என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நானி"
- தற்போது படத்தின் சூட்டிங் மும்பையில் நடைப்பெற்று வருகிறது. நேற்று அமிதாப் பச்சனுடன் ரஜினிகாந்த் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகியது.
- 33 வருடங்களுக்கு பிறகு அமிதாப் பச்சன் ரஜினிகாந்துடன் இணைந்து படத்தில் நடிகவுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சுவாரியர், ராணா டகுபதி, ரித்திகா சிங், பகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் வேட்டையன் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்படத்தை டிஜே ஞானவேல் இயக்கியுள்ளார். தற்போது படத்தின் சூட்டிங் மும்பையில் நடைப்பெற்று வருகிறது. நேற்று அமிதாப் பச்சனுடன் ரஜினிகாந்த் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகியது.
33 வருடங்களுக்கு பிறகு அமிதாப் பச்சன் ரஜினிகாந்துடன் இணைந்து படத்தில் நடிகவுள்ளார். அமிதாப் பச்சன் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை தொடர்ந்து டிஜே ஞானவேல் அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் படம் இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக வேட்டையன் படத்தில் வரும் ராணா கதாப்பாத்திரத்திற்கு நானியை அணுகியுள்ளார் கால்ஷீட் பிரச்சனைகளால் அவரால் வேட்டையன் படத்தில் நடிக்க முடியவில்லை. அப்போது அவர் நானிக்கு ஒரு கதையை கூறியதாகவும் அது அவரை மிகப் பெரிய அளவில் கவர்ந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடைசியாக இவர் பேமிலி ஸ்டார் திரைப்படத்தில் நடித்திருந்தார். பரசுராம் பெட்லா இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.
- அதைத்தொடர்ந்து விஜய் தேவரகொண்டா தன்னுடைய 12-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் கீத கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த சில படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை.
அந்த வகையில் கடைசியாக இவர் பேமிலி ஸ்டார் திரைப்படத்தில் நடித்திருந்தார். பரசுராம் பெட்லா இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.
அதைத்தொடர்ந்து விஜய் தேவரகொண்டா தன்னுடைய 12-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கௌதம் தினனுரி இயக்கி வருகிறார். சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். க்ரிஷ் கங்காதரன் இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கவுதம் தினனுரி இதற்கு முன் நானி நடிப்பில் வெளிவந்த ஜெர்ஸி திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்ஷன் காட்சிகளுக்கு பெயர் போன அன்பறிவு மாஸ்டர் இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளை கையாளுகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி இந்த படம் கைதி படத்தை போல் பாடல்களே இல்லாத படமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. விறுவிறுப்பான இந்த கதைக்கு பாடல்கள் தேவைப் படாததால் இந்த முடிவை படக்குழு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இதில் அனிருத்தின் பின்னணி இசை மிரட்டலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வசூல் ரீதியாகவும் தசரா படம் நல்ல பெயரை பெற்றது.
- எஸ்.எல்.வி. சினிமாஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
நானி, கீர்த்தி சுரேஷ் , சமுத்திரகனி, டாம் சாக்கோ போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து அறிமுக இயக்குநரான ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தசரா. தசரா படம் மக்களிடையே மிக நல்ல வரவேற்பை பெற்றது. நானியின் புதிய ரக்கட் தோற்றம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் தசரா படம் நல்ல பெயரை பெற்றது.
தசரா படத்திற்கு பிறகு நானி சௌரவ் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த ஹை நானா படத்தில் நடித்தார். மிருணாள் தாகூர் இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். நானி மற்றும் மிருனாள் தாகூர் ஜோடி மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது. ஹை நானா படம் வசூலில் மிகப்பெரிய வசூலை அள்ளியது.
இந்நிலையில் நானியின் 33 ஆவது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தசரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஸ்ரீகாந்த் ஒடேலாவுடன் மீண்டும் இணைகிறார் நானி. எஸ்.எல்.வி. சினிமாஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளது.
தசரா படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கபடுகிரது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நானி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஹாய் நான்னா’.
- இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி நடித்துள்ள திரைப்படம் 'ஹாய் நான்னா'. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்துள்ளார். அப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ஹசம் அப்துல் இசையமைத்துள்ளார்.
வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. 'ஹாய் நான்னா' திரைப்படம் டிசம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
ஹாய் நான்னா போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஹாய் நான்னா' திரைப்படம் ஜனவரி 4-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.
Hi. Meetho eppudu undipodaaniki vacchesaaru Yashna, Mahi, and Viraj. ?
— Netflix India South (@Netflix_INSouth) December 30, 2023
Hi Nanna, streaming from 4th January in Telugu, Tamil, Malayalam, Kannada and Hindi on Netflix. ???#HiNannaOnNetflix pic.twitter.com/pbDnNaf19M
- இயக்குனர் விவேக் ஆத்ரேயா புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
- இதில் நடிகர் நானி கதாநாயகனாக நடிக்கிறார்.
