என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சோனி"
- சோனி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிளேஸ்டேஷன் விஆர்2 வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- மேலும் பிளேஸ்டேஷன் விஆர்2 முன்பதிவு பற்றிய விவரங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சோனி நிறுவனம் தனது பிளேஸ்டேஷன் விஆர்2 மாடல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. புதிய பிளேஸ்டேஷன் விஆர்2 மாடலுக்கான முன்பதிவு இன்னும் சில வாரங்களில் துவங்க இருக்கிறது.
பிளேஸ்டேஷன் விஆர்2 விலை 550 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 45 ஆயிரத்து 347 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய வெர்ஷனை விட 150 டாலர்கள் அதிகம் ஆகும். மேலும் மெட்டா குவெஸ்ட் 2 மாடலை விடவும் பிளேஸ்டேஷன் விஆர்2 விலை 150 டாலர்கள் அதிகம் ஆகும்.
புதிய சோனி பிளேஸ்டேஷன் விஆர்2 மாடலின் பேஸ் பேக்கேஜில் விஆர் ஹெட்செட், இரண்டு விஆர்2 சென்ஸ் கண்ட்ரோலர்கள் மற்றும் ஸ்டீரியோ ஹெட்போன்கள் வழங்கப்படுகிறது. கண்ட்ரோலர்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷனின் விலை 50 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பிளேஸ்டேஷன் விஆர்2 உடன் ஹாரிசன் கால் ஆப் தி மவுண்டெயின் எடிஷன் கிடைக்கிறது. இதில் கேமிற்கான வவுச்சர் வழங்கப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை புதிய விஆர்2 ஹெட்செட் மெல்லிய டிசைன், குறைந்த எடை மற்றும் புது அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் லென்ஸ் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டயல் மற்றும் பில்ட்-இன் மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த ஹெட்செட் அணியும் போது அதிக சவுகரியமாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஹெட்செட் சிங்கில் கார்டு செட்டப் கொண்டிருக்கிறது.
- சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் 5 கேமிங் கன்சோல் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து அதிக யூனிட்கள் விற்பனையாகி வருகிறது.
- பிளே ஸ்டேஷன் 5 ஒட்டுமொத்த விற்பனையில் புது மைல்கல் எட்டியதாக சோனி நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
சோனி நிறுவனம் பிளே ஸ்டேஷன் 5 (PS5) விற்பனை தொடர்ந்து அமோகாமாக நடைபெற்று வருவதாக அறிவித்து இருக்கிறது. இதுவரை சோனியின் PS5 மாடல் 25 மில்லியனுக்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக சோனி தெரிவித்துள்ளது.
கடந்த காலாண்டில் மட்டும் 3.3 மில்லியன் PS5 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. 2022 நிதியாண்டில் மட்டும் 18 மில்லியன் PS5 யூனிட்கள் விற்பனையாகும் என சோனி நிறுவனம் கணித்துள்ளது. இந்த நிதியாண்டின் அரையாண்டு வரையில் சோனி நிறுவனம் 5.7 மில்லியன் PS5 யூனிட்களையே விற்பனை செய்து இருக்கிறது. அந்த வகையில் மீதமுள்ள காலக்கட்டத்தில் விற்பனை இலக்கை சோனி எட்டுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
கடந்த ஆண்டில் இருந்தே சோனி நிறுவனம் PS5 விற்பனையில் அதிக வளர்ச்சியை பதிவு செய்யவில்லை. அந்த வகையில் வருவாய் மட்டும் 12 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் PS5 விலை உயர்வு காரணமாகவே வருவாய் அதிகரித்து இருக்கிறது. வருவாய் அதிகரித்த போதிலும் லாபம் 49 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.
கேம் தயாரிப்பு நிறுவனமான பன்ஜியை சோனி கைப்பற்றியதே லாபம் சரிய காரணமாக கூறப்படுகிறது. பன்ஜி நிறுவனம் தான் ஹாலோ டிரையலஜியை உருவாக்கியது. கடந்த ஆண்டு மட்டும் சோனி நிறுவனம் 11.5 மில்லியன் PS5 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விற்பனை முந்தைய ஆண்டை விட அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
- சோனி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நாய்ஸ் கேன்சலிங் ஹெட்போன் மாடல் இந்தியாவில் அறிமுகம்.
