என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாத்திமா அன்னை ஆலயம்"
- திருச்சி புத்தூர் பாத்திமா அன்னை ஆலய பெருவிழாவை முன்னிட்டு வருகிற 20-ந்தேதி தேர் பவனி நடைபெறுகிறது
- 21-ந்தேதி திருச்சி மறைமாவட்ட பொருளாளர் ஜேம்ஸ் செல்வநாதன், திருச்சி கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழு செயலர் மரியசூசை ஆகியோர் தலைமையில் நற்கருணை பெருவிழா பவனி நடக்கிறது
திருச்சி:
திருச்சி புத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற பழமையான பாத்திமா அன்னை ஆலய பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை.
இதையடுத்து தற்போது நோய் கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து திருவிழா சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன்படி 65-வது ஆண்டு பெருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்னைய தினம் திருச்சி மறைமாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் கொடியேற்றி வைத்தார். இதையடுத்து திருவிழா நாட்களில் தினமும் மூத்த அருட்பணியாளர்கள் மற்றும் பங்குத்தந்தைகள் தலைமையில் பல்வேறு தலைப்புகளில் மறையுரை சிந்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 6.30 மணியளவில் தேர் திருவிழா நடைபெறுகிறது. இந்த தேர் பவனி பாத்திமா அன்னை ஆலயத்தில் தொடங்கி அரசு பொது மருத்துவமனை, மதுரம் மருத்துவமனை, பட்டாபிராமன் சாலை, காவேரி மருத்துவமனை, பாத்திமா உயர்நிலைப்பள்ளி, புத்தூர் நான்கு ரோடு சந்திப்பு வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடையும். இதில் திருச்சி மறைமாவட்ட முதன்மை குரு அந்துவான், மரியன்னை பேராலய பங்குத்தந்தை சகாயராஜ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
21-ந்தேதி திருச்சி மறைமாவட்ட பொருளாளர் ஜேம்ஸ் செல்வநாதன், திருச்சி கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழு செயலர் மரியசூசை ஆகியோர் தலைமையில் நற்கருணை பெருவிழா பவனி நடக்கிறது.
இந்த பவனி திருச்சிலுவை சபை அருட்சகோதரிகள் இல்லம், வண்ணாரப்பேட்டை, அரசு பொது மருத்துவமனை, புத்தூர் நான்கு ரோடு வழியாக ஆலயத்தை வந்தடையும். பின்னர் அன்று மாலை கொடியிறக்கம் நடைபெறும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தையும், மறைமாவட்ட அதிபருமான பாஸ்கரன், உதவி பங்குத்தந்தை பிரான்சிஸ் செலஸ்டின் மற்றும் பங்கு பேரவை, பங்கு மக்கள் செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்