என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிதாப சாவு"

    • நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது மோதாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றபோது தூக்கி வீசப்பட்டார்.
    • மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே உள்ள சேரமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜோசு (வயது 32), தொழிலாளி.

    இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பிள்ளையார் கோவிலில் இருந்து சேரமங்கலம் நோக்கி சென்றார். பெரிய குளத்தங்கரை பகுதியில் சென்ற போது, அங்கு ஓருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அவர் மீது மோதாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளை ஜோசு நிறுத்த முயன்றார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. மோட்டார் சைக்கிளில் இருந்து ஜோசுவும் தூக்கி வீசப்பட்டார்.

    விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் பலத்த காயம் அடைந்த ஜோசு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மோட்டார் சைக்கிள் மோதியதில் காயம் அடைந்தவர் பறையங்கோட்டையைச் சேர்ந்த பாலையன் (51) என தெரியவந்தது. அவர் சிகிச்சைக்காக திங்கள் நகரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்ப ட்டு உள்ளார். விபத்து குறித்து மணவாளக்குறிச்சி போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணிபாலன் (வயது 38). வெல்டிங் தொழிலாளியான இவர் ஓசூரில் வேலை பார்த்து வந்தார்.
    • ஓசூரில் இருந்து சேலம் வந்தவர் புதிய பஸ் நிலையத்தில் ஏற்காடு பஸ் நிறுத்தம் பகுதியில் என்று அதிகாலை இறந்து கிடந்தார்.

    சேலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பழைய எடக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மணிபாலன் (வயது 38). வெல்டிங் தொழிலாளியான இவர் ஓசூரில் வேலை பார்த்து வந்தார்.இந்த நிலையில் ஊருக்கு செல்வ தற்காக ஓசூரில் இருந்து சேலம் வந்தவர் புதிய பஸ் நிலையத்தில் ஏற்காடு பஸ் நிறுத்தம் பகுதியில் என்று அதிகாலை இறந்து கிடந்தார்.

    இதுகுறித்த தகவலின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் மணிபாலன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் மணிபாலன் மனைவி மணிமேகலைக்கு தகவல் தெரிவித்துள்ளனர.

    போலீசார் முதற்கட்ட விசாரணையில் மணிபால னுக்கு நீரழிவு நோய் இருந்து வந்துள்ளதும் அதற்கு மாத்திரை எடுத்துக் கொண்டதும் தெரிய வந்தது.ஏற்காடு பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது மயங்கி விழுந்தவர் அப்படியே இறந்து விட்டதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    • மினி லாரி ஒன்று, வேகமாக மோதி நிற்காமல் சென்றுவிட்டது.
    • 3 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ஓசூர்,

    ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப் பள்ளி-ஆனேக்கல் சாலையில் மாயசந்திரா அருகே நேற்று இரவு சுமார் 10 மணியளவில் வட மாநில கூலித் தொழிலாளர்கள் 3 பேர் வேலையை முடித்து, சாலையில் நடந்தவாறு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி ஒன்று, இவர்கள் மீது வேகமாக மோதி நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அவர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த அத்திப்பள்ளி போலீசார் அங்கு சென்று உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அத்திப்பள்ளி அரசு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வாகனத்துடன் தலைமறைவாகிவிட்ட மினி லாரி டிரைவரையும் தேடி வருகிறார்கள்.

    • வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய ஆறுமுகம் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்துள்ளார்.
    • வீட்டின் பின்பகுதியில் திடீரென அவர் வாந்தி எடுத்து மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு கொண்டிருந்தார்.

    பெருந்துறை:

    பெருந்துறை கரண்டிபாளையம், பெரிய காடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், அரவிந்த் என்ற மகனும், ஹேமப்பிரியா என்ற மகளும் உள்ளனர்.

    மகன் அரவிந்த் திருமணமாகி கவுந்தப்பாடியில் உள்ள மாமனார் வீட்டில் உள்ளார். மகள் ஹேமப்பிரியா திருமணம் ஆகாமல் ஆறுமுகத்துடன் குடியிருந்து வருகிறார். ஆறுமுகமும் அவரது மனைவியும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர்.

    ஆறுமுகம் கரண்டி பாளையம் பகுதியில் உள்ள ஒருவரது தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு நீண்ட வருடங்களாக குடிப்பழக்கம் இருந்துள்ளது.

