search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்"

    • இந்து கோவில்களின் சொத்துகளை மாவட்ட கலெக்டர் அலுவலகம், பேருந்து நிலையம், சமத்துவபுரம், சமூக நலத்துறைக்கு என மாநில அரசு எடுத்துள்ளது.
    • கோவில் சொத்துகளுக்கு உரிய இழப்பீடோ, வாடகையோ தருவதில்லை.

    திருப்பூா்:

    கோவில் சொத்துகளை பாதுகாக்க வலியுறுத்தி இந்து முன்னணி சாா்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தடையை மீறி நடத்தியதால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்பட 100க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். அப்போது சிறுவர்கள் பலர் சிதறி ஓடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறுகையில், தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளன. இந்த கோவில்களுக்கு பல லட்சம் ஏக்கா் நிலங்கள் உள்ளன. கோவில்களின் வருமானம், கோவில் சொத்துகளைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் மட்டுமே தமிழக அரசால் இந்து சமய அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்டது.

    இந்து கோவில்களின் சொத்துகளை மாவட்ட கலெக்டர் அலுவலகம், பேருந்து நிலையம், சமத்துவபுரம், சமூக நலத்துறைக்கு என மாநில அரசு எடுத்துள்ளது. கோவில் சொத்துகளுக்கு உரிய இழப்பீடோ, வாடகையோ தருவதில்லை. இந்து கோவில்களின் சொத்துகளை அரசு திட்டமிட்டு சூறையாடுகிறது. எனவே, கோவில் சொத்துகளை பாதுகாக்க வலியுறுத்தி பக்தா்களை ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்றார்.

    • பூசாரியின் வேஷ்டியை இழுத்து அவமதித்ததாகவும், ஆகம விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி தென்கரை காந்தி சிலை அருகில் இந்து முன்னணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இச்செயலுக்கு வருத்தம் தெரிவித்து எம்.எல்.ஏ. மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றார்.

    பெரியகுளம்:

    தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பெரியநாயகி அம்மன் உடனுறை கைலாசநாதர் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருநாளன்று மகா தீபம் ஏற்றுவதில் தி.மு.க.வினருக்கும், ஓ.பி.எஸ். மகன் ஜெயபிரதீப் தலைமையிலான அன்பர் குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது எம்.எல்.ஏ. சரவணகுமார் பூசாரியின் வேஷ்டியை இழுத்து அவமதித்ததாகவும், ஆகம விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி தென்கரை காந்தி சிலை அருகில் இந்து முன்னணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். பாரதிய ஜனதா கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டியன் கண்டன உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், கடவுள் மறுப்புக் கொள்கையில் இருக்கும் தி.மு.க.வினருக்கு கோவிலில் என்ன வேலை என்றும், இப்படி கும்பலாக வந்து ஆகமவிதிகளுக்கு எதிராக அர்ச்சகரின் வேஷ்டியை பிடித்து இழுத்து இந்து மக்களின் மனதை புண்படுத்திய செயல் கண்டிக்கத்தக்கது என்றும் பேசினார்.

    மேலும் இச்செயலுக்கு வருத்தம் தெரிவித்து எம்.எல்.ஏ. மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றார்.

    • இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கோவை:

    இந்து முன்னணியின் துணை அமைப்பான இந்து கலை இலக்கிய முன்னணியின் மாநில பொறுப்பாளர் கனல்கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த வகையில் கோவையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை மாநகர் மாவட்ட இந்துமுன்னணி சார்பில் காந்திபார்க் ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தசரதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி முன்னிலை வகித்தார். மாநில நிர்வாககுழு உறுப்பினர் சதிஷ், கோட்ட பேச்சாளர்ஆ.கிருஷ்ணன், மாவட்ட பொது செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட செயலாளர்கள் மகேஷ்வரன், சோமமேசுந்தரம், மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் உள்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    ×