- முன்னதாக இந்த ஹெட்போன் மே மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சோனி நிறுவனத்தின் WH 1000XM5 நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்ட புது ஹெட்போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மே மாத வாக்கில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தான் இந்த மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய சோனி WH 1000XM5 மாடலில் இண்டகிரேடெட் பிராசஸர் வி1 உள்ளது. இது சோனியின் ஹெச்டி தர நாய்ஸ் கேன்சலிங் பிராசஸரின் முழு திறனை வெளிக்கொண்டு வரும்.
பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 30 மில்லிமீட்டர் டிரைவர் யூனிட், எடை குறைந்த, உறுதியான டோம் கார்பன் பைபர் பாகங்களை பயன்படுத்தி சவுண்ட் தரத்தை அதிக இயற்கையாக மாற்றுகிறது. இதில் கூகுள் பாஸ்ட் பேர் அம்சம் உள்ளது. இதை கொண்டு ஆண்ட்ராய்டு சாதனங்களுடன் மிக எளிதில் கனெக்ட் செய்து விட முடியும். இத்துடன் LDAC கோடெக் சப்போர்ட், DSEE எக்ஸ்டிரீம் மற்றும் நுனுக்கமாக வாய்ஸ் பிக்கப் செய்யும் திறன் உள்ளிட்டவை இந்த ஹெட்போனின் சிறப்பம்சங்கள் ஆகும்.
சோனி WH 1000XM5 மாடலில் அடாப்டிவ் சவுண்ட் கண்ட்ரோல் அம்சம் உள்ளது. இது ஆம்பியண்ட் சவுண்ட் செட்டிங்ஸ்-ஐ தலைசிறந்த அனுபவம் கிடைக்கச் செய்யும் வகையில் மாற்றுகிறது. மேலும் மல்டி பாயிண்க் கனெக்ஷன் இருப்பதால் ஒரே சமயத்தில் இரு ப்ளூடூத் சாதனங்களுடன் கனெக்ட் செய்ய முடியும். இந்த ஹெட்போன்களை எங்கு வேண்டுமானாலும் எளிதில் கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
எனினும், டிசைன் மாற்றப்பட்டு இருப்பதால், சோனி WH 1000XM5 ஹெட்போனை மடிக்க முடியாது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 30 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் கிடைக்கும். இத்துடன் யுஎஸ்பி சி பவர் டெலிவரி மூலம் மூன்று நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம்.
இந்தியாவில் சோனி WH 1000XM5 ஹெட்போன் பிளாக் மற்றும் சில்வர் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 34 ஆயிரத்து 990 ஆகும். இதன் விற்பனை அக்டோபர் 8 ஆம் தேதி துவங்குகிறது. அமேசான் மற்றும் shopatsc வலைதளங்களில் இந்த ஹெட்போனிற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. அறிமுக சலுகையாக இந்த ஹெட்போன் ரூ. 26 ஆயிரத்து 990 எனும் சிறப்பு விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.
- சோனி நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய மைக்ரோபோனை அறிமுகம் செய்து இருக்கிறது.
- இந்த மைக்ரோபோன் கிரியேட்டர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருப்பதாக சோனி அறிவித்து உள்ளது.
சோனி இந்தியா நிறுவனம் புதிதாக ஷாட்கன் மைக்ரோபோன் ECM-G1 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மைக்ரோபோன் கிரியேட்டர்கள் அதிக தரமுள்ள ஆடியோவை தெளிவாக பதிவு செய்து கொள்ள உதவுகிறது. இதில் பெரிய டையாமீட்டர் மைக்ரோபோன் கேப்சூல் உள்ளது. இது தெளிவான ஆடியோவை எந்த விதமான இரைச்சலும் இன்றி பதிவு செய்கிறது.
