என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்"
- ஆடி மாதத்தில் குரும்பர் சமுதாய மக்கள் சார்பில் கோவில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
- கோவில் பூசாரி பக்தர்கள் தலையில் ஆவேசமாக தேங்காயை உடைத்து சிதறவிட்டார். இது பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது.
பழனி:
பழனி அருகே பாப்பம்பட்டியில் பழமையான மகாலட்சுமிஅம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதத்தில் குரும்பர் சமுதாய மக்கள் சார்பில் கோவில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். குதிரையாறு அணையில் இருந்து புனிதநீர் கொண்டுவரப்பட்டு மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனைதொடர்ந்து கோவில் பூசாரி பக்தர்கள் தலையில் ஆவேசமாக தேங்காயை உடைத்து சிதறவிட்டார். இது பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது. இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில்,
பல வருடங்களாக கோவில் திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறோம். நினைத்ததை அம்மன் நிறைவேற்றி தருவார். இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர் என்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பாப்பம்பட்டி, குப்பம்பாளையம், வாடிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.