என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வணிகர் சங்க நிர்வாகிகள் கூட்டம்"
- திண்டுக்கல்லில் வணிகர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் வணிகர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி. மற்றும் தமிழகத்தில் 40 பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சேவை வரி ஆகியவற்றை திரும்பபெற வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னையில் விரைவில் போராட்டம் நடைபெறும்.
அதேபோல் வணிகர் நல வாரிய உறுப்பினர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்க கோரியும், 60 வயதை கடந்த வணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தியும் சில்லரை வியாபாரிகளை நசுக்கி வரும் பெரு வணிக நிறுவனங்களின் செயல்பாடுகளை முறைப்படுத்த கோரியும் தமிழக முதல்வரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.
மின்சார கட்டணம், கட்டிட வரி, ஜி.எஸ்.டி. சேவை வரி போன்றவற்றின் உயர்வு காரணமாகவே பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கும் வணிகர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ரூ.40 லட்சத்திற்கும் மேல் வர்த்தகம் செய்யும் வியாபாரிகள் ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும். முறையாக வரி செலுத்துவதாக கூறும் பெரு வணிக நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்கின்றனர்.
மேலும் நூதன முறையில் நுகர்வோரை ஏமாற்றும் வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் இந்த நிறு வனங்களை கட்டுப்படுத்த வேண்டும். ஜி.எஸ்.டி. கவுன்சிலின் அடுத்த கூட்டம் மதுரையில் நடைபெறும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்ம லாசீத்தாராமன் தெரிவித்துள்ளார். அந்த கூட்டம் நடைபெறும் நாளில் மதுரையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தொழில் வர்த்தகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மதுரையில் எஸ்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும். திண்டுக்கல் - சபரிமலை அகல ரெயில்பாதை திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
ஸ்மாட் சிட்டி திட்டத்தில் திண்டுக்கல் நகரை பட்டியலில் கொண்டுவர மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். மாநகராட்சியாக பல ஆண்டுகள் ஆகியும் எல்லை விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளதால் அதனை உடனடியாக கொண்டு வர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிைறவேற்றப்பட்டன.
கூட்டத்தில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., மேயர் இளமதி, நாட்டாண்மை காஜாமைதீன், மண்டல தலைவர் கிருபாகரன், மாவட்ட செயலாளர் மங்களம் அழகு, செயல் தலைவர் நடராஜன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்