புதிய சோனி ECM-G1 மைக்ரோபோன் விலாகிங் மற்றும் பேட்டி எடுப்பதற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இறுக்கிறது. இது குரல்களை தெளிவாக பதிவு செய்வதோடு, வெளிப்புறங்களில் பயன்படுத்தும் போது காற்றின் சத்தத்தை தடுத்து நிறுத்த விண்ட் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ஆப்டிமைஸ் செய்யப்பட்ட பிரேம், வைப்ரேஷன் சத்தத்தையும் தடுத்து நிறுத்துகிறது.
ECM-சூப்பர் கார்டியோய்டு பிக்கப்-பேட்டன் கேமராவின் முன்புறம் சுற்றசுச்சூழல் சத்தத்தை தடுத்து, தெளிவான மற்றும் தேவையான ஆடியோவை மட்டுமே பதிவு செய்கிறது. இது செல்பி ஷூட்டிங் போன்ற பயன்பாடுகளுக்கு ஏற்ற மைக்ரோபோன் ஆகும். இண்டோர் பயன்பாட்டுகளின் போது சுவர்களில் இருந்து வெளியேறும் அதிர்வுகளை தடுத்து, தெளிவான ஆடியோவை பதிவு செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய சோனி ECM-G1 மைக்ரோபோனுடன் ரெக்கார்டிங் கேபிள் வழங்கப்படுகிறது. இதில் உள்ள மைக்ரோபோன் ஜாக் பல்வேறு சாதனங்களுடன் இணைந்து செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் விரும்பும் இடத்தில் ஆடியோ பதிவை எவ்வித சமரசமும் இன்றி மேற்கொள்ள முடியும். இந்திய சந்தையில் புதிய சோனி ECM-G1 மைக்ரோபோன் விலை ரூ. 10 ஆயிரத்து 290 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- சோனி நிறுவனம் இந்திய சந்தையில் வயர்லெஸ் சவுண்ட்பார் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
- இதில் சோனியின் டிஜிட்டல் சவுண்ட் பீல்டு பிராசஸிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.
சோனி நிறுவனம் இந்திய சந்தையில் HT S400 வயர்லெஸ் சவுண்ட்பார் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த சவுண்ட்பார் மாடல் 330W திறன் கொண்டது ஆகும். சமீபத்தில் தான் புதிதாக SA-RS5 வயர்லெஸ் ரியர் ஸ்பீக்கர்களை சோனி அறிமுகம் செய்து இருந்தது. இந்த நிலையில், புதிதாக வயர்லெஸ் சவுண்ட்பார் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
இந்த சவுண்ட்பார் டால்பி டிஜிட்டல் மற்றும் S போர்ஸ் ப்ரோ முன்புற சரவுண்ட் உள்ளிட்டவைகளை சோனி நிறுவனத்தின் டிஜிட்டல் சவுண்ட் பீல்டு பிராசஸிங் தொழில்நுட்பம் மூலம் இணைக்கிறது. இதன் காரணமாக சினிமா தரத்தில் சரவுண்ட் சவுண்ட் அனுபவம் பெற முடியும். இந்த முன்புற ஸ்பீக்கர்கள் X பேலன்ஸ் கொண்டவை ஆகும். இதில் 160 மில்லிமீட்டர் வயர்லெஸ் சப்வூஃபர் உள்ளது.
புதிய HT S400 மாடல் 330W திறன் மற்றும் HDMI-ARC ஒன்-கேபில் கனெக்ஷன் கொண்டுள்ளது. சோனி HT S400 சக்திவாய்ந்த வயர்லெஸ் சப்-வூஃபர் ஆகும். இதில் 160 மில்லிமீட்டர் அளவில் பெரிய ஸ்பீக்கர் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஆழமான, அதிக தரமுள்ள பேஸ் சவுண்ட் மற்றும் டால்பி டிஜிட்டல் உள்ளிட்டவைகளை சப்போர்ட் செய்கிறது. இந்த சவுண்ட்பார் வயர்லெஸ் கனெக்டிவிட்டி, பிரத்யேக வால்யூம் மற்றும் சவுண்ட் பட்டன்கள் அடங்கிய ரிமோட் வழங்கப்பட்டு இருக்கிறது.
