search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுவர்"

    • உள்ளே நுழையும் போது பாலத்தின் கைப்பிடி சுவரில் மூன்று தூண்கள் இடிந்த நிலையில் காணப்படுகிறது.
    • லாரி பின்னோக்கி வந்த போது இடித்து இது போன்ற நிலை ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    பூதலூர்:

    கல்லணையில்உள்ள கொள்ளிடம் ஆற்றில் தஞ்சை -திருச்சி மாவட்டங்களை இணைக்கும் வகையில் புதிதாக பாலம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது.1052 மீட்டர் நீளம்கொண்ட இந்த பாலம் 12.90 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து இந்த பாலத்தின் வழியாக திருச்சி -தஞ்சை மாவட்டங்களுக்கு கனரக வாகனங்கள, இலகுரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் திருச்சி தஞ்சை இடையே ஏராளமான வாகன போக்குவரத்து இந்த பாலத்தின் வழியே நடைபெற்று வருகிறது.

    லாரிகள், வேன்கள், சுற்றுலா பஸ்கள், கார்கள், சென்று வந்தாலும் இன்னமும் பொது போக்குவரத்து இந்த சாலை இந்த பாலத்தின் வழியாக செயல்படுத்தப்படவில்லை.

    விரைவில் திருச்சி தஞ்சை போக்குவரத்து கழகங்களில் வழியாக இந்த பாலத்தின் வழியாக போக்குவரத்து துவங்கும் என்றுஎதிர்பா ர்க்கப்படுகிறது.இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து உள்ளே நுழையும் போது பாலத்தின் கைப்பிடி சுவரில் மூன்று தூண்கள் இடிந்த நிலையில் காணப்படுகிறது.

    இந்த பாலத்தின் வழியாக மணல் லாரிகள் அதிக அளவில் சென்று கொண்டிருந்தபோது மோதியதாக கூறுகின்றனர். இடையிலுள்ள நடை மேடையில் எந்த பழுதும் இல்லாமல் கைப்பிடி சுவர் தூண்கள் மட்டும் இடிந்த நிலையில்உள்ளதால் இதுபோன்று நிகழ்வதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறுகின்றனர். ஏதாவது லாரி பின்னோக்கி வந்த பொழுது இடித்து இது போன்ற நிலை ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இடிந்த பகுதியில் சீர் செய்யப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது இந்த பகுதி வழியாக செல்வோர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அதுமட்டுமல்லாமல் இந்த பாலத்தில் உள்ள மின் விளக்குகள் எதுவும் இரவு நேரங்களில் எரிவதில்லை என்றும் இதனால் பாலத்தின் நடைமேடைமது அருந்தும் இடமாக உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். கல்லணை கொள்ளிடம் பாலத்தில் இடிந்த கைப் பிடிச் சுவரை சீரமைத்து, மின்விளக்குகளை ஒளிர செய்ய வேண்டும் என சமூகஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ×