search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பகர் சமான்"

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 336 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 337 ரன்கள் எடுத்து வென்றது.

    ராவல்பிண்டி:

    நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 336 ரன்கள் சேர்த்தது. டேரில் மிட்செல் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 129 ரன்னில் அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரர் சாட் பவுஸ் அரை சதமடித்து 51 ரன் சேர்த்து ஆட்டமிழந்தார். கேப்டன் லாதம் 98 ரன்னில் வெளியேறினார்.

    பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராப் 4 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் கடந்த ஆட்டத்தைப் போலவே சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 180 ரன்கள் குவித்தார். பாபர் அசாம் 65 ரன்னில் அவுட்டானார்.

    கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய முகமது ரிஸ்வான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், பாகிஸ்தான் 48.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் 2-0 என பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது. ரிஸ்வான் 54 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    ஆட்ட நாயகன் விருது பகர் சமானுக்கு அளிக்கப்பட்டது.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 288 ரன்கள் எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 291 ரன்கள் எடுத்து வென்றது.

    ராவல்பிண்டி:

    நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடர் 2-2 என சமனிலையில் முடிந்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 288 ரன்கள் சேர்த்தது. டேரில் மிட்செல் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 115 ரன்னில் அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரர் வில் யங் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 86 ரன் சேர்த்து ஆட்டமிழந்தார்.

    பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹரிஸ் ராப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் சிறப்பாக ஆடி சதமடித்து 117 ரன்னில் வெளியேறினார். இமாம் உல் ஹக் 60 ரன்னிலும், பாபர் அசாம் 49 ரன்னிலும் அவுட்டாகினர்.

    கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய முகமது ரிஸ்வான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், பாகிஸ்தான் 48.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் 1-0 என பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது. ரிஸ்வான் 42 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    ஆட்ட நாயகன் விருது பகர் சமானுக்கு அளிக்கப்பட்டது.

    • டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் உஸ்மான் காதிர் காயம் காரணமாக விலகினார்.
    • அவருக்கு பதில் பகர் சமான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    லாகூர்:

    டி 20 உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கிடையே, டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் காதிர் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் அவர் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடவில்லை.

    இந்நிலையில், காயம் காரணமாக விலகியுள்ள உஸ்மான் காதிருக்கு பதிலாக பகர் சமான் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 314 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய நெதர்லாந்து 298 ரன்கள் எடுத்து போராடி தோற்றது.

    ரோட்டர்டாம்:

    நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    ரோட்டர்டாம் நகரில் நேற்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் சதமடித்து அசத்தினார். அவர் 109 ரன்னில் அவுட்டானார். கேப்டன் பாபர் அசாம் 74 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அதிரடியாக ஆடிய ஷதாப் கான் 28 பந்தில் 48 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து களமிறங்கியது. எளிதில் வெற்றி பெறலாம் என நினைத்த பாகிஸ்தான் அணிக்கு நெதர்லாந்து வீரர்கள் சவாலாக ஆடினர்.

    கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 71 ரன்னும், தொடக்க ஆட்டக்காரர் விக்ரம்ஜித் சிங் மற்றும் டாம் கூப்பர் தலா 65 ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.

    இறுதியில், நெதர்லாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது பகர் சமானுக்கு அளிக்கப்பட்டது.

    ×