search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீ.கே.புதூர்"

    • ராஜபாண்டி கல்யாணி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. கூலி தொழிலாளி
    • கடந்த 3-ந் தேதி கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது

    ஆலங்குளம்:

    வீ.கே.புதூர் அருகே உள்ள ராஜபாண்டி கல்யாணி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. கூலி தொழிலாளி.

    இவரது மனைவி மகாதேவி (வயது25). இவர்களுக்கு சுதர்சன் (2½) என்ற மகனும் 10 மாதத்தில் இசையரசி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3-ந் தேதி கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    பின்னர் திடீரென மகாதேவி மற்றும் 2 குழந்தைகள் மாயமாகினர்.

    இது தொடர்பாக சங்கரன்கோவில் அருகே உள்ள கீழநீலிதநல்லூரில் உள்ள மகாதேவியின் தந்தை பேச்சுமுத்து வீ.கே.புதூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாதேவி எங்கு சென்றார்? அவரை யாரேனும் கடத்தி சென்றார்களா? என விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    • கருப்பசாமி அப்பகுதியில் அடிதடி, கொலை முயற்சி, கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
    • கலெக்டர் ஆகாஷ், செல்வமுருகனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. ( வயது 23). இவர் அப்பகுதியில் அடிதடி, கொலை முயற்சி, கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.

    கைது

    இதனையடுத்து இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் அறிவுறுத்தியதன் பேரில், மாவட்ட கலெக்டர் ஆகாஷ், கருப்பசாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    அதன்படி இன்ஸ்பெக்டர் சுதந்திர தேவி தலைமையிலான போலீசார் கருப்பசாமியை கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

    ஊத்துமலை

    இதேபோல் ஊத்துமலை பகுதியில் கடந்த மாதம் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வீராணம் காமாட்சி அம்மன் கோவில் தெருவை செல்வமுருகன் (30) என்பவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைந்தார்.

    அதன்பேரில் கலெக்டர் ஆகாஷ், செல்வமுருகனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி இன்ஸ்பெக்டர் சுரேஷ் செல்வமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தார்.

    ×