என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண் கார்டு சாவு"
- கொடியை காட்டிய போது பரிதாபம்
- ரெயில்வே போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த சிவதாஸ் என்பவருக்கும் மினிமோல் (வயது 36) ஆகிய இருவருக்கும் கடந்த 19 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மேலும் இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் மினிமோல் கடந்த ஒன்றரை வருடங்களாக ஜோலா ர்பேட்டை பகுதியில் உள்ள கே. கே. சி. நகர் பகுதியில் தனியாக வாடகை வீடு எடுத்து வசித்து வந்தார். மேலும் இவர் ஜோலார்பே ட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே கார்டாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இவர் நேற்று காலை அசாம் மாநிலம் கவுகாத்தி ரெயில் நிலையத்திலிருந்து கர்நாடக மாநிலம் பையப்பனஹள்ளி ரெயில் நிலையம் வரை செல்லும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை அருகே உள்ள திருவெற்றியூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வரை வண்டியின் கார்டாக பணியில் இருந்தார்.
நேற்று மதியம் ெரயில் குடியாத்தம் - வளத்தூர் ரெயில் நிலையங்க ளுக்கிடையே வந்து கொண்டிருக்கும்போது அருகே மினிமோல் பச்சைக் கொடியைக் காட்ட முயன்ற போது கார்டு பெட்டியில் இருந்தவர் கொடியுடன் தவறி கீழே விழுந்து தலை உடைந்து மூளை சிதறி சம்பவம் இடத்திலேயே பலியானார்.
என்ஜின் டிரைவருக்கு ரெயில்வே கார்டு மூலம் வாக்கி டாக்கியில் எந்தவித தகவலும் கிடைக்காததால் ரெயில் என்ஜின் டிரைவர் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் ரெயில் நிலையத்தில் ரெயிலை நிறுத்தி பச்சகுப்பம் ரெயில் நிலையம் மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் ரெயில்வே கார்டை தேடிச் சென்ற போது 2 கிலோ மீட்டர் தொலைவில் அவர் பிணமாக கிடந்தது தெரியவந்தது. பின்னர் பச்சகுப்பம் ெரயில் நிலையத்திலிருந்து மாற்று ரெயில்வே கார்டு ரேணிகுண்டா பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி என்பவரை பணியில் அமர்த்தி ரெயிலை இயக்கி சென்றனர்.
இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலிஷ் இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்