தெலுங்கில் முன்னணி நடிகரான நானி வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தற்போது 'அடடே சுந்தரா' இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் 'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதில், நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் இணைந்துள்ளார். மேலும், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டிடிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இதில் நானி மற்றும் பிரியங்கா மோகன் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
Back in action! ?#SaripodhaaSanivaaram shoot resumes today with a pivotal moments between Natural ? @NameIsNani and @priyankaamohan ❤️?@iam_SJSuryah #VivekAthreya @JxBe @muraligdop @karthikaSriniva @IamKalyanDasari @DVVMovies pic.twitter.com/YKehyHYzF6
— DVV Entertainment (@DVVMovies) December 27, 2023
- 'ஹாய் நான்னா' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
- இப்படம் டிசம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி நடிக்கும் திரைப்படம் 'ஹாய் நான்னா'. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் இணைந்துள்ளார். அப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ஹசம் அப்துல் இசையமைக்கிறார். வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
'ஹாய் நான்னா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டிசம்பர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து நடிகர் நானி சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
இந்நிகழ்வினில் நடிகர் நானி பேசியதாவது, 'நான்னா' திரைப்படம் மிக அழகான படம். படத்தை முழுதாகப் பார்த்த பிறகு சொல்கிறேன், இந்தப்படம் எனக்கு பெருமை தரும் படம். டிசம்பர் 7 திரையரங்குகள் கொண்டாடும் படமாக இது இருக்கும். ஒரு காதல் படம், ஆனால் பரபரவென போகும் கதை என கண்டிப்பாக உங்கள் மனதில் இடம்பிடிக்கும் படமாக இருக்கும். தமிழில் நான் நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து எப்போதும் எனக்கு ஆதரவு தந்து வருகிறீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள். இது ஒரு முறை பார்க்கும் படமாக இருக்காது, மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கும் படைப்பாக இருக்கும் என்றார்.
மேலும் அவர் பேசியதாவது, அம்மா செண்டிமெண்ட், அப்பா செண்டிமெண்ட் என பிரிக்க முடியாது. அன்பு ஒன்று தான். அம்மா படங்கள் எல்லாம் நிறைய வந்துவிட்டன. இப்போது அப்பா படங்கள் வர ஆரம்பித்துள்ளன. அது நல்லது என்றே நினைக்கிறேன். எனக்கு தமிழ் படங்கள் ரொம்பப் பிடிக்கும். மணிரத்னம் சார், கமல் சார் படங்களின் தீவிர ரசிகன் நான். ஆனால் தமிழ் முழுமையாக பேச வராது, இப்போது கற்றுக்கொண்டிருக்கிறேன். விரைவில் பேச முடியும் என நம்புகிறேன்.
ஆரம்பத்தில் தமிழ் இயக்குனர்களோடு வேலை பார்த்தேன். ஆனால் அதை இங்குள்ள மக்கள் தெலுங்குப் படமாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். தெலுங்கு மக்கள் தமிழ்ப் படமாக பார்க்க ஆரம்பித்தார்கள். பின்னர் 'பாகுபலி', 'காந்தாரா' போன்ற படங்கள் வந்த பிறகு தமிழ் நடிகர், தெலுங்கு நடிகர் என்று பிரித்து பார்த்து படம் எடுக்க தேவையில்லை, சொல்லும் கதைக்கு உண்மையாக இருந்தால் போதும் அது மக்களிடம் போய்ச் சேரும் எனப் புரிந்தது. எனவே தான் நான் கதைகளுக்கு முக்கியத்துவம் தருகிறேன். தமிழ், தெலுங்கு எனப் பிரித்து வைக்க தேவையில்லை, என் எல்லாப் படங்களும் இங்கு தமிழில் வரும்.
நடிகை மிருணாள் இந்தப் பாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று மொத்த டீமும் நினைத்து தான் தேர்வு செய்தோம், அதை அவர் அற்புதமாக செய்துள்ளார். ஒரு மிகச்சிறந்த தமிழ் இயக்குனர், எனக்குப் பிடித்தவர், அவர் எனக்காக ஒரு கதை சொன்னார், விரைவில் அப்படம் பற்றிய அறிவிப்பு வரும்.
எனக்கு இந்தப்படத்தில் சவாலாக இருந்தது என்னவெனில், நான் ஏற்கனவே 'ஜெர்ஸி'யில் அப்பாவாக நடித்துவிட்டேன். அது மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர். மீண்டும் அதே போல் ஆனால் அதிலிருந்து மாறுபட்டு நடிப்பது தான் சவாலாக இருந்தது.
முன்னர் எல்லாம் முத்தக் காட்சியில் திரை இருட்டாகிவிடும், 2023-ல் கிஸ் பெரிய விஷயம் இல்லை. இங்கு கல்யாணம் ஆனவர் இருப்பீர்கள், மனைவியை முத்தம் கொடுக்காமல் யாராவது இருப்பார்களா? முன்னர் மாதிரி மரத்தை சுற்றுவது, பூவைக் காட்டுவது என்று இப்போதைய ஆடியன்ஸை ஏமாற்ற முடியாது. முத்தத்தை திரையில் காட்டலாம் தவறில்லை.
நம் வாழ்க்கையில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள், படத்தில் மட்டும் ஏன் இருக்கக்கூடாது? என் படத்தில் அவர்கள் பெரிய இடம் வகிப்பது எனக்கு மகிழ்ச்சி. இந்தப்படம் ஆண்- பெண் உறவை மிகச்சிறப்பாக பேசும் படமாக இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் சிறப்பான படைப்பாக இருக்கும் என்று பேசினார்.
- நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் இணைந்துள்ளார்.
- இப்படத்தின் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியானது.
இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி நடிக்கும் திரைப்படம் 'ஹாய் நான்னா'. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் இணைந்துள்ளார். அப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ஹசம் அப்துல் இசையமைக்கிறார். வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
ஹாய் நான்னா போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது பாடலான 'மையல்'பாடலின் லிரிக் வீடியோ வருகிற 4-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
This one ♥️♥️♥️#Ammaadi on 4th :)#HiNanna pic.twitter.com/1KWhRJ16Ll
— Nani (@NameisNani) October 30, 2023
- இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
- இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தெலுங்கில் முன்னணி நடிகரான நானி வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நானியின் 31-வது படத்தை 'அடடே சுந்தரா' இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். இதில், நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் இணைந்துள்ளார். மேலும், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சூர்யாவின் சனிக்கிழமை போஸ்டர்
டிடிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'சூர்யாவின் சனிக்கிழமை' என்று படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளது. நானி கையில் விலங்குடன் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
#சூர்யாவின்சனிக்கிழமை#Nani31 is #SuryavinSanikizhamai
— DVV Entertainment (@DVVMovies) October 23, 2023
UNCHAINED Glimpse https://t.co/cQ9XilEreK
Natural ? @NameisNani @iam_SJSuryah #VivekAthreya @priyankaamohan @JxBe @muraligdop @karthikaSriniva @Vinciraj_NC @IamKalyanDasari @DVVMovies #Nani31#SaripodhaaSanivaaram pic.twitter.com/vmXTBbYIU3
- நடிகர் நானி 'ஹாய் நான்னா' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.
தெலுங்கில் முன்னணி நடிகரான நானி வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தற்போது இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் 'ஹாய் நான்னா' திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ஹசம் அப்துல் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
நானி 31 போஸ்டர்
இதைத்தொடர்ந்து நடிகர் நானியின் 31-வது படத்தை 'அடடே சுந்தரா' இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். இந்த படத்தை டிடிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.
- நடிகர் நானி 'ஹாய் நான்னா' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.
தெலுங்கில் முன்னணி நடிகரான நானி வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தற்போது இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் 'ஹாய் நான்னா' திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ஹசம் அப்துல் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து நடிகர் நானியின் 31-வது படத்தை 'அடடே சுந்தரா' இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். இந்த படத்தை டிடிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் நடிகை பிரியங்கா மோகன் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.
நானி 31 போஸ்டர்
சூர்யா நடிப்பில் வெளியான 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தில் பிரியங்கா மோகன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Welcome aboard, @priyankaamohan! ❤️
— DVV Entertainment (@DVVMovies) October 21, 2023
Can't wait to see you on the set soon! ?#Nani31
Natural? @NameIsNani #VivekAthreya @DVVMovies pic.twitter.com/BYly81zZ3g
- நானி நடித்துள்ள திரைப்படம் ‘ஹாய் நான்னா’.
- இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி நடிக்கும் திரைப்படம் 'ஹாய் நான்னா'. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் இணைந்துள்ளார். அப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ஹசம் அப்துல் இசையமைக்கிறார். வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
ஹாய் நான்னா போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகியுள்ள இந்த டீசரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 'ஹாய் நான்னா' திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் இணைந்துள்ளார்.
- இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி நடிக்கும் திரைப்படம் 'ஹாய் நான்னா'. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் இணைந்துள்ளார். அப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ஹசம் அப்துல் இசையமைக்கிறார். வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
ஹாய் நான்னா போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஹாய் நான்னா' திரைப்படத்தின் டீசர் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. 'ஹாய் நான்னா' திரைப்படம் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
I trust you
— Nani (@NameisNani) October 12, 2023
You trust me …
Will be magic ♥️#HiNanna Teaser on 15th :) pic.twitter.com/nki2a0ib4O
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்