54.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து தரப்பில் மார்க் அடேர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து அயர்லாந்து அணி முதல் இன்னிங்சை ஆடியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அயர்லாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீத் சத்ரன், ஜியா-உர்-ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 15 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 95 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய அயர்லாந்து வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து டி20 தொடரை வென்றது.

    பெல்பாஸ்ட்:

    அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. 4 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றன.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி பெல்பாஸ்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 15 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்தபோது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதிகபட்சமாக உஸ்மான் கனி 44 ரன்கள் எடுத்தார்.

    மழை தொடர்ந்து பெய்ததால், ட்க்வொர்த் லூயிஸ் முறையில் 7ஓவரில் 56 ரன்கள் எடுத்தால் வெற்றி என அயர்லாந்து அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி 6.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 56 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடரை 3-2 என கைப்பற்றி அசத்தியது.

    ஆட்ட நாயகன் விருது மார்க் அடைருக்கும், தொடர் நாயகன் விருது டாக்ரெலுக்கும் வழங்கப்பட்டது.

    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 132 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய அயர்லாந்து 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பெல்பாஸ்ட்:

    அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல், 2வது டி20 போட்டியில் அயர்லாந்தும், 3வது போட்டியில் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 பெல்பாஸ்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டம் 11 ஓவராகக் குறைக்கப்பட்டது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 11 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் குவித்தது. அந்த நஜிபுல்லா அரை சதமடித்தார். கடைசி கட்டமாக அதிரடி காட்டிய ரஷித்கான் 10 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 31 ரன்கள் குவித்தார்.

    இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. டாக்ரெல் அதிகபட்சமாக 41 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இறுதியில், அயர்லாந்து 20 ஓவரில் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஷித் கான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    டி20 தொடரில் இரு அணிகளும் 2-2 என சமனிலை வகிக்கிறது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது மற்றும் கடைசி போட்டி வரும் 17ம் தேதி நடைபெறுகிறது.

    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 122 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய அயர்லாந்து 125 ரன்கள் எடுத்து வென்றது.

    பெல்பாஸ்ட்:

    அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    முதல் டி20 போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 பெல்பாஸ்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி ஆப்கானிஸ்தானை கட்டுப்படுத்தினர். ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஹஷ்மதுல்லா ஷஹிதி 36 ரன்கள் எடுத்தார்.

    அயர்லாந்து சார்பில் ஜோஷ்வா லிட்டில், மார்க் அடைர், காம்பெர் மற்றும் டெலானி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. பால்பரின் பொறுப்புடன் ஆடினார். அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்னில் அவுட்டானார். டக்கர் 27 ரன் எடுத்தார்.

    இறுதியில், அயர்லாந்து 19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டாக்ரெல் 25 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் அயர்லாந்து அணி டி20 தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    ×