search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடையடைப்பு போராட்டம்"

    • சாலை பணிகளை முழுமையாக முடிக்க கோரியும் கண்டன கடையடைப்பு நடத்த போவதாக அப்பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டது.
    • இன்று காலை கடைகளை அடைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லாலங்குடி ஊராட்சி. இந்த பகுதியில் சாலைகள் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த பணி உரிய வகையில் முழுமையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    எனவே ஊராட்சிக்கு உட்பட்ட குளத்தில் இருந்து மண் எடுத்த சாலைகளை முழுமையாக சீர் செய்ய வேண்டும், பணம் பறிக்கும் நோக்கத்தில், தனி நபர் ஒருவர் அதிகாரிகளை தடுத்து மிரட்டி வருவதால், பணிகள் நடைபெறாமல் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். எனவே இதனை கண்டித்தும், சாலை பணிகளை முழுமையாக முடிக்க கோரியும் கண்டன கடையடைப்பு நடத்த போவதாக அப்பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டது.

    அதன்படி இன்று காலை கடைகளை அடைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் அதிகமானோர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அவர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரத பந்தலை விட்டு வெளியே செல்லமாட்டோம் என்று உறுதியாக தெரிவித்தனர்.

    தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவி வருவதால் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இனிமேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 26-ந்தேதி குடியரசு தினத்தன்று நடைபெற உள்ள கிராமசபை கூட்டத்தை ஊராட்சி பொதுமக்கள் புறக்கணிப்போவதாகவும் தெரிவித்து உள்ளனர்.

    • வருகிற 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சேலம் மாவட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் ஒருநாள் கடையடைப்பு நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • அன்று அதிகாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் எதுவும் திறக்கப்படாது.

    சேலம்:

    சேலம் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனை கூட்டம் அன்னதானபட்டியில் நேற்று நடந்தது. இதில், சரக்கு மற்று சேவை வரியால், வணிகர்கள் எதிர்கொள்ளும் இடையூறுகளை நீக்கும் வகையில், வருகிற 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சேலம் மாவட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் ஒரு நாள் கடையடைப்பு நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அன்று அதிகாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் எதுவும் திறக்கப்படாது. மேலும் அன்றைய தேதியில் அனைத்து வணிகர்கள் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், சேலம் சரக்கு இணை ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3,850 ஏக்கரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் சிப்காட் அமைக்க அரசு முடிவு செய்தது.
    • சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் பள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகள் உள்ளன.

    இந்த ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3,850 ஏக்கரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் சிப்காட் அமைக்க அரசு முடிவு செய்தது. மேலும் அன்னூர் சிட்கோ அமைப்பதற்காக 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

    சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசாணையை ரத்து செய்யகோரியும் 6 ஊராட்சி மக்கள், விவசாயிகள், நமது நிலம் நமேத என்ற அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 21-ந் தேதி நமது நிலம் நமதே போராட்ட குழு சார்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அன்னூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    அன்னூரில் சிப்காட் அமைப்பதால் விவசாயம் பாதிக்கப்படும். எனவே அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும். அரசுக்கு எங்கள் கோரிக்கைளை எடுத்துரைக்கும் விதமாக பல போராட்டங்களை நடத்தியுள்ளோம்.

    அதன் தொடர்ச்சியாக வருகிற 28-ந் தேதி(திங்கட்கிழமை) ஓதிமலை சாலையில் அமைந்துள்ள அண்ணா திடலில் ஒரு நாள் மட்டும் காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை மாபெரும் உண்ணாவிரதம் மற்றும் கடை அடைப்பு போராட்டம் நடத்த உள்ளோம். இதில் திரளான விவசாயிகளும், பொதுமக்களும் பங்கேற்க உள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கை தொடங்கி விட்டது.
    • தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பலமுறை இந்து மதத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாக எந்த ஒரு ஆதாரம் இல்லாமல் தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் செந்தில்குமார் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கை தொடங்கி விட்டது. இந்து மதத்தின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தி பேசுவதும், எதிராக பேசுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பலமுறை இந்து மதத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாக எந்த ஒரு ஆதாரம் இல்லாமல் தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார்.

    நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பவானிசாகர் சட்டமன்ற தொகுதி புஞ்சை புளியம்பட்டி, சத்தியமங்கலம், பவானிசாகர் ஆகிய பகுதிகளில் ஆ.ராசா இந்துக்களை அவதூறாக பேசியதை கண்டித்தும், அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 வரை கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு வியாபாரிகள், வாகன டிரைவர், பொது நல அமைப்புகள், கூலித் தொழிலாளர்கள், பொது மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநில அரசுகள் ஆய்வு நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
    • தேவர்சோலை பேரூராட்சி மற்றும் நெலாக்கோட்டை ஊராட்சியில் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்

    ஊட்டி:

    நாடு முழுவதும் உள்ள தேசிய வன உயிரின காப்பகத்தில் இருந்து 1 கி.மீட்டர் தூரம் சூழல் மண்டலமாக அறிவித்து நிரந்தர கட்டிடங்கள் கட்ட தடை விதிக்க வேண்டும்.

    இதுதொடர்பாக மாநில அரசுகள் ஆய்வு நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதனால் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் கரையோரம் உள்ள மசினகுடி, ஸ்ரீமதுரை, நெலாக்கோட்டை ஊராட்சிகள் மற்றும் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் சூழல் நிலவி வருகிறது. இந்தநிலையில் சூழல் மண்டலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி மற்றும் நெலாக்கோட்டை ஊராட்சியில் நாளை (புதன்கிழமை) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வியாபாரிகள் சங்கம் அறிவித்து உள்ளது. மேலும் பொது மக்களை பாதிக்கக்கூடிய திட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என அறிவித்து உள்ளனர்.

    ×