    தினமும் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வந்து குடும்பத்தாருடன் சண்டை போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    சம்பவத்தன்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய ஆறுமுகம் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்துள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டின் பின்பகுதியில் திடீரென அவர் வாந்தி எடுத்து மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு கொண்டிருந்தார்.

    உடனடியாக அவரது மனைவியும், மகளும் அவரை சென்று பார்த்த போது அங்கு செடிகளுக்கு அடிக்கும் பூச்சி மருந்தின் வாடை அடித்துள்ளது.

    மேலும் அவரது அருகில் பூச்சி மருந்து (விஷம்) பாட்டில் ஒன்று கிடந்தது. மயங்கி இருந்த அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆறுமுகம் இறந்து விட்டதாக ெதரிவித்தனர்.

    பின்னர் செல்லம்மாள் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிர–மணியம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • 4 பேருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
    • பஸ்சில் இருந்து கீழே விழுந்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் மகேஷ் (வயது 21).

    மெக்கானிக். சம்பவத்தன்று இவர் அப்பு என்ற மணிகண்டன் என்பவரது மொபட்டில் பின்னால் அமர்ந்து சென்றார்.

    இவருடன் அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார், அஸ்வின் ஆகியோர் என மொத்தம் 4 பேர் அமர்ந்து சென்றனர்.

    மொபட் வால்பாறை - சின்கோனா ரோட்டில் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

    இதில் 4 பேரும் மொபட்டில் இருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 4 பேரையும் மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு 4 பேருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மகேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூரை சேர்ந்தவர் டிரான்ஸ் (38). இவர் அந்த பகுதியில் உள்ள நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கருமத்தம்பட்டி -அன்னூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய டிரான்சை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே டிரான்ஸ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சுக்கிரவார் பேட்டையை சேர்ந்தவர் ராஜகோபால் (75). கூலித் தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் அரசு பஸ்சில் சென்றார். பஸ் திருச்சி- கோவை ரோட்டில் வந்த கொண்டு இருந்த போது ராஜகோபால் பஸ்சில் இருந்து கீழே விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் நெசவு தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    • பால் வியாபாரி படுகாயம் அடைந்தார்.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள புளியம்பட்டி காலனியை சேர்ந்தவர் சந்திரகுமார் (வயது 35). நெசவு தொழிலாளியான இவர் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.

    நெசவாளர் காலனி அருகே உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் சந்திரகுமார் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பால் வியாபாரி அருள் பாண்டி என்பவரின் மோட்டார் சைக்கிள் மீது சந்திரகுமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    தலையின் பின்புறம் பலத்த காயமடைந்த சந்திகுமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விபத்தில் படுகாயம் அடைந்த அருண்பாண்டியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அருப்புக் கோட்டை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சந்திர குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குழந்தை கவினேஷ் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த சுடு தண்ணீரில் தவறி விழுந்தார்.
    • சிகிச்சைக்காக சென்ற குழந்தை கவினேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்,

    கடலூர்:

    கடலூர் அடுத்த ஈச்சங்காடு சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 30). இவருக்கு 2 வயதில் கவினேஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது.சம்பவத்தன்று குழந்தை கவினேஷ் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த சுடு தண்ணீரில் தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த குழந்தை கவினேஷ் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் குழந்தையை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை கவினேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகு பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    • பிரதீப் (வயது 37). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
    • சாலையில் குறுக்கே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது பிரதீப் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், சக்தி நகரை சேர்ந்தவர் அன்பழ கன். இவரது மகன் பிரதீப் (வயது 37). இவர் தனியார் நிறுவ னத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

    இவரும், இவரது நண்பர் சசிகுமார் (37) ஆகிய இருவரும் கடந்த 22-ந் தேதி பரமத்திவேலூரில் இருந்து நாமக்கல்லுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் கீரம்பூர் 4 ரோடு பகுதியில் சென்ற போது, சாலையில் குறுக்கே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது பிரதீப் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பிரதீப், மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் அவரை காப்பாற்றி சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பிரதீப் உயிரி ழந்தார். இதனிடையே காய மடைந்த சசிகுமார் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • நாமக்கல்லில் இருந்து பெங்களூரு நோக்கி கார் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது.
    • அத்தனூர் அம்மன் கோவில் அருகே சென்றபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

    ராசிபுரம்:

    நாமக்கல்லில் இருந்து பெங்களூரு நோக்கி கார் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. இந்த காரில் ஒரு பெண் உள்பட 4 பேர் பயணம் செய்துள்ளனர். காரை ராமு என்பவர் ஓட்டி சென்றதாக தெரிகிறது.

    சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அத்தனூர் அம்மன் கோவில் அருகே சென்றபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோ ரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் காரில் பயணம் செய்த 55 வயது மதிக்கத்தக்க பெண் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். காரை ஓட்டிச் சென்ற ராமு உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இவர்கள் கர்நாடகாவை சேர்ந்தவர்களா? அல்லது தமிழகத்தைச் சேர்ந்த வர்களா என்று தெரிய வில்லை. விபத்தில் இறந்த பெண் உடல் பிரேத பரி சோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி யில் வைக்கப்பட்டுள்ளது.

    காயம் அடைந்தவர்கள் மயக்க நிலையில் இருந்ததால் அவர்களைப் பற்றிய விவரங்களை உடனடியாக தெரிந்து கொள்ள முடி யவில்லை. அவர்களும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். வெண்ணந்தூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். 

    • கோவிந்த ராஜ் (வயது 36) கட்டிடத் தொழிலாளியான இவர், சூரமங்கலம் அவ்வை நகர் பகுதியில் புதிதாக கட்டப் பட்டு வரும் ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார்.
    • 4 மணி அளவில் கோவிந்த ராஜ் பணியில் இருந்த போது 2-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    சேலம்:

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள வானதிபட்டி பகு தியைச் சேர்ந்தவர் கோவிந்த ராஜ் (வயது 36) கட்டிடத் தொழிலாளியான இவர், சூரமங்கலம் அவ்வை நகர் பகுதியில் புதிதாக கட்டப் பட்டு வரும் ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் கோவிந்த ராஜ் பணியில் இருந்த போது 2-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந் தார். இதில் அவருக்கு பலத்த படுகாயம் ஏற்ப்பட் டது. இதையடுத்து கோவிந்த ராஜை சக தொழிலாளர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் மருத்துவமனைக்கு சென்ற சிறிது நேரத்தில் கோவிந்த ராஜ் பரிதாபமாக உயிரி ழந்தார். இது குறித்து கோவிந்தராஜன் மனைவி சுகன்யா கொடுத்த புகார் பேரில் சூரமங்கலம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள். இறந்து போன கோவிந்தராஜிற்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

    • மேற்கூரையின் மீது ஏறி ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகளை மாற்றும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.
    • சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    கன்னியாகுமரி :

    கொல்லங்கோடு அருகே உள்ள வாறுவிளை வீடு மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 62). கூலி தொழிலாளி யான இவர் நேற்று முன்தினம் வள்ளவிளை பகுதியில் உள்ள ஒரு படகு பழுது பார்க்கும் இடத்தில் உள்ள மேற்கூரையின் மீது ஏறி ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகளை மாற்றும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது திடீரென்று ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டு உடைந்து கீழே விழுந்தது. இதில் பாலகிருஷ்ணன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை சக தொழிலாளர்கள் மீட்டு பாறசாலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது மனைவி லில்லீபாய் கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று இரவு வெகு நேரம் ஆகியும் ஜெகதீஷ் மொய்த் சாப்பிட வராததால் இவரது அக்கா மகன் இன்று அதிகாலை 2 மணி அளவில் இவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
    • இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது ஜெகதீஷ் மொய்த் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

    சேலம்:

    மகாராஷ்டிரா மாநிலம் ஷாங்கிலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் மொய்த் (47).

    தொழிலாளி

    இவர் கொண்ட லாம்பட்டி அருகே சிவதாபுரம் மொரம்புக்காடு பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு வெள்ளி பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடும்பத்தினரை சொந்த ஊரில் விட்டு விட்டு சேலத்திற்கு வந்தவர் தொடர்ந்து மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இறந்து கிடந்தார்

    நேற்று இரவு வெகு நேரம் ஆகியும் ஜெகதீஷ் மொய்த் சாப்பிட வராததால் இவரது அக்கா மகன் இன்று அதிகாலை 2 மணி அளவில் இவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் ஜன்னல் வழியாக பார்த்தபோது ஜெகதீஷ் மொய்த் அசைவின்றி கிடந்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது ஜெகதீஷ் மொய்த் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து உடனடியாக கொண்டலாம்பட்டி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெகதீஷ் மொய்த் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லாததால் ஜெகதீஷ் மொய்த் தொடர்ந்து அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்திருக்கலாம் என்று தெரியவருகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×