என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புனித லூர்து அன்னை"
- திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
- 29-ந்தேதி தேர்பவனி நடக்கிறது.
புன்னைநகர் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு பங்குதந்தையின் வகுப்பு தோழர்கள் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றுகிறார்கள். தொடர்ந்து திருப்பலி, இரவு 9 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு திருப்பலி, இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழாவில் 29-ந்தேதி காலை 6 மணிக்கு தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி செயலாளர் அருட்பணியாளர் அருள்தேவதாசன் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். கோத்தகிரி கப்புச்சின் சபை அருட்பணியாளர் அல்பரிக் நிமலன் மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு திருச்சி தூய பவுல் குருத்துவக்கல்லூரி பேராசிரியர் அருட்பணி ஆல்பர்ட் அலெக்சாண்டர் தலைமை தாங்கி சிறப்பு மாலை ஆராதனை நிறைவேற்றுகிறார். மறைமாவட்ட இளைஞர் இயக்க பணிக்குழு இயக்குனர் ஜெனிபர் எடிசன் மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.
விழாவின் இறுதி நாளான காலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி திருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். 10 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலி, மாலை 5 மணிக்கு நற்கருணை ஆசீர், 6 மணிக்கு கொடியிறக்கம் ஆகியவை நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை தலைமையில் பங்கு இறைமக்கள், பங்கு அருட்பணிபேரவை, அருட்சகோதரிகள் செய்து வருகிறார்கள்.
- தூய லூர்து அன்னைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
- திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு அன்னையை வழிபட்டனர்.
நாகையில் பிரசித்தி பெற்ற தூய லூர்து அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. விழாவில் சிறிய தேர் பவனி நடந்து வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. முன்னதாக தூய லூர்து அன்னைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து தேர்புனிதம் செய்யப்பட்டது. வாணவேடிக்கைகளுடன் தேர்பவனியானது தொடங்கியது. தேர்பவனி முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு அன்னையை வழிபட்டனர்.
- இன்று ஆலய வளாகத்தில் பொங்கல் விழா நடைபெறுகிறது.
- திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள்.
மதுரை கோ.புதூர் புனித லூர்து அன்னை ஆலயத்தில் தேர் பவனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி திருச்சி சலேசிய மாநில தலைவர் அகிலன் தலைமையில் கொடி ஏற்றம் நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருப்பலிகள் நடைபெற்றது. மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணிபாப்புசாமி கலந்து கொண்டு திருப்பலி நடத்தினார்.
நேற்று முக்கிய நிகழ்ச்சியாக லூர்து அன்னை தேர் பவனி நடந்தது. முன்னதாக சேலம் மறை மாவட்டம் முன்னாள் ஆயர் சிங்கராயன் அர்ச்சித்து தேர்பவனியை தொடங்கி வைத்தார். இரவு 8 மணிக்கு அன்னையின் தேரானது வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா நடந்தது. சந்தன மாதா கோவில் தெரு, மாதா கோவில் தெரு, பாரதியார் ரோடு, சிங்காரவேலர் தெரு, அழகர் கோவில் ரோடு வழியாக ஆலயத்தை வந்தடைந்தது. தொடர்ந்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் புனித லூர்து அன்னை திருத்தல அருள்பணி உதவி பங்கு தந்தையர்கள் பாக்கியராஜ், பெலிக்ஸ், யூஜின் டேவிட், அருட்தந்தைகள், சி.ஆர்.கன்ஸ்ட்ரக்ஷன் புதூர் சின்னத்துரை, சலேசியர்கள், மாநகராட்சி உறுப்பினர் அந்தோணியம்மாள் சவுரிராயர் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இன்று புனித லூர்து அன்னை ஆலய வளாகத்தில் பொங்கல் விழா நடைபெறுகிறது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள். பின்னர் ஜெபமாலை நற்கருணை ஆராதனையுடன் கொடி இறக்கம் பங்குத்தந்தை தாஸ் கென்னடி தலைமையில் நடக்கிறது. புதூர் இன்ஸ்பெக்டர் துரை பாண்டியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- இன்று அன்பின் விருந்து நடைபெறுகிறது.
