search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதைப் பொருள் விழிப்புணர்வு"

    • 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்
    • கல்லூரி மாணவர்கள் ஏராளானோர் பங்கேற்பு

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை குறித்து கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள் சார்பில் போலீசார் பொதுமக்களுக்கும் கடை உரிமையாளருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இது மட்டுமல்லாமல் திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு தனி படை பிரிவினர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டு போதை பொருட்களை விற்கும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு அவர்கள் விற்பனைக்கு வைத்துள்ள கஞ்சா, ஹான்ஸ், பான் மசாலா, மது பாட்டில்கள், கள்ள சாராயம் உள்ளிட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நாட்டறம்பள்ளி அருகே எல்லப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று மாலை போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமை தாங்கி பேசினார். அப்போது தங்கள் வசிக்கும் பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனை செய்தால் எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தெரிவிக்க துண்டு பிரசுரத்தில் இருக்கும் தொலைபேசி எண்ணை 24 மணி நேரம் முழுவதும் தொடர்பு கொள்ளலாம். மேலும் போதைப் பொருட்களின் தீமை குறித்து எடுத்துக் கூறி அடுத்த தலைமுறையை காக்க உங்களிடமிருந்து இந்தப் பணி துவங்கட்டும். இதனால் அனைத்து தரப்பு மக்களும் சமுதாயத்தில் இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லாதவாறு தடுக்க எங்களுக்கு உதவி புரிய வேண்டும் என கூறினார்.

    மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம், தனிப்பிரிவு ஏட்டு செந்தில் பள்ளி முதல்வர் பாஸ்கர் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • குழந்தை திருமண தடுப்புச் சட்டம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு, சைபர் கிரைம் மற்றும் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.

    திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தர வின்பேரில், வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் அறிவுறுத்தலில் நாட்டறம்பள்ளி அருகே எல்லப்பள்ளி பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் போதை பொருள் தடுப்பு, சைபர் கிரைம் மற்றும் குழந்தைகள் திருமண தடுப்பு சட்டம் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் ஆகியோர் தலைமை தாங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் போலீசார் என பலர் கலந்து கொண்டனர்.

    விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் தெரிவித்த 3 மாணவ மாணவிகளுக்கு இன்ஸ்பெக்டர் தனது சொந்த செலவில் ரொக்க பரிசு வழங்கினார்.

    ×