சோனி HT S400 வயர்லெஸ் சவுண்ட்பாரில் உள்ள OLED டிஸ்ப்ளே இன்புட் சோர்ஸ், வால்யும் மற்றும் சவுண்ட் ஆப்ஷன் உள்ளிட்டவைகளை காண்பிக்கிறது. இத்துடன் இந்த சவுண்ட்பாரின் பின்புற பேனலில் சோனி சொந்தமாக மறுசுழற்சி செய்த பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய சோனி HT S400 சவுண்ட்பார் விலை ரூ. 21 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சவுண்ட்பார் விற்பனை சோனி செண்டர் மற்றும் முன்னணி ஆன்லைன் வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் மின்சாதன விற்பனை மையங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
- சோனி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அல்ட்ரா ஹெச்டி டிவி மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
- இந்தியாவில் அறிமுகமான சோனி நிறுவனத்தின் முதல் மினி எல்இடி டிவி மாடல் ஆகும்.
சோனி XR-85X95K அல்ட்ரா ஹெச்டி மினி எல்இடி டிவி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய எல்இடி டிவி வில ரூ. 6 லட்சத்து 99 ஆயிரத்து 990 என துவங்குகிறது. இது இந்திய சந்தையில் அறிமுகமான முதல் மினி எல்இடி டிவிக்கள் ஆகும்.
புதிய சோனி மினி எல்இடி டிவி XR மாடலில் காக்னிடிவ் பிராசஸர் XR வழங்கப்பட்டு இருக்கிறது. இது சோனி நிறுவனத்தின் சொந்த சிப்செட் ஆகும். மேலும் இதில் XR பேக்லிட் மாஸ்டர் டிரைவ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு உள்ளது. இது பேக்லிட்டிங் மற்றும் லோக்கல் டிமமிங் போன்ற அம்சங்களை வழங்குகிறது.
இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கும் புதிய சோனி மினி எல்இடி டிவி மாடல் சாம்சங் மற்றும் டிசிஎல் பிராண்டு மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. அளவை பொருத்தவரை மினி டிஸ்ப்ளே தெழில்நுட்பம் கொண்ட டிவி மாடல் எல்ஜி நிறுவனத்தின் OLED டிவி மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
அம்சங்கள்:
சோனி X95K சீரிஸ் டிவி 85 இன்ச் அளவில் கிடைக்கிறது. இதில் 3840x2160 பிக்சல் மினி எல்இடி டிஸ்ப்ளே பேனல் உள்ளது. இந்த டிவி காக்னிடிவ் பிராசஸர் XR மற்றும் XR பேக்லிட் மாஸ்டர் டிரைவ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது அதிநவீன மினி எல்இடி பேக்லைட்டிங் மற்றும் லோக்கல் டிம்மிங் உள்ளிட்டவைகளை கவனித்துக் கொள்கிறது. மேலும் அதில் ஹெச்டிஆர் 10 மற்றும் டால்பி விஷன், டால்பி அட்மோஸ் சவுண்ட் உள்ளது.
இந்த டிவி ஆண்ட்ராய்டு டிவி மென்பொருள் சார்ந்த கூகுள் டிவி யுஐ கொண்டிருக்கிறது. இத்துடன் கூகுள் அசிஸ்டண்ட், பில்ட்-இன் க்ரோம்காஸ்ட், ஆப்பிள் ஏர்பிளே, ஆப்பிள் ஹோம்கிட் வசதி, HDMI 2.1, 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
சோனி X95K மினி எல்இடி டிவி சீரிஸ் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 8 லட்சத்து 99 ஆயிரத்து 990 ஆகும். ஆனால் பெஸ்ட் பை சலுகையின் கீழ் இந்த டிவி ரூ. 6 லட்சத்து 99 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை சோனி செண்டர் ஸ்டோர் மற்றும் முன்னணி சில்லறை விற்பனை கடைகளில் நடைபெறுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்