- இன்று சிறப்பு செபமாலை திருப்பலி நடக்கிறது.
சேவூர் அருகே புளியம்பட்டி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் லூர்துபுரம் கிராமம் உள்ளது. இங்கு புனித லூர்து அன்னையின் திருத்தலம் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் என்றும் வற்றாத நீருற்று (கிணறு) உள்ளது.
அதனால் இத்திருத்தலத்தை புனித நீருற்று லூர்து அன்னை திருத்தலம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டிற்கான தேர்த்திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினசரி மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப்ஸ்தனிஸ் தலைமையில், காலை 10 மணிக்கு துதிஆராதனை, காலை 11 மணிக்கு ஜெபமாலை, திருப்பலியும் மாலை 6 மணிக்கு ஆடம்பர கூட்டுப்பாடல், திருப்பலி, நடைபெற்றது. இதையடுத்து இரவு 8 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. இரவு 10 மணிக்கு, இந்த திருத்தலத்தில் நடந்த புதுமைகளை மையமாக கொண்டு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இன்று (ஞாயிறு) காலை 6 மணிக்கு கருமத்தம்பட்டி மோகன் மரிய திவ்ய ராஜின் திருப்பலி. காலை 8 மணிக்கு கோவை ஆயர் மேதகு எல்.தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் திருப்பலியும், காலை 11 மணி, கோவை மேய்ப்புப்பணி நிலைய அந்தோணி செல்வராஜின் சிறப்பு செபமாலை திருப்பலி, நவநாள் வேண்டுதல் தேர், மாலை 6 மணிக்கு, சிறுமுகை பங்குத்தந்தை, லூர்து இருதயராஜ் தலைமையில் ஜெபமாலை, திருப்பலியும், பின்னர் லூர்துபுரம் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக அலங்கார தேர் பவனியும் நடைபெறும். தேர் திருவிழாவையொட்டி, நேற்று இரவு அன்பின் விருந்து நடைபெற்றது. அதே போல் இன்று காலை அன்பின் விருந்து நடைபெறுகிறது.
- தேர் பவனி வாணவேடிக்கையுடன் நடந்தது.
- தேர் பவனியின் போது, பக்தர்கள் உப்பு, மிளகு தூவி வேண்டுதலை நிறைவேற்றினர்.
திருப்பனந்தாள் அருகே மானம்பாடி மெயின் ரோட்டில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தில் ஆண்டு தோறும், தேர் பவனி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். தொடர்ந்து 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு விழா வழக்கம்போல் விழா கொண்டாட திட்டமிடப்பட்டு, கடந்த 9-ந் தேதி மறைமாவட்ட உதவி பங்குத்தந்தை சூசைமாணிக்கம் தலைமையில் திருக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அருட்தந்தையர்களால் செபமாலை, நவநாள் செபம், கூட்டு திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜெபமாலை நவநாள் திருப்பலி மற்றும் மறையுரையை பங்கு தந்தைகள் நடத்தினார்கள். விழாவில் நேற்று முன்தினம் வண்ண விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித லூர்து அன்னை எழுந்தருளி தேர் பவனி வாணவேடிக்கையுடன் நடந்தது.
தேர் பவனியின் போது, பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை அலங்கரிக்கப்பட்ட தேரின் மீது தூவி மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
இதற்கான ஏற்பாடுகளை நாட்டாண்மை ஆரோக்கியசாமி யாக்கோப், தலைவர் இஸ்ரேல் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- இன்று தேர் பவனி நடைபெறும்.
- நாளை ஆலயத்தில் பொங்கல் விழா நடக்கிறது.
மதுரை கோ.புதூர் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. திருச்சி சலேசிய மாநில தலைவர் அகிலன் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி கலந்து கொண்டு திருப்பலி் நடந்தது. விழாவில் இன்று(சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி சேலம் முன்னாள் மறை மாவட்ட ஆயர் சிங்கராயர் தலைமையில் நடைபெறுகிறது.
இதைதொடர்ந்து தேர் பவனி நடைபெறும். இந்த தேர் பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு சந்தன மாதா கோவில் தெரு, பாரதியார் ரோடு, சிங்காரவேலர் தெரு, அழகர்கோவில் ரோடு வழியாக ஆலயத்தை வந்தடையும். இந்த திருவிழாவில் மதுரை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஆலயத்தில் பொங்கல் விழா நடக்கிறது. அப்போது பொங்கல் வைத்து, உப்பு மிளகு, தலை முடி இறக்கி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
விழா ஏற்பாடுகளை பங்கு தந்தையர்கள், அருட்பணி பேரவை மற்றும் இறைமக்கள் செய்துள்ளனர்.
- அர்ச்சிப்பு விழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
- அன்பின் விருந்து ஆலய வளாகத்தில் நடக்கிறது.
மார்த்தாண்டம் அருகே மேல்புறம் தல திருச்சபையின் கிளை பங்காகிய பரக்கோணத்தில் புனித லூர்து அன்னை ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயம் சாதி, மத பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களின் பொருளாதார உதவியால் அழகுற புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அர்ச்சிப்பு விழா நாளை(வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது. விழாவில் கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி ஆலயத்தை அர்ச்சித்து வைக்கிறார்.
தொடர்ந்து அன்பின் விருந்து ஆலய வளாகத்தில் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் ஆல்வின் விஜய், பங்கு பேரவை துணைத்தலைவர் விஜயகுமார், செயலாளர் வைடா பொன்மலர், பொருளாளர் ஸ்டீபன், உதவி செயலாளர் டெய்சி மற்றும் பங்கு பேரவையினர், பங்கு மக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
- பழைமையான இந்த கெபி புதுப்பிக்கப்பட்டு அர்ச்சிப்பு விழா நடந்தது.
- இரவு அன்பின் விருந்து நடந்தது.
ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டில் புனித வியாகுல அன்னை ஆலயம், மறைசாட்சி புனிதர் தேவசகாயம் ஆலயம் என இரட்டை திருத்தலம் உள்ளது. அதோடு இங்கு புனித லூர்து அன்னை கெபியும் அமைக்கப்பட்டுள்ளது. பழைமையான இந்த கெபி புதுப்பிக்கப்பட்டு அர்ச்சிப்பு விழா நேற்று நடந்தது. தேவசகாயம் மவுண்ட் பங்குத்தந்தை பிரைட் தலைமை தாங்கினார். இணைபங்குதந்தை ரெட்வின், பங்கு பேரவை துணைத்தலைவர் மிக்கேல், செயலாளர் தேவசகாய மைக்கிள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், புனித லூர்து அன்னை கெபியை அர்ச்சித்தார். தொடர்ந்து குறும்பனை பங்குத்தந்தை ஸ்டீபன் தலைமையில் திருப்பலி நடந்தது. நிகழ்ச்சியில் கோட்டார் மறைமாவட்ட அருட்பணியாளர்கள், பங்கு பேரவை பொருளாளர் பென்சிகர், துணைச்செயலாளர் சகாயரூபிலெட், பங்கு பேரவை முன்னாள் துணைத்தலைவர் பயஸ் ராய், கவுன்சிலர் ஜெனட் சதீஷ்குமார் மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள், பங்குமக்கள் திரளாக கலந்துகொண்டனர். இரவு அன்பின் விருந்து நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குதந்தை பிரைட், இணைபங்கு தந்தை ரெட்வின் மற்றும் பங்கு அருட்பணி பேரவையினர், அருட்சகோதரிகள், பங்